You Are Here: Home » Videos » நடிகர் சங்க விழாவில் சூப்பர் ஸ்டாரின் உரை - வீடியோ

டந்த சனிக்கிழமை கலைஞர் குழும சேனல்களுக்கு  TRP (Television Rating Points) ரேட்டிங் எக்கச்சக்கமாக எகிறிவிட்டது. காரணத்தை கூறவும் வேண்டுமா?

ஒரு பக்கம் கலைஞர் டி.வி.யில் சூப்பர் ஸ்டார் பங்கேற்ற நடிகர் சங்க விழா இன்னொரு பக்கம் கலைஞர் செய்திகளில் சூப்பர் ஸ்டார் திமுக தலைமை நிலையமான அறிவாலயத்திற்கு வந்தது பற்றிய செய்தி.

டிகர் சங்க விழா நாடகம் அது இது என்று பார்ப்போரை நெளிய வைத்துகொண்டிருக்க, கலைஞர் செய்திகளை திருப்பியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. சூப்பர் ஸ்டாரின் அரசியல் எண்ணம் பற்றிய செய்தி SCROLLING ஓடிக்கொண்டிருந்தது.

என்னடா என்று ஆச்சரியமாக பார்த்தால், தலைவர் அறிவாலயம் விசிட்டை காண்பித்தார்கள்.

எனக்கு தெரிந்து சூப்பர் ஸ்டார் அறிவாலயத்திற்கு இது போன்ற நிகழ்ச்சிக்கு வருவது இது தான் முதல் முறையாக இருக்கும். (மேயர் மா.சுப்பிரமணியன் இல்லத் திருமண விழாவிற்கு சமீபத்தில் வந்திருந்தார். ஆனால் அது ஒரு private நிகழ்ச்சி).

கலைஞர் செய்திகள் மற்றும் கலைஞர் டி.வி. என என் ரிமோட் மாறிக்கொண்டேயிருந்தது.

இதோ வீடியோ நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பு உங்களுக்காக.

(நன்றி: நவீன்)

Video Clip 1

Video Clip 2

END]

14 Responses to “நடிகர் சங்க விழாவில் சூப்பர் ஸ்டாரின் உரை - வீடியோ”

 1. S.Vijay S.Vijay says:

  Thanks again Sundar. Watch this clip @ the 8th minute.
  http://www.youtube.com/watch?v=08tUR_JYXrY&fe...

 2. sriram sriram says:

  Sundar: It is a pleaseure to see thalivar speech. Very simple but extremely articulate. The way he said that body can get old but not mind was amazing The one thing I did not like was apologising to people at the end if he had said something wrong.

  Cannot wait for Endhiran countdown.

  ————————————————
  He has reasons for that. Will tell you in separate post.
  - Sundar

 3. சக கலைஞர்களை, அதுவும் தன்னை ஒரு காலத்தில் சீண்டிப்பார்த்த விஜயகாந்த் போன்றோரையும் மனமார மறக்காமல் பாராட்டும் பெருந்தன்மை..!

  செல்வாக்கு இருந்தால் எங்கே என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று பலர் ஆடுகையில், ‘நான் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்’ என்னும் பணிவு..!!

  ‘தங்கத்தட்டில் தேங்காய் விற்காதே’ என்று உள்ளதை வெளிப்படையாக சொல்லும் நேர்மை…!!

  புரியாத வார்த்தைஜாலங்கள் காட்டி ‘இவர் பெரும் அறிவாளி’ என்னும் பேர் வாங்கத்தெரியாமல் மனதில் உள்ளதை சரளமாக பேசும் வெள்ளை உள்ளம்…!!

  தலைவா, உன்னிடம் இருக்கும் நற்பண்புகளை கற்று நடக்கவே வாழ்நாள் போதாதே… இனியும் எங்களுக்கு வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்க என்ன உள்ளது…? இதுவே எங்கள் ஆயுசுக்கு போதும்…

  ————————————
  அட அசத்துறீங்க சூர்யா… சபாஷ்…
  - சுந்தர்

 4. murugan murugan says:

  இந்த நிகழ்ச்சியில் தலைவர் உரை நிகழ்த்துவதற்கு முன்பாக அதாவது அவரை மேடைக்கு பேச அழைக்க ஒருவர் பேசுவார் அப்போது அவர் "இந்த விழாவின் சிறப்பு விருந்தினர் " என தொடங்குவார், அவர் அவ்வாறு தொடங்கி முடிப்பதற்குள் தலைவர் மின்னல் போல் தனது இருக்கையை விட்டு புறப்பட்டு அடுத்தநொடி உரைநிகழ்த்த தொடங்குவார்
  தலைவர் எது செய்தாலும் அது தனி அழகுதான் - தலைவர் தனது உரையில் வாழ்க்கைத்தத்துவத்தையும், வாழ்வின் யதார்த்தங்களையும் , வாழ்கையில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் மிகவும் எளிய முறையில் சர்வ சாதாரணமாக கூறினார்

  தலைவர் அதோடு மட்டும் இருந்துவிடாமல் கலைஞர்கள் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளையும், அதை எங்ஙனம் பயன்படுத்தவேண்டும் என்பதையும் கூறி கலைஞர்களுக்கு ஒரு நல்ல வழியையும் காட்டியுள்ளார் - தலைவர் எப்போதுமே எந்த விசயத்திலும் மிஸ்டர் ரைட் தான்
  இன்னொரு விசயத்தையும் கவனித்தோமேய்யானால் நடிகர் சங்க கடனை கஷ்டப்பட்டு அடித்தவர்களை பட்டியலிடும் போது விஜயகாந்தின் பெயரை முதலில் குறிப்பிட்டு என்றைக்குமே பழசை மறக்கக்கூடாது என்றும் கூறினார் - ஒரு முன்னாள் நடிகர் சங்க தலைவர் என்ற முறையில் விஜயகாந்தின் பெயரை யாருமே ஒரு சம்ப்ரதாயத்திருக்குக்கூட கூறாத நிலையில் நமது தலைவர் அவரின் பெயரை முதலில் குறிப்பிட்டு அவரை நினைவு கூர்ந்தார்
  என்ன ஒரு உயர்ந்த குணம் - எப்பேர்பட்ட மனிதர் - இப்படி ஒரு நல்ல மனிதரை யாருக்குத்தான் பிடிக்காது -

  ஆனால் ஒரு சிலர் இன்னமும் திருந்துவதாக தெரியவில்லை - அவர்கள் எல்லோருக்கும் தலைவர் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை - நமது தலைவரின் சார்பில் அந்த காலம் அவர்கள் எல்லோருக்கும் பதில் கூறும் - அன்றாவது தலைவரை பற்றி அவர்கள் உணர்வார்கள் என்று நம்புவோம் - இல்லாவிடில் சரித்திரத்தில் அதர்மத்துக்கு நேர்ந்த கதி தான் அவர்களுக்கும்
  தலைவரின் தொலைகாட்சி உரையை வழங்கி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியமைக்கு மிக்க நன்றி

 5. subash subash says:

  இந்த நிகழ்ச்சியில் மனோரமா உரை யாடும் போது ரஜினி வந்தால் போதும் பணம் சம்பாதிக்கலாம் நல்ல collection வரும் என்று கூறினர் ….. அதற்காக தான் தலைவரை கூப்டாங்க போல …useless aachi

  பேஸ தெரியாத ஆச்சி ….

 6. subash subash says:

  pls tell me anybody .. when jaya tv going to telecast the thalaivar program …thailaivar with old heroes

 7. k s amarnath k s amarnath says:

  sundar sir it's really a long time since I saw a endhiran news in english really I am missing so many valuable information from u sir

 8. harisivaji harisivaji says:

  மேடை பேச்சுக்கு என்று இபோ தலைவர் தனி இலக்கணமே வகுத்துவிட்டார் முன்பெல்லாம் எதுகை மோனை மற்றும் கொர்வையையாக பேசினால் சிறந்த பேச்சாளர்கள கருதபட்டார்கள் இபோ தலைவர் பேசறதுல கூட தனி stylea உருவாக்கி கலக்க ஆரமிசுட்டாறு …
  பேசுறப்ப அவரு வாய் மட்டும் இல்ல கை விரல்கள் கூட பேசும்
  அதும் அந்த சிரிப்பு இருக்கே ….
  எவனும் ….சான்சே இல்ல
  அதும் அந்த அடக்கம் , தனக்கு ஏற்பட்ட அவாமனத்தை மறைக்காமல் வெளிபடையா பேசுவது , தன்னை சீண்டும் விஜயகாந்த்கு நன்றி தெரிவுக்கும் பாங்கு , கடைசியா கலைஞர்களுக்கு ஒரு வழி யையும் காண்பித்து ….இன்னும் எவளவோ
  உண்மைலே திருவள்ளுவர் இருந்தால் எனது உண்மயான சீடன் என்று ரஜினிய தான் சொல்லிருபாரு அந்த அளவுக்கு அவரது குரலுக்கு ஏற்றாற்போல் வாழ்ந்து காட்டுகிறார்

  ——————————————
  //உண்மைலே திருவள்ளுவர் இருந்தால் எனது உண்மயான சீடன் என்று ரஜினிய தான் சொல்லிருபாரு //
  Adi dhool
  - Sundar

 9. Sharath Sharath says:

  Sundar, thanks for sharing this video with us !

 10. ஆச்சி மட்டும் இல்லை; ராதாரவி பேசும்போது கூட ரஜினி அவர்கள் starnights, விழாவுக்கு வந்தால் போதும் ஆயிரம் ரூ மாதத்திற்கு தர முடியும் என, ஏனெனில் மக்கள் என்னும் இந்திரன் உங்களிடம் தான் உள்ளது என்று விண்ணப்பம் வைத்தார் .

 11. syed syed says:

  முதல்வன் படம் வந்த நேரத்தில் விஜய்க்கு மீசை குட முளைக்கவில்லை 20படம் குட விசை நடித்து முடிக்கல எப்படி ஷங்கர் ஜீரணிக்கமுடியாத சைத்தியை சொன்னார் முதலில் இந்திரனை முடிங்க ஷங்கர் அப்புறம் விசையை வைத்து பிரதமராக நினைத்து ஒரு படம் பண்ணுங்க ஒ கே

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates