You Are Here: Home » Featured, Gallery, Rajini Lead » “வரேன்னு சொன்னா நிச்சயம் வந்துடுவேன்!” சூப்பர் ஸ்டார் - ஜக்குபாய் பிரீமியர் சுவாரஸ்யங்கள்!!! SUPER EXCL. REPORT & PICS

‘ஜக்குபாய்’ படத்தின் பிரீமியரை மிகப் பிரமா(த)ண்டமாக கடந்த புதன் கிழமை இரவு சத்யம் திரையரங்கில் நடத்தினார்கள் சரத்குமார் - ராதிகா தம்பதியினர். இந்த விஷேஷ ப்ரீமியருக்கு திரையுலகின் முக்கிய நடிகர் நடிகையர் பெரும்பாலோனோர் வந்திருந்தனர்.

ப்ரீமியரின் ஹை-லைட்டே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்திருந்தது தான் என்று சொல்லவும் வேண்டுமா என்ன?

dsc_0161

முன்னதாக திரையரங்கின் வாயிலில் நின்று அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருன்தனர் இந்த  நட்சத்திர தம்பதியினர். சரத் சற்று பதட்டமாகவே இருந்தார். ஒவ்வொரு நட்சத்திரமாக ப்ரீமியருக்கு வர வர களை கட்டியது சத்யம் வளாகம். கமல் 9.45 மணிக்கு வந்தார். வந்தவர் நேரே மேலே (அரங்கிற்கு) சென்று உட்கார்ந்துவிட்டார். கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திரங்களும் வந்து சேர, அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருந்த சூப்பர் ஸ்டார் மட்டும் வரவில்லை.

வந்திருந்த அனைவரிடம் பேசிக்கொண்டிருந்தனர் இருவரும். சரியாக 10.10 மணிக்கு சத்யம் வளாகத்தில் ஒரு வித பரபரப்பு தொற்றிக்கொண்டது. (இது தாங்க தலைவர் ஒரு இடத்திற்கு வருவதற்கான அறிகுறி).

தலைவர் மின்னலென வர, தலைவா… சூப்பர் ஸ்டார் என்ற கோஷங்களால் அதிர்ந்தது சத்யம் வளாகம். சரத்துக்கும் ராதிகாவுக்கும் சொல்லவொண்ணா மகிழ்ச்சி. தலைவருடன் அவரது உதவியாளர் ஒருவரும் வந்திருந்தார்.

அதுவரை பிற மீடியா வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருந்த நட்சத்திரங்களின் முக்கியத்துவம் சூப்பர் ஸ்டாருக்கு ஷிஃப்ட் ஆனது. புகைப்படக்காரர்கள் சூப்பர் ஸ்டாரை FLASH மழையால் நனைக்கஆரம்பித்தனர்.

dsc_0167“வரேன்னு சொன்னா நிச்சயம் வந்துடுவேன்” - ரஜினி

“மணி பத்துக்கு மேல ஆயிடுச்சு…. நீங்க வர மாட்டீங்கன்னு நினைச்சேன் ரஜினி…. ரொம்ப தேங்க்ஸ் வந்ததுக்கு…” என்று ராதிகா நெகிழ்ச்சியுடன் சொல்ல, “நான் தான் வர்ரேன்னு சொன்னேனே… சொன்னா வந்துடுவேன். வர்ற வழியில சரியான ட்ராபிக்… அதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சு… டோன்ட் வொரி” என்று தலைவர் சொல்ல, ராதிகா ஒரு நிமிடம் மேலும் நெகிழ்ந்த்போய் சூப்பர் ஸ்டாரின் தோளில் சாய்ந்துவிட்டார். அவரை தேற்றிய சூப்பர் ஸ்டார், சரத்தை நோக்கி, “என்ன படம் ஸ்டார்ட் பண்ணிடலாமா?” என்று கேட்க, “நீங்க தான் வந்துட்டீங்கள்ல… உடனே ஸ்டார்ட் பண்ணிடுவோம்” என்று சிரித்தபடி சொல்ல, சூப்பர் ஸ்டார் மேல் தளம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

அதற்குள் சத்யம் வளாகத்தில் இருந்த ஆடியன்சுக்கு சூப்பர் ஸ்டார் வந்திருக்கும் விபரம் தெரியவர, அனைவரும் அந்த இடத்தை நோக்கி படையெடுக்க ஆர்மபித்தனர். ஆனால் அதற்குள் சூப்பர் ஸ்டார் மேல் தளத்திற்கு சென்றுவிட்டார். (என்னா ஸ்பீட் தெரியுமா? போட்டோ க்ராபர்சால அவர் கூட ஓடிப்போய் எடுக்க முடியலே… அந்தளவு மனுஷன் செம ஸ்பீடுப்பா!)

மேல் தளம் சென்றவர், சில நிமிடங்கள் அங்கிருந்து கீழே பார்த்து, தன்னை நோக்கி கோஷம் எழுப்பிய ரசிகர்களை நோக்கி கை காட்ட தவறவில்லை. (மேல் தளத்திலிருந்து கீழே பார்த்தால் GROUND FLOOR ல்  நிற்கும் ஆடியன்ஸ் தெரிவார்கள்.)

dsc_0170

தலைவரை முழுக்க முழுக்க உடனிருந்து வரவேற்று, அவர் மேல் தளத்திற்கு வந்து இருக்கையில் அமர்வது வரை சரத்தும் அவர் குடும்பத்தினரும் உடன்வந்தார்கள்.

இதற்கிடையே, சூப்பர் ஸ்டார் நடந்து வரும்போது, உடன் வருவது போல ஒரு பணியாளருக்கு புகைப்படம் அமைந்துவிட, அவர் ஜென்ம சாபல்யம் பெற்றது போல, மகிழ்ச்சியடைந்தார். “இது போதும் தலைவா… இது போதும்….” என்று அங்கிருந்த போட்டோகிராபரின் கேமிராவின் மானிட்டரில் தனது புகைப்படத்தை பார்த்து பார்த்து சந்தோஷப்பட்டார்.

இது போதும் தலைவா... இதை விட வேற ஸ்டில் வேணுமா?

இது போதும் தலைவா... இதை விட வேற ஸ்டில் வேணுமா?

அவர் (ரஜினி) உள்ளே செல்வதற்குள், சத்யம் மல்டிப்ளெக்ஸ் பணியாளர்கள் மேலும் சிலர் ஓடி வந்து, “சார்… உங்க கூட ஒரு ஸ்டில் எடுக்கணும் சார்… ப்ளீஸ்” என்று கேட்க, “இப்போ… ஷோவுக்கு டயமாயிடுச்சு.. இன்டர்வெல்ல பார்த்துக்கலாம்மா” என்று கூறியபடி உள்ளே சென்றுவிட்டார். உள்ளே சென்ற தலைவர், நேரே சென்று கமலுக்கு அருகில் அமர்ந்துகொண்டார். நண்பர்கள் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர். அடுத்த சில நிமிடங்களில் ஷோ ஆரம்பித்துவிட்டது.

வெளியே….

வெளியே அந்த நடிகர் ப்ரீமியருக்கு வந்து சேர்ந்தார். அவர் சத்யம் வளாகத்திற்குள் வரும்போதே (கொஞ்சம் லேட்டா வந்தாருங்க அவரு) “உங்க தலைவர் வந்திருக்குறாரு… உங்கள் தலை வந்திருக்குறாரு” என்று அனைவரும் அவரை அலர்ட் செய்தனர் (பாதி கலாய்ப்பு). “அவரு வந்திருக்குறாரா? இருக்காதே…. ச்சு” என்று விசும்பியபடி சென்றார். மிகவும் ஆர்பாட்டமான அந்த இளம் நடிகர் (நமக்கெதுக்குப்பா வம்பு?) சூப்பர் ஸ்டார் வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் கடைசி வரைக்கும் மிகவும் அடக்கி வாசித்தது கண்கொள்ளா காட்சி. (அது!)

(இதை பத்தி தனியா ஒரு பதிவே போடலாம் சாரே!)

dsc_0283

இதற்கிடையே அனைவரையும் ரிசீவ் செய்து, உட்கார வைத்துவிட்டு, வெளியே வந்த சரத், போட்டோக்ராபர்ஸை பார்த்து, “எல்லோரும் கொஞ்ச  வெயிட் பண்ணுங்க. படம் முடிஞ்சதும் ஒரு சின்ன EVENT இருக்கு. அதை கவர் செய்யனும்” என்று கீழே ஏற்பாடு செய்து வைத்திருந்த நிவாரண நிதி உண்டியலை காண்பிக்க, “படம் முடிஞ்சுதுமா? வேண்டாம் சார்… ஆடியன்ஸ் எல்லாரும் அப்போ வந்துடுவாங்க. கூட்டம் கண்ட்ரோல் பண்ண முடியாது. பேசாம இன்டர்வல்ல வெச்சுக்கலாம்” என்று போட்டோக்ராபர்ஸ் கூற, “இது நல்ல ஐடியா… சரி இண்டர்வெல்ல ஏற்பாடு செஞ்சிடலாம்!” என்று ஆமோதித்த சரத் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார். உள்ளே படம் பார்த்துக்கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுக்கு இந்த இடைவேளை நிகழ்ச்சி பற்றி எதுவும் தெரியாது.

சரியாக 11.40 க்கு இடைவேளை விட, உள்ளே சென்ற சரத், ஒரு சிறிய நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்ள, முதலமைச்சர் நிவாரண நிதி நிகழ்ச்சிக்காக வெளியே வந்தார்கள் நட்சத்திரங்கள்.

வெளியே வந்த நட்சத்திரங்கள் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர். மனைவி ஐஸ்வர்யாவுடன் வந்திருந்த தனுஷ், தலைவரை பார்த்ததும் விஷ செய்ய, பதிலுக்கு விஷ் செய்தார் தலைவர். மகள் ஐஸ்வர்யா அப்பாவிடம் ஏதோபேசினார்.

சூப்பர் ஸ்டாரின் பாக்கெட்டுகளில்… ?

பெரும்பாலான நட்சித்திரங்கள் சூப்பர் ஸ்டாரை தேடி வந்து விஷ் செய்துவிட்டு சென்றனர். இதற்கிடையே உண்டியல் வைக்கப்பட, அனைவரும் உண்டியலில் பணம் போடுவதை கண்ட சூப்பர் ஸ்டார் “அட இது என்ன… புதுசா இருக்கே… தெரிஞ்சிருந்தா ஏதாவது கொண்டுவந்திருப்பேனே…த்சோ…த்சோ” என்று கூறியபடி தனது பாக்கெட்டுகளை துழாவ அங்கு ஒன்றும் கிடைக்கவில்லை. (இந்தியாவுலயே அதிக சம்பளம் வாங்குறவருங்க தலைவர்.) ம்ம்ம்ம்… நம் தலைவர் சரத்தை பார்த்தபடி கூற, “நீங்க சும்மா உண்டியல்ல பணம் போடுற மாதிரி போஸ் கொடுத்தாலே போதும் ரஜினி” என்று சரத் கூறினார். தலைவருக்கு இல்லாத பணமா? ஒரு சில வினாடிகளில் தலைவர் கையில் பணம் முளைத்தது. பணத்தை உண்டியலில் செலுத்தினார். அனைத்து நட்சத்திரங்களும் உண்டியலில் பணம் போட்ட பிறகு, மீண்டும் ஷோவுக்கு திரும்பலாயினர்.

dsc_0323

“நான் உங்க கூட இருப்பேன் சரத்”

அதற்குள் கமல், சரத்தை பார்த்து, “எனக்கொரு அவசர வேலை இருக்கு சரத்… நாம் கிளம்பறேன்” என்று சரத்திடமும் சூப்பர் ஸ்டாரிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டார். கமல் சென்றவுடனே, “நீங்களும் கிளம்புறீங்களா ரஜினி?” என்று சரத் தலைவரை சற்று ஏமாற்றத்துடன் கேட்க, “நோ…. நோ…. நான் ஃபுல் மூவி பார்த்துட்டு தான் போவேன்… யூ கேரி ஆன் சரத்” என்று அவருக்கு தைரியமளித்துவிட்டு திரும்பினார்.

ஓடி வந்த பணியாளர்கள்…!

இருக்கைக்கு செல்லும் முன், அவருடன் புகைப்படமெடுக்க விரும்பிய பணியாளர்கள் அவரை நோக்கி, “தலைவா… தலைவா…” என்று கத்தியபடி ஓடிவர, திரும்பிப் பார்த்த சூப்பர் ஸ்டார், அவர்களிடம் “இரும்மா… ஒரு நிமிஷம் பாத்ரூம் போயிட்டு வந்துடுறேன்” என்று அவர்களிடம் ஜாலியாக கூறிவிட்டு, பாத்ரூமுக்குள் செல்ல, அடுத்த நொடி, வேறு யாரும் உள்ளே சென்றுவிடாத படி, செக்யூரிட்டிகள் காவலுக்கு வெளியே நின்றுகொண்டனர்.

“ஓகே… நான் போகலாமா… ஆர் யூ ஹாப்பி?”

தலைவர், சில நிமிடங்கழித்து, வெளியே வந்தவுடன் புகைப்படமெடுக்க விரும்பிய அனைத்து பணியாளர்களையும் அழைத்தார். அவர்கள் விரும்பியிபடி கட்டிபிடித்து, கைகுலுக்கி, தோள் மீது கைபோட்டு வித விதமாக் போஸ் கொடுத்தார். சொல்லவொணா மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர் அந்த செக்யூரிட்டிகளும் ஊழியர்களும். (வாழ்த்துக்கள்!!). போட்டோ எடுத்து முடித்ததும் தலைவர் “ஓகே… நான் போகலாமா… ஆர் யூ ஹாப்பி?” என்று அவர்களிடம் கேட்டுவிட்டு, தனது உதவியாளரை நோக்கியோ, “எனக்கொரு COFFEE கிடைக்குமா?” என்று கேட்க, அவர் காபி ஷாப்புக்கு சென்றுவிட்டு, “சாரி சார்… COLD (ICE) COFFEE தான் இருக்கு என்று கூற “நோ ப்ராப்ளம்…  கொண்டுவாங்க” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் தலைவருக்கு சூடான சாரி… ஜில்லென்ற காபி உள்ளே சென்றது.

இங்கே சூப்பர் ஸ்டாருடன் புகைப்படமெடுத்துக்கொண்ட ஊழியர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி, கட்டிபிடித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். (இத நேர்ல பார்த்தாதான் அவங்க சந்தோஷத்தை உணரமுடியும்!)

படம் முடிந்தவுடன் வெளியே வந்தவர், அங்கு நின்றிருந்த ‘ஜீ’ தமிழ் தொலைகாட்சி மற்றும் SS Music தொலைகாட்சியினர் நின்றுகொண்டிருப்பதை பார்த்தார். தன்னை சந்தித்து சில வார்த்தைகளை பதிவு செய்ய அவர்கள் நெடு நேரம் காத்திருப்பதை புரிந்துகொண்டார். “ஓ…எஸ்.. கமான்… கமான்… பிரஸ் பீப்பிள்” என்று அவர்களை அழைத்தவர், படத்தை பற்றி சில வார்த்தைகள் சிலாகித்து பேசிவிட்டு, சரத்திடமும் ராதிகாவிடமும் விடைபெற்று கிளம்பிவிட்டார்.

மொத்தத்தில் ‘ஜக்குபாய்’ ப்ரீமியரில் நமது படையப்பா ஹீரோவாக இருந்தார் என்றால் மிகையாகாது.

நிகழ்ச்சியின் முழு புகைப்பட தொகுப்பு, (நமது தளத்தின் பிரத்யேகமானது - Our website’s exclusive stills) கீழே தரப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் அரங்கத்திற்குள் அமர்ந்திருப்பது மற்றும் வேறு சில பிரத்யேக புகைப்படங்களுக்கு,
http://tamil.galatta.com/entertainment/events/gallery/name/images/start/169/id/2667/star/Rajinikanth-and-Kamal-at-Jaggubhai-Premiere-Show.html என்ற முகவரியில் சென்று Galatta.Com இன் EXCLUSIVE புகைப்படங்களை பார்க்கலாம்.

———————————————————————————
தெரியுமா…..?

1) தலைவர் ரொம்ப நாளைக்கு பிறகு சத்யம் திரையரங்கிற்கு நேரடியாக வந்தது இந்த ஜக்குபாய் ப்ரீமியருக்காகத்தான். இதற்கு முன், தலைவர் ‘சொல்லி அடிப்பேன்’, ‘ஈரம்’ உள்ளிட்ட படங்களின் ஆடியோ நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறார். ப்ரீமியருக்கு வந்ததில்லை.

2) சத்யம் மல்டிப்ளெக்ஸ் ஆனபிறகு (அதவாது ‘சத்யம் சினிமாஸ்’ என்ற பெயரில் RENOVATE செய்யப்பட்ட பிறகு) வெளியான திரைப்படங்களில் சத்யம் திரையரங்கில் 50 நாட்கள் கடந்து சாதனை படைத்தது ‘சிவாஜி’ மட்டுமே. மற்ற அனைத்து படங்களும் INTERNAL SHIFTING முறையில் அந்த வளாகத்திலேயே வேறு அரங்கிற்கு மாற்றப்பட்டன. சிவாஜியின் இந்த சாதனையை எந்திரன் மட்டுமே முறியடிக்கும் என நம்பலாம். (By God’s grace!).

————————————————————-
குறிப்பு: இந்த நிகழ்ச்சிக்கு நான் போகவில்லை. அங்கு போயிருந்த என் மீடியா நண்பர்களிடம் கேட்டு எழுதியிருக்கிறேன். விபரங்கள் கோர்வையாக இல்லாது சற்று முன்னர் பின்னர் இருக்கலாம்.
————————————————————-

—————————————————————————

Our Excl. Complete Gallery

27 Responses to ““வரேன்னு சொன்னா நிச்சயம் வந்துடுவேன்!” சூப்பர் ஸ்டார் - ஜக்குபாய் பிரீமியர் சுவாரஸ்யங்கள்!!! SUPER EXCL. REPORT & PICS”

  1. Muthukumar Muthukumar says:

    எனக்கு கால் நிலத்துல நிக்க மாட்டேங்குது சுந்தர்… இப்பிடி ஒரு பதிவு படிச்சு ரொம்ப நாள் ஆச்சு. அதுசரி, இத்தனையையும் நேர்ல பாத்த நீங்க, தலைவரோட போட்டோ எதுவும் எடுக்கலயா? அப்புறம் ‘அந்த நடிகர்’ யாரு?

    ——————————————-
    நான் எப்போ நேர்ல போனேன்னு சொன்னேன்? நான் அங்கே போகலே பாஸ். அங்கே போயிருந்த நம்ம நண்பர்கள் கிட்டே கேட்டு எழுதினது இது.

    தலைவரை சங்கடப்படுத்தி அவர் மறுக்க முடியாத இடத்துல போயி நின்னு ஸ்டில் கேக்குறது நம்மள மாதிரி ஆளுங்களுக்கு நியாயமில்லே. (இந்த பதிவுல வர்ற தியேட்டர் ஆளுங்க ஸ்டில் எடுக்கிறதுக்கும் நாம் எடுக்குறதுக்கும் வித்தியாசம் இருக்கு). நான் அங்கே போயிருந்தாலும் ஸ்டில் கேட்டிருக்க மாட்டேன். அமைதியா ஒரு ஓரமா நின்னு அவரை OBSERVE பண்ணிக்கிட்டு தான் இருந்திருப்பேன்.

    - சுந்தர்

  2. suresh suresh says:

    செம நியூஸ் :-) தலை தலை தான் நாமலும் சிக்கிரம் ஒரு ஸ்டில் எடுக்கணும்

  3. venky venky says:

    சூப்பர் ….

    Wherever he go..he is the real HERO….

  4. ஈ ரா ஈ ரா says:

    சுந்தர்..

    கலக்கிட்டீங்க.. அருமையான படங்கள்.. அதை விட உங்க வர்ணனை பிரமாதம்.. அசத்தல்.. அதிலும் தலைவர் இதோ வந்து விடுகிறேன் என்று ரெஸ்ட் ரூம் சென்று வந்ததையும், பணம் கொண்டு வரவில்லை என்று மிக இயல்பாக ஒத்துக் கொண்டதையும், மறக்காமல் ஊழியர்களிடம் போடோ எடுத்துக்கொண்டதையும், தனக்கு காபி வேண்டும் என்பதை கேட்டுப் பெற்றதையும் நீங்கள் விவரித்த விதம் நேரில் பார்த்தது போல் இருந்தது…

    உண்மையை சொல்லப்போனால் கொஞ்ச நாள் கழித்து நீங்கள் புல் பார்மில் ஒரு ரிபோர்ட் கொடுத்தது போல் இருக்கிறது..

    வாழ்த்துக்கள்…

    ஈ ரா

  5. sekar sekar says:

    கலக்கலோ கலக்கல் படங்கள். அதுவும் ராதிகா சாய்ந்திருப்பது போன்ற படம் அவருடைய வருகையின் முக்கியத்துவத்தை காட்டுகிறது. உங்கள் கட்டுரை முத்திரை பதித்தது போல நச்.

  6. antony antony says:

    once thalaivar spoke about veerappan at that time this sarath asked investigation on rajini becoz rajini told i know about veerappan..but now thalaivar doesnt mind that and supported him..ok..who is that actor…si(o)mbuva…put one news on that..

    ———————————-
    Past is past. Mudinjadhu mudinjupochchu….
    - Sundar

  7. anbuaran anbuaran says:

    சுந்தர்ஜி

    நேரில் பார்த்த பிரமிப்பு நாங்களும் போட்டோவெல்லாம் எடுதொம்ல! உங்களின் பங்களிப்புக்கு எங்களின் உள்ளம் கனிந்த நன்றிகள் .

  8. harisivaji harisivaji says:

    ஒரு ஸ்டார் பிளேயர் ( சுந்தர் உங்கள தான் ) திரும்பவும் பார்முக்கு வந்து சதம் போட்ட மாத்ரி இருக்கு

    //(இது தாங்க தலைவர் ஒரு இடத்திற்கு வருவதற்கான அறிகுறி).///

    முற்றிலும் உண்மை அது எப்படி தான் பரவுதுன்னு தெரியில்ல
    அந்த இடமே ஒரு அதிர்வ உணர்வது போல இருக்கும்

    //“நான் தான் வர்ரேன்னு சொன்னேனே… சொன்னா வந்துடுவேன்//

    இது நம்ம தலைவரின் பஞ்ச் …. கூடவே பிறந்தது தான வருது பாருங்க
    நானும் சத்யம்ல பார்ட் டைம் வேலைல செர்ந்துடலாமனு பார்கிறேன்

    ஹரி.சிவாஜி

  9. harisivaji harisivaji says:

    நீங்க கொடுத்த லிங்க் ல இருக்குற போட்டோ பார்த்தேன்

    ரஜினி படம் பார்க்க போன அவர் படம் பார்கிறத மத்தவங்க படம் எடுக்குறாங்க ….இது எப்படி இருக்கு

    அங்க இருக்குறதுல அதிக படத்துல ரஜினி தான் …பாவம் ரஜினி

  10. Raja Raja says:

    சும்மா நம்ம தலைவர் நடக்றது கூட ஸ்டைல் தான்.சும்மா செம ஸ்மார்ட்டா இருக்கார் தலைவர்…………

    சரி சுந்தர்ஜி யார் அந்த இளம் நடிகர்?????????????????

  11. Raja Raja says:

    தோள் கொடுப்பான் தோழன் நு சொல்லுவாங்க,அது தான் தலைவர்,தனக்கு யார் எந்த உதவி செய்யலேய்னாலும் ,தன்னால முடிஞ்ச வர, தன்னை பத்தி தப்பா பேசுனவங்களுக்கு கூட உதவி செஞ்சுட்டு தான் இருக்கார்ங்கறதுக்கு இத விட வேற என்ன உதாரணம் வேணும்

  12. nagorebari nagorebari says:

    தலைவர் செம ஸ்டைல்மா …அதுவும் தலைவரும் ராதிகாவும் இருக்கும் போட்டோ… வாய்ப்பே இல்லை..

    நாகூர் பாரி

    மாவட்ட தலைவர்

    நாகை(தெற்கு)மாவட்ட ரஜினி நற்பணி மன்றம்

    செல்:9952526675

  13. jeyananth jeyananth says:

    Hi Sundar,

    One correction needed in ur article regarding the number of days Sivaji run in Satyam…Sivaji was running for 50 days regular 4 shows in Satyam big screen thereafter till 98 days it was 2 shows in Satyam big screen and 2 in small screen…other 2 shows in big screen was Chakde India….This is a record which is not broken even by any other top actors.

    I even remember ur post regarding this mentioning that satyam purposely shifted to small screen after 98 days…they didnt wait for 100 days…

    —————————————-
    You didn't get my point i think.

    Carefully read my words: I just said that Sivaji is the only movie which completed straight 50 days in Sathyam (main theatre in Sathyam cinemas.) I didn't speak about multiplex running.

    thanks

    - Sundar

  14. sudhan rajini veriya sudhan rajini veriya says:

    "naan varennu sonnaaa vanthuduven" - Thalaivar

    "Seekiram vaanga thalaiva" - Tamilnadu

  15. vasi.rajni vasi.rajni says:

    அந்த இடத்தில் இருந்தது போலவே உணர்வு சுந்தர்ஜி . தலைவர் சொன்னால் செய்யாமல் இருக்க மாட்டார் . அவர் நிச்சயம் கொடுத்த வாக்கை காப்பாற்றுவார் . தலைப்பே ஒரு புது தெம்பை கொடுத்துள்ளது சுந்தர்ஜி .

    rajini will rule tamil nadu

  16. Rajini Ramachandran Rajini Ramachandran says:

    simply superb. sundar sir ungalai paaraatta vaarthaigale illai. exclusive endraal idhu exclusive. thanks a lot.

  17. Skandamurthy Skandamurthy says:

    அருமையான பதிவு ஜி,
    சரி எந்திரன் படப்பிடிப்பு இன்னும் முடியல போல? மும்பைல ஒரு schedule இருக்கு என்று ஷங்கர் சொல்லி இருக்காரே??
    தலைவர் கூட மீசை இல்லாமலேயே எல்லா recent photos layum காட்சி கொடுக்கிறார்!!!(robo getup??)

    ——————————————-
    ஆமாம். எந்திரன் படப்பிடிப்பில் இடையிடையே ரோபோ கெட்டப்பில் நடிப்பதால் மீசையின்றி இப்போதெல்லாம் காட்சி தருகிறார்.

    - சுந்தர்

  18. Kamesh (Botswana) Kamesh (Botswana) says:

    சுந்தர், நேரில் போகாமலே இந்தளவு விஷயங்களை உங்களால் எழுத முடிகிறது என்றால் நீங்கள் நேரில் சென்றால் எப்படியிருக்கும்… ?!
    காமேஷ்

  19. Muru Muru says:

    Sundar,

    I remembered Batcha Dialogue after seeing the headline. There was an incident where Raguvaran and thalaivar need to meet to talk. That time , raguvaran will ask vijayakumar , where is your son ? he didn't come yet…did he afraid? For that , Vijayakumar will reply to him saying that , My son(Thalaivar) won't say anything. But if he says something ,he will do it for sure.

  20. Suresh Suresh says:

    Excellent collection and narration of the event.

    Sivaji ran for more than 100 days in SATHYAM Theatre itself. How are you saying that it ran only 50 days in Sathyam. If I recall my memory, shows were decreased to 2 in Sathyam. You may also verify at your end.

    ——————————————
    You are speaking about running after shifting within the multiplex.
    But i say… உறுதியாக சொல்கிறேன்:

    சிவாஜி சத்யம் திரையரங்கில் (Main screen) ஓடிய மொத்த நாட்கள் மட்டும் 77 நாட்கள். அதுவும் 4 காட்சிகள். அதற்க்கு பிறகு Internal shifting செய்யப்பட்டு ஓடியது. (வேறு எந்த படமும் 50 நாட்கள் மார்க்கை கூட க்ராஸ் செய்யவில்லை.)

    - சுந்தர்

  21. B. Kannan B. Kannan says:

    டியர் சுந்தர்,
    நேரில் பார்த்த மாதிரியே இருந்தது..
    நன்றி சுந்தர்..
    //
    மிகவும் ஆர்பாட்டமான அந்த இளம் நடிகர் (நமக்கெதுக்குப்பா வம்பு?) சூப்பர் ஸ்டார் வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் கடைசி வரைக்கும் மிகவும் அடக்கி வாசித்தது கண்கொள்ளா காட்சி. (அது!)
    //
    அது சரி எந்த நடிகர் என்று கடைசி வரை சொல்லவே இல்லை?
    இது நியாயமா?
    keep surprising us.. Cheers..
    கோடிக்கணக்கான ரஜினி பக்தர்களில் ஒருவன்,
    பா. கண்ணன்.

    ———————————-
    என்ன கண்ணன், நல்லா மேற்கூறிய வரிகளை ஒரு முறை படிச்சி பாருங்க. புரியும். நான் என்னோட வார்த்தைகளிலேயே ஹிண்ட் கொடுத்திருக்கேன். அதுக்குமேலே சொன்னா வம்பாயிடும்.
    - சுந்தர்

  22. கிரி கிரி says:

    சுந்தர் செமையா இருந்தது! நல்லா சுவாராசியமா எழுதி இருக்கீங்க.

    தலைவர் பற்றிய செய்திகள் என்றாலே படிக்க விருப்பம் தான்..

    தலைவர் என்றதும் நீங்கள் முன்பு கூறிய விஷயம் தான் நினைவிற்கு வருகிறது..தற்போதெல்லாம் ரஜினி என்று கூறவே சங்கடமாக உள்ளது, மரியாதை குறைவாக தோன்றுகிறது.

    இதன் காரணமாக தற்போது நமது ரசிகர் தளங்களில் எழுதும் போது ரஜினி என்பதற்கு பதிலாக தலைவர் என்ற வார்த்தையையே அதிகம் பயன்படுத்துகிறேன்.

    அப்புறம் தலைவர் சொன்ன மாதிரி எந்திரன் ஜூலை தான் வரும் போல தெரிகிறது…. அந்த சமயத்தில் விடுமுறை கிடைக்குமா! என்று இப்பவே கவலையாக உள்ளது :-( பார்ப்போம்!

  23. B. Kannan B. Kannan says:

    டியர் சுந்தர்,

    இப்போது புரிகிறது யார் அந்த நடிகர் என்று..

    நன்றி.. தலைவர் தர்மத்தின் தலைவனில் சொல்வது போல்

    எனக்கு லேட்டா தான் புரிந்தது..

    இதுக்கு மேல் ஹிண்ட் கொடுக்க முடியாது தான்..

  24. R.V.SARAVANAN R.V.SARAVANAN says:

    தலைப்பு சூப்பர் சுந்தர்

    நண்பரிடம் கேட்டு எழுதியதே இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கே

    நீங்கள் நேரில் சென்றிருந்தால் ………

  25. dr suneel dr suneel says:

    //அமைதியா ஒரு ஓரமா நின்னு அவரை OBSERVE பண்ணிக்கிட்டு தான் இருந்திருப்பேன்//.

    அந்த நொடி அனுபிவ்கணும்..இது தான் வாழ்கை ..

    சுந்தர் ஜி , எத்தனையோ வலை தளங்கள் செய்திகள் கொடுக்கலாம் ஆனால் ஒரு ரசிகனின் எதிர்பார்ப்பு , அவன் ரசிக்கின்ற சின்ன சின்ன விஷயங்கள், background details, உங்களை மாறி யாரும் கொடுப்பது இல்லை ..நன்றி

  26. Sharath Sharath says:

    Great coverage and a nice title :)

  27. Anonymous says:

    வம்பு என்று நீங்கள் சொன்னவுடன் அது யாரென்று கண்டுபிடித்து விட்டேன். நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான எழுத்து நடை .
    நன்றி சுந்தர்ஜி.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates