









You Are Here: Home » Gallery, Rajini Lead » கற்றோர் சபையில் கலியுக கர்ணன் - Exclusive Gallery!!
சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஏ.வி.எம். ராஜேஸ்வரி திருமண மஹாலில் கம்பன் கழகம் சார்பாக நடைபெற்ற ‘கம்பன் விழா’வில் கம்பராமாயணத்தை பற்றிய பட்டி மன்றத்தில் சூப்பர் ஸ்டார் கலந்துகொண்ட சிறப்பு புகைப்ப்படத் தொகுப்பு இது. வேறெங்கும் வெளிவராத புகைப்படங்கள் இவை.
புகழ்பெற்ற தமிழறிஞர்கள், சான்றோர்கள் பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் முழுநேரம் (சுமார் நான்கரை மணிநேரம்) பார்வையாளராக பங்கேற்று சிறப்பித்தார்.
இது பற்றி ஒரு ஒரு சிறப்பு பதிவை திரு.சுகி சிவம் அவர்களின் பேட்டியோடு நாம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தோம். நிகழ்ச்சியின் மற்ற புகைப்படங்களை விரைவில் தனி கேலரியாக தருவதாக சொல்லியிருந்தோம்.
இதோ அவை உங்கள் பார்வைக்காக.
சுவாரஸ்யத்திற்காக புகைப்படங்களுடன் நண்பர் ஈ.ரா. எழுதிய “தலைவா.. தலைவா…” நூலின் கவிதை வரிகளை அவர் அனுமதி பெற்று இங்கு தந்திருக்கிறேன். (கடந்த 2007 ஆம் ஆண்டு, சூப்பர் ஸ்டாரின் 58 வது பிறந்த நாளை முன்னிட்டு, நண்பர் ஈ.ரா. இந்நூலை வெளியிட்டார்.)
இங்கே இடம்பெற்றுள்ள புகைப்படங்களுக்கு இவ்வரிகள் பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன்.
நீ புகழ்ச்சி விரும்பாதவனாதலால்
இது உன்னைப் புகழ்வதற்காக
எழுதப்பட்டது அல்ல!
உன்னையே சுவாசிக்கும்
அன்பு நெஞ்சங்கள்
படித்து மகிழ்வதற்காக மட்டுமே
எழுதப்பட்டது..
உன் அங்கங்கள் -
ஒப்பில்லா தங்கங்கள் !
நேர்மை உன் இடக்கண் - நீதி உன் வலக்கண்
நீ இருக்கையிலே எமக்கேது இடுக்கண்?
உன்னிப்பாகக் கேட்கும் உன் காது - நீ
உப்பரிகையிலே இருக்கும் சாது!
உன் உதடுகள் துடிக்கும் போது -
எம் உணர்ச்சிக்கு நிகர்தான் ஏது?
அகண்ட உன் நெற்றி -
அது காட்டும் ஆயிரம் வெற்றி!
நிமிர்ந்து நிற்கும் உன் நெஞ்சம் - இதில்
நிம்மியளவும் இல்லை வஞ்சம்!
நெஞ்சிலே ஈரம் விஞ்சும் -
நீ வந்தால் இருக்கவே இருக்காது பஞ்சம்!
நீ
வீர மராட்டிய குடும்பத்தில் பிறந்து
கர்நாடகத்தில் வளர்ந்து
தமிழ் இதயங்களில் நுழைந்து
எல்லைகள் தாண்டி
எட்டுத்திக்கும் ஆள்பவன்!
தலைவனே - நீ
அகில உலகமும் பாராட்டினாலும்
அடக்கம் மாறாதவன்!
அறியாதவர்கள் உளரும்போதும்
அதிகம் பேசாதவன்!
தலைவனே,
உன்
இதயத்தின்
ஈரப்பதத்தை
எந்தக் கருவியாலும்
அளவிட முடியாது!
இன்றைய உலகம்
விளம்பரத்தையே விரும்பினாலும்
சத்தமில்லாமல் நீ செய்யும் சாகசங்கள்
சரித்திரத்தில் நிற்கத்தான் போகின்றன!
கொடுத்துச் சிவந்தனவாம் கரங்கள்!
நீதான் கொடுப்பதே பிறர்க்கு தெரியாதே? -
பின் எப்படி நாங்கள் கண்டு கொள்வது?
தலைவனே!
எங்கள் நரம்பு மண்டலத்தின்
நாலாபுறமும் நீ வசிக்கிறாய்!
எங்கள் இரத்த அணுக்களிலே நீ மிதக்கிறாய்!
எங்கள் தசைகளிலே நீ தவழ்கிறாய்!
எங்கள் எலும்பின் வலிமையாய் நீ வாழ்கிறாய்!
எங்கள் உறுப்புக்களிலே நீ உடனிருக்கிறாய்!
சுருக்கமாகச் சொன்னால் -
உச்சி முதல் பாதம் வரை
கோடானு கோடி இளைஞர்களின்
உயிர் மூச்சாய் நீ வாழ்கிறாய்!
ஆம்!
எங்களுக்குள்ளே நீ வாழ்கிறாய்!
உனக்குள்ளே நாங்கள் வாழ்கிறோம்!
———————————————————————
“தலைவா… தலைவா…” கவிதையின் முழு தொகுப்பிற்கு :
http://padikkathavan.blogspot.com/2008/12/blog-post_10.html
———————————————————————
[END]
இந்தப்பதிவையும் நண்பர் ஈ.ரா வின் அற்புதமான கவிதை வரிகளையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை. தலைவரையும் ரசிகர்களையும் சரியகப்புரிந்துகொண்டு எழுதப்பட்ட கவிதைக்கு பொருத்தமான புகைப்படங்கள். என் சார்பாகவும் ரசிகர்கள் சார்பாகவும் சுந்தர் மற்றும் ஈ.ரா வுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
அருமையான பதிவுகள்.சூப்பர் கமெண்ட்கள். தலைவர் ரசிகர்கள் என்றாலே அன்புதான்.
அற்புதம், உடல், மனது சிலிர்க்கிறது.
வாழ்த்துக்கள் ஈ. ரா, & நன்றி சுந்தர்
பாராட்டலாம்/ பாராட்டலாம் / பாராட்டிகொண்டயிருக்கலாம்
நான் கூட நண்பர் ஈ. ரா அனுமதி உடன் சில வரிகளை வரும் தலைவரின் பிறந்தநாளிற்கு பயன்படுத்தலாமா நண்பரே
யுவராஜ்
தலைமை மன்றம்
பான்டிச்செரி
————————————————-
மிக்க நன்றி.
நீங்கள் ஈ.ரா.வின் வரிகளை தாராளமாக பயன்படுத்தலாம்.
- சுந்தர்
மிக்க நன்றி திரு. சுந்தர்.
நன்றி
சுந்தர்..
உங்க லாங் வெயிட் நல்ல பலன்களை தந்து இருக்கிறது…
இந்த ஃபோட்டோஸ் மற்றும் அருமை நண்பர் ஈ.ரா.அவர்களின் பொருத்தமான வைர வரிகள் சேர்ந்து இந்த பதிவிற்கே ஒரு தனி நிறத்தை தந்து விட்டது….
பாராட்டுக்கள் சுந்தர்…
தலைவர் கூட நாகராஜன் ராஜா போயிருக்கார் போல இருக்கே… அந்த காவி வேட்டியில் இருப்பது நாகராஜன் ராஜா தான்…
இளைய கவி, அருமை நண்பர் ஈ.ரா. அவர்களுக்கு வைர வரிகளை வடித்ததற்காக ஒரு ஸ்பெஷல் ஷொட்டு…
நன்றி சுந்தர் ஜி…
அருமையான புகைப்படங்களை பெற்று இங்கே வெளியிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறீர்கள்..
படங்களுடன் நமது வரிகளையும் உபயோகித்திருப்பது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது..
உங்களுக்கும் வாழ்த்தும் நண்பர்களுக்கும் என் நன்றிகள் பல..
————யுவராஜ் says:
நான் கூட நண்பர் ஈ. ரா அனுமதி உடன் சில வரிகளை வரும் தலைவரின் பிறந்தநாளிற்கு பயன்படுத்தலாமா நண்பரே—————
சுந்தர்ஜி சொன்னது போல் தாராளமாக நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் தோழரே…
அன்புடன்
ஈரா
மிகவும் அற்புதமான பதிவு ,சுந்தர் உங்களின் சேவை எங்களுக்கு என்றும் தேவை ,வாழ்க நீர் வளமுடன்
ஈரா வின் வரிகள் அருமை
நாடி நரம்பு சத ரத்தம் புத்தி எல்லாத்துலயும் ரஜினி
ஊறி போன ஒருவரால தான் இப்படி எழுத முடியும்
தலைவர் வந்தவுடன் அங்கேயும் அரங்கம் அதிர்ந்திருக்கும் போல (அதிரவில்லை என்றால்தான் அது நியூஸ்). பட்டிமன்றத்தை ரசிப்பதைவிட தலைவரை தரிசிப்பதிலும் அவரின் அசைவுகளை ரசிப்பதிலும் பல பார்வையாளர்கள் மும்முரமாக இருப்பது தெரிகிறது. ஈ.ரா., பட்டையை கிளபுகிறீர்கள் போங்கள். அழகான, உண்மையான வரிகள். பார்ப்பதற்கு தலைவரை 'அதீதமாக புகழ்வது' போல் தெரிந்தாலும், கருத்து அனைத்துமே முற்றிலும் உண்மை. புகைப்படங்கள் மிகவும் துள்ளியம், அருமை. நன்றிகள் பல.
சுந்தர்,
அற்புதமான புகைப்படங்கள் மற்றும் அருமையான, அர்த்தமுள்ள ஈ.ரா. வின் வைர வரிகள் நல்ல பதிவு சுந்தர்…
காமேஷ்
Sundar and E.RAA. , These lines are awesome. harissivaji made me to watch Batcha movie again by his lines. Those are all true lines for 90% of Thalaivar fans.
சூப்பர் சுந்தர் ஜி ! அருமை..கவிதையும் போட்டோவும் செம கலக்கல்..படித்தேன் வியந்தேன்..
ஒரு குறை மட்டும் இருக்கிறது..
உன்னிப்பாகக் கேட்கும் உன் காது - நீ
உப்பரிகையிலே இருக்கும் சாது!
உன் உதடுகள் துடிக்கும் பொது -
எம் உணர்ச்சிக்கு நிகர்தான் ஏது?
பொது அல்ல போது - மூன்றாவது வரியில்
——————————
thanks. It will be corrected.
- Sundar
நண்பர் ஈராவிற்கு என் வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்கள் கவிதைகள் அல்ல அதனையும் தமிழ் கர்கண்டுகள். உங்கள் கவிதைக்கு நண்பர் சுந்தர் படங்கள் போட்டுஇருக்கும் விதம் ஒரு நல்ல எடிட்டர் என்பதை எடுத்துகாட்டுகிறது. என்னை போன்ற ரசிகர்கள் தலைவரை ரசிக்கிறோம் ஆனால் உங்களை போன்ற ரசிகர்கள் தலைவரை சுவசிக்கீறீர்கள்.
தரணி ஆளத்தான் நீ பிறந்திருக்கிறாய்.
பரணி பாடத்தான் நாம் பிறந்திருக்கிறோம்
ஓரணியில் நாம் திரண்டிருக்க
யார் இனி வந்திடுவார் நம்மை வெல்ல?
ஈராவின் கை தீண்டிய தமிழே ரஜினி என்ற
சீராளன் வாகை சூட நீ ஈன்ற வார்த்தைகள்
எந்நாளும் எங்கள் நெஞ்சாளும்.
————————————————
அட நீங்களே ஒரு கவிதை தொகுப்பு எழுதலாம் போலருக்கே… கலக்கல் வரிகள் சேகர் சார்…
- சுந்தர்
sunder sir,
Please see for the speech by ash. based on the news in read in a site i have given you the details earlier. but you are yet to approve the comment.
——————————————————
மன்னிக்கவும் நண்பரே. நீங்கள் கூறுவது போல ஐஸ்வர்யா ராய் பேட்டி எதுவும் தந்தது போல தெரியவில்லையே… ஐஸ்வர்யா ராய் தன் பிறந்த நாளை முன்னிட்டு தந்த CNN-IBN பேட்டியில் கூட இதுபோல் எதுவும் கூறவில்லையே….
*தகவல்களின் நம்பகத்தன்மையை ஆராய்ந்தே நமது தளம் எந்த செய்தியையும் வெளியிடும். எனக்கு உறுதியாக தெரியாத நிலையில் ஏதாவது செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள நேர்ந்தால் அதையும் நான் தெரிவித்துவிடுவேன். செய்திகளை வெளியிடுவதில் நான் அவசரம் காட்டுவதில்லை.
என் கவனத்திற்கு இந்த செய்தியை கொண்டு வந்ததற்கு உங்களுக்கு என் நன்றி.
- சுந்தர்
Nice photographs Sundhar. You effort to bring out each and every function Rajini participates is amazing. Your site is now becoming Rajini's diary.
//***தகவல்களின் நம்பகத்தன்மையை ஆராய்ந்தே நமது தளம் எந்த செய்தியையும் வெளியிடும். எனக்கு உறுதியாக தெரியாத நிலையில் ஏதாவது செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள நேர்ந்தால் அதையும் நான் தெரிவித்துவிடுவேன். செய்திகளை வெளியிடுவதில் நான் அவசரம் காட்டுவதில்லை.//
இங்கு பார்க்காதவரை தலைவரைப் பற்றிய எந்த செய்தியையும் நான் நம்புவதில்லை.
————————————————-
சேகர் அவர்களே, என் மீதும் இந்த தளத்தின் மீதும் தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி.
அதே சமயம், ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். தலைவரைப் பற்றிய அனைத்து செய்திகளையும் ஒன்று விடாமல் கவர் செய்வது என்பது என்னால் இயலாத காரியம். எனக்கு தெரிந்தே - தாமதமாகிவிட்டது என்ற ஒரே காரணத்தால் - பல செய்திகளை தவிர்த்திருக்கிறேன். என்னால் இயன்ற வரையில் செய்திகளை பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
- சுந்தர்
கலக்கல் வரிகள் ஈ ரா சார் , உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகளுக்கு வலிமை அதிகம்..
அறியாதவர்கள் உளரும்போதும்
அதிகம் பேசாதவன்!
super punch
Dear Sundarji,
Photos super
EERA's words super
Finally the the way of presentation was superosuper.
whose idea was it to use EERA's words.
Great and keep it up.
—————————————-
இத்துணை அருமையான புகைப்படங்களை சும்மா ஒப்புக்கு ஒரு கேலரியாக அளிக்க எனக்கு மனம் வரவில்லை. அதே சமயம் 'Photo Comments' என்று வழக்கமாக இல்லாமல் ஏதாவது வித்தியாசமான முறையில் அதை தர நினைத்தபோது உதித்தது தான் ஈ.ரா.வின் கவிதை வரிகளை பயன்படுத்தும் அந்த ஐடியா. அவர் கவிதை தொகுப்பை எடுத்தாள அவரிடம் அனுமதி பெற்றுவிட்டு பின்னர் தகுந்த வரிகளை தேர்வு செய்து அளித்தேன்.
- சுந்தர்
நல்ல போட்டோஸ் சுந்தர்ஜி. ஈ.ரா வின் கவிதைகள் அருமை.
//vijay says:
sunder sir,
Please see for the speech by ash. based on the news in read in a site i have given you the details earlier. but you are yet to approve the comment.//
***********
நண்பர் விஜய் அவர்களே… நீங்கள் கூறும் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், சுந்தர் கண்டிப்பாக அதை அளிக்காமல் இருந்திருக்க மாட்டார்… எனக்கென்னவோ, ஐஸ்வர்யா ராயின் அந்த பேட்டி உண்மையாக இருக்கும் என்று தோன்றவில்லை.
உங்களுக்கு என் நன்றி sundarji
வாவ் சுந்தர்! அருமை.. சொன்ன மாதிரி புகைப்படங்களை தந்ததற்கு.
படங்களுக்கு பொருத்தமாக ஈரா வின் கவிதைகளை பயன்படுத்தியாயது அருமையான ஐடியா!
ஈரா கவிதைகள் தலைவரை போலவே எளிமை..அதனால் தான் அனைவரையும் கவர்கிறது. எளிமைக்கு என்றும் பேராதரவு உண்டு.
தலைவா! thamilinam thavam kidakkirathu உன் Varugaikkaga!
sundar sir, pugaipadangalum e.ra avargalin கவிதை varigalum
enaindhu நல்ல padivai thandhirukirirgal
mikka nandri
சுந்தர்ஜி,
தலைவர் கலந்து கொண்ட "கம்பன் விழா" கூட்டத்தின் Exclusive புகைபடங்களை, தலைவர் ரசிகர் மற்றும் கவிஞர் ஈ.ரா. அவர்களின் அசத்தலான என்றென்றும் மறக்க முடியாத எளிமையான கவிதை வரிகளுடன் இணைத்து ஒரு கலக்கலான "புகைப்பட கவிதை" விருந்து படைத்து விட்டீர்கள்.
உங்களுக்கும், 'ரஜினி கவிஞர்' ஈ.ரா. அவர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்க நீவிர் பற்பல ஆண்டு - மென்மேலும் இத்தகைய "புகை பட கவிதை" படைத்து.
அன்புடன் அருண்
சுந்தர் ஜி,
பதிவு-
பின்னல் வரிகள்
மின்னல் ஒளிகள்
அன்புடன்
கிரிதரன்
மிக்க நன்றி திரு. ஈ ரா
யுவராஜ்
பாண்டி
காதலை நினைத்தாலும் வராத கவிதை நம் தலைவரை என்றால்
தானாக வரும் .அற்புதமான படங்கள்.நன்றி சுந்தர் ji
நாகூர் பாரி
நாகை ரஜினி மன்றம்
ஒவ்வொரு புகைப்படமும் ஓராயிரம் செய்தியை தாங்கி நிற்கிறது - தலைவர் அந்த வெள்ளை ஜிப்பாவில் விண்ணை கிழித்து சீறிப்பாயும் மின்னலைப்போல் காட்சியளிக்கிறார்
தலைவரை தன்னையும் மறந்து முழு ஈடுபாட்டுடன் குழந்தை சிரிப்போடு ரசிக்கச்செய்து அவரையும் மகிழ்வித்து, இந்த இனிய விருந்தைப்படைத்த சுந்தர் அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்