You Are Here: Home » Guest Article » திடீர் தமிழ் ஆர்வலர்கள் & காரியம் சாதிக்கும் கொசுக்கள் - Guest Article

பிரச்னை முடிந்திருக்கலாம். ஆனால் அது நம் மனதில் ஏற்படுத்தியிருக்கும் காயம்…? இன்னும் எத்துனை காலம் தான் நாம் இவற்றையெல்லாம் சகித்துகொண்டிருக்கப்போகிறோம்? நாம் என்ன கையாலாகாத கோழைகளா… விலங்கிடப்பட்டிருக்கும் வேங்கைகள் அல்லவா? தலைவனுக்கு ஒரு சிறுமை என்றால் நம்மால் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியுமா?

‘சிறுமை கண்டு பொங்குவாய்’ என்று பாரதி கூறிய வரிகளுக்கேற்ப, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழ் மற்றும் ஜாதியின் பெயரை கூறிக்கொண்டு நடந்து வரும் அக்கிரமங்களை பார்த்து நம் ரசிகர்கள் கொதித்தெழுந்து வருகிறார்கள். இது குறித்து, நமக்கு உணர்ச்சி பிரவாகமாக வெடித்து மடை திறந்த வெள்ளமென வரும் கமெண்ட்டுகளே சாட்சி.

 திரைத் தொழிலாளர்களுக்கு வருவாயில் பங்கு - முன்மாதிரியை ஏற்படுத்திய தலைவர்!!

திரைத் தொழிலாளர்களுக்கு வருவாயில் பங்கு - முன்மாதிரியை ஏற்படுத்திய தலைவர்!!

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்ற பழமொழிக்கேற்ப, இந்த பிரச்னையில் ஜாதி எங்கிருந்து வந்தது என்று நமக்கு புரியவில்லை. ஜாதியின் பெயரை சொல்வதே வெட்கக்கேடான விஷயம் என்று தமிழகத்தில் இருந்த சூழல் மாறி, இன்று ஜாதியின் பெயரை பெருமையுடன் சொல்லி, அதற்க்கு ஆதரவு திரட்டுவது எத்துனை கேவலம்? நாடு எங்கே போகிறது? காந்தி தேசமே உனக்கு காவல் இல்லையா?

அதுமட்டுமல்ல, தலைவர், தொழிலாளர்களுக்கு எந்த அளவு உதவக்கூடியவர் என்பதை யாரும் அத்துணை சுலபத்தில் மறந்துவிட முடியாது. குசேலன் பட வெளியீட்டின் போது, “இனி என் படத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு என் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அளிப்பேன்” என்று கூறி, அதை நடைமுறையில் செய்து காட்டியவர் தலைவர். இன்று தொழிலாளர்களுக்காக வாய் கிழிய பேசுபவர்கள் அவர்களுக்காக செய்தது என்ன? சிந்திப்பீர் தொழிலாளர்களே…

நமக்கு ஏற்பட்ட இந்த கொதிப்பை போல தனது குமுறல்களையெல்லாம்  கட்டுரையாக வடித்து, நமக்கு அனுப்பியிருந்தார் நமது நண்பர் ஈரா. நமது ‘Guest Article’ பகுதியில் அதை வெளியிடுகிறேன்.

உங்கள் கருத்துக்களையும் இது போன்று நமது “Guest Article” பகுதியில் வெளியிட விரும்பினால், கடுஞ்சொற்களை  தவிர்த்து, யாரையும் கீழ்த்தரமாக விளிக்காது, எழுதியனுப்பவும். நாகரீகமாக அதே சமயம் பாரதியின் சினத்தோடு உங்கள் கருத்துக்கள் அமையவேண்டும். 

தலைவருக்கு இது போன்று அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளை உளவியல் ரீதியாக அணுகி, இது போன்று பிரச்னையை தூண்டிவிடுகிறவர்களின் நோக்கம் என்ன, அவர்களை எப்படி கையாள்வது, இதற்க்கு முடிவு தான் என்ன? என்பது பற்றியும் எழுதியனுப்பலாம்.

மறக்காது உங்கள் கட்டுரையை இதே பதிவில் கமெண்ட் பகுதியிலும் அளிக்கவும். “Guest Article” பகுதியில் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் கமெண்ட்டாக அது இங்கு பிரசுரிக்கப்படும். கட்டுரைகளை திருத்தவும், சுருக்கவும், (அதன் தரத்திற்காக) நமக்கு முழு உரிமை உண்டு. கட்டுரையை வெளியிடுவது நமக்கு கிடைககும் நேரத்தை பொறுத்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

நீங்கள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: simplesundar@gmail.com

ஒன்று கூடுவோம்! தலைவருக்கு துணை நிற்போம்!!

மாபெரும் சாதனைகள் அனைத்தும் முதலில் ‘முடியாது’ என்று சொல்லப்பட்டவையே….!!!!

ஜெய் ஹிந்த்!

- சுந்தர்
OnlySuperstar.com
9840169215

————————————————————————————

nadigar_sangam-function1திடீர் தமிழ் ஆர்வலர்கள் & காரியம் சாதிக்கும் கொசுக்கள்

கவுண்டமணி சொல்வார் ‘மன்னன்’ படத்தில், இந்த தொழில் அதிபருங்க தொல்லை தாங்க முடியல என்று.. அதுபோலத்தான் இந்த திடீர் தமிழ் ஆர்வலர்கள் தொல்லையும்.. ஒரே நாளில் பேமஸ் ஆவது எப்படி என்று ரூம் போட்டு யோசித்தால், அதற்கு சினிமா ஹீரோவைப் பற்றி அவதூறாகப் பேசு என்று விடை கிடைக்கும்.. இதுதான் இன்றைய நிலை..! தமிழை வளர்ப்பதற்கான ஆக்கப் பூர்வமான செயல்களை தவிர அனைத்தையும் செய்வது தான் இந்த தமிழ் ஆர்வலர்கள்வேலை.

வீண் பரபரப்பை மனசாட்சியின்றி செய்தியாக்குபவர்களுக்கு  - ஒரு  விஷயத்தின் உண்மையை எழுத வேண்டும் என்று தோன்றவில்லையா? யார் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.. செய்திகளை எப்படி செய்தியாக வெளியிட வேண்டும் என்று ஒரு அடிப்படை உணர்வு கூட இல்லாமல் தார்மீகத்தை எதற்கோ தர்மம் செய்து விட்டு பரபரப்புக்கு செய்திகளும் பேட்டிகளும்  வெளியிட்டு சும்மா இருப்பவர்களை தூண்டி விடுவதுதான் உங்கள் லட்சியமா?

சில பேரைப் பற்றி  எல்லாம் எழுதவேண்டும் என்று நினைத்தாலே…நமக்கு ..குமட்டுகிறது….! சாக்குவார் தங்கம் யார் என்றே நிறைய பேருக்குத் தெரியாது.. இவர் பெயரில் உள்ள ‘சாக்குவார்’ என்ற அர்த்தம் பொதிந்த தமிழ் வார்த்தையின் விளக்கத்தை தமிழ் கூறும் நல்லுலகும் தமிழ் ஆர்வலர்களும் தான் சொல்ல வேண்டும். நடக்கும் விஷயங்களைப் பார்த்தால் இந்த சண்டை நடிகர் இந்த முறை நிஜத்திலும் யாருக்கோ “டூப்” போட்டு தன் வேலையை ஆரம்பித்து இருக்கிறார் என்றே தோன்றுகிறது.

நேற்று கடைசியாக திரு. சாக்குவார் தங்கம் அவர்கள் இனி தமிழ் நாட்டில் வேறு மொழி நடிகர்கள் நடிக்கக் கூடாது என்றும் அப்படி நடித்தால் அந்த ஷூட்டிங்கில் முற்றுகை போராட்டம் செய்வோம் என்றும்  சொல்லி இருக்கிறார்..

ஒருவேளை இப்படி கூட இனி பத்திரிகைகள்  செய்தி வெளியிடலாம்… “சாக்குவார் தங்கத்தின் அறிவிப்பால் இனி என்ன செய்வது என்று அமிதாப் பச்சன், ஜாக்கி சான் போன்றவர்கள் கையைப் பிசைகிறார்களாம்!  லண்டன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் தமிழர்கள் அய்யய்யோ இனி நாங்கள் எல்லா படங்களையும் பார்க்க முடியாதா என்று கதறுகிறார்களாம். !”

“சாகுவார் தங்கம் என்ன செய்வாரோ என்று, இந்திக்குப் போன முருகதாஸ், பிரபுதேவா, அசின், திரிஷா எல்லோரும் அலறுகிறார்களாம் . .. வெளி நாட்டில் சிம்பொனி இசைத்த இளையராஜாவும், தெரியாமல் ஆங்கிலப் படத்துக்கு இசை அமைத்து ஆஸ்கர் வேறு வாங்கிவிட்டேனே என்று ஏ ஆர் ரகுமானும் பயப்படுகிறார்களாம். இனி தெலுங்கு ரீமேக் பண்ண முடியாதா? என்று நடிகர் விஜயும் கவலையில் இருக்கிறாராம்.  ”

என்ன கொடுமை சார் இது ?

உண்மையிலேயே தொழிலாளர்கள் மீதும் தமிழர்கள் மீதும் மிகுந்த அக்கறை கொண்ட நடிகர்கள் ரஜினியும் அஜித்தும் என்பது சினிமா உலக நல்லவர்கள் எல்லோருக்கும் தெரியும்.  பித்தளைகளுக்கும்,  மேலுக்கு முலாம் பூசி மினுக்குபவர்களுக்கும் இதுதான் வயிற்றெரிச்சல். என்னடா செய்வது என்று பார்த்த போது வசமாகக் கிடைத்தது “கலைஞருக்கு நன்றி சொல்லிய விழா” விவகாரம்.  இந்த விழாவில் மட்டுமல்ல,  இதற்க்கு முன் கலைஞர் இந்த திட்டத்தை அறிவித்த போதே கூட அதே  மேடையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிலம் கொடுக்க முன்வந்த போது திரையுலகினர்  இடம் சரியில்லை என்றதால்   கிடைக்காமல் போனதையும், அதனால் இம்முறை விட்டு விடக் கூடாது என்று அறிவுறுத்தினார் ரஜினி.  கலைஞரை மேடையில் வைத்துக் கொண்டே நடிகர் திலகம் சிலை திறப்பு விழாவில், நடிகர் விஜயகாந்த் தேர்தலில் வெற்றி பெற்றதற்குப் பாராட்டினார். இந்த முறையும்  இலவசத் திட்டங்கள் ஏராளம் அறிவுத்துள்ள முதல்வர் முன்னிலையிலேயே “ஓசியில் கிடைக்கிறது என்று யாரும் எதற்கும் அலையாதீர்கள்! “வசதியுள்ளவர்கள் கை நீட்டாதீர்கள்! விலகி உண்மையில் நலிந்தவர்களுக்கு வழி விடுங்கள் !  அதுதான் நியாயம்” என்று நேரிடையாக சொல்லி விட்டார்.  இதுதான் ஓசியில் வீடு வாங்கவும், இதில் வேறு ஏதாவது திட்டம் போட்டு சுருட்டலாம் என்று நினைத்தவர்களுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என்று தோன்றுகிறது.

நடிகர் அஜித் நடிகர்களின் நிலையை அங்கே போட்டு உடைத்தார் என்றால், நடிகர் ரஜினிகாந்த் சந்தேகமில்லாமல் ஒட்டு மொத்த தொழிலாளர்களின் சந்தேகத்தையும் குமுறலையும் போட்டு உடைத்தார். நியாயமாக தொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூற வேண்டிய விஷயத்தை, கடைசி வரையில் யாரும் பேசாததால் நடிகர் ரஜினி மட்டும் உண்மையான அக்கறையோடு அன்றைக்கு அவர்களுக்காக குரல் கொடுத்தார். தொழிலாளர்களுக்கு ரஜினியின் பேச்சில் உள்ள நியாயம் தெரியும். அவர்களும் அதைத்தான் எதிர்பார்த்தார்கள்.  வெறும் பேச்சில் மட்டும் அல்லாமல் ஏற்கனவே பல முறை தொழிலாளர்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து வருபவர் ரஜினி. கடைசியாக குசேலன் படம் வந்த போது எத்தனையோ பிரச்சினைகள், நஷ்டம் என்றெல்லாம் வந்தபோது கூட, தன் பணத்தில் இருந்து படத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஒரு சிறு விழாவில்,  ஒரு பெரும் தொகையை (இருபது லட்சம்)  உதவியாக அளித்தார்.  இனி வரும் படங்களிலும் தருவதாக உறுதியளித்தார். இது போன்ற விஷயங்களில் இருந்தே யாருக்கு தொழிலாளர்கள் மேல் உண்மையான அக்கறை என்று தெரியும்.

ரஜினி அவர்கள் பத்திரிகைகளுக்கு காசு தருவதோ, படம் வரும்போது வீண் செலவு செய்வதோ கிடையாது. ஆனால் அவர் நின்றால் செய்தி, நடந்தால் செய்தி என்று போட்டு காசு பார்ப்பவர்கள் பல பத்திரிகைகள்.. இதில் முத்தாய்ப்பான சிலர்தான் நன்றி மறந்து இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு பிரச்சினைகளை தூண்டி விட்டு ஆதாயம் தேடுகிறார்கள்.

நம்மை உறுத்தும் மற்றொரு விஷயம்…ரஜினிக்கு கண்டனம் என்று கூறியிருக்கும் அறிக்கையில் நடிகர் சங்கம் கையெழுத்திட்டு இருப்பதுதான். .. குகநாதனுக்கு கண்டனம் என்று சொல்லி பெப்ஸி அமைப்பினர் கையெழுத்து போடுவார்களா? சேகரனுக்கு கண்டனம் என்று சொல்லி விநியோகஸ்தர்  சங்கத்தினர் கையெழுத்து போடுவார்களா? சாக்குவார் தங்கத்துக்கு கண்டனம் என்று சொல்லி ஸ்டன்ட் நடிகர்கள் போடுவார்களா?

இவர்கள் ரஜினியை மட்டும் அவமானப்படுத்தவில்லை..! அவரைத் தொடர்ந்து கைத்தட்டிய ஆயிரக்கணக்கான மக்களையும் தொழிலாளர்களையும் மற்ற நடிகர்களையும் அவமானப் படுத்தி இருக்கிறார்கள்..

ஆக இந்த முறையும் நடிகர் ரஜினிக்கு ஆதரவாக நடிகர் சங்கம் எதுவும் பேசவில்லை…!  ரஜினியை வைத்து லட்சங்களை வாரிய சங்கங்களும் பேசவில்லை..!

அடுத்து ஒரு மொக்கைபாய் என்று படம் எடுத்து ரஜினியிடமும் கமலிடமும் போய் தலையை சொறிவார்கள்!  பத்திரிகையில் போட்டோ வந்து விட்டது நீங்க வந்து கோவப்பட்டாதான் எங்க கோவம் தெரியும்..தயவு செஞ்சு வந்து கோவப்படுங்க என்பார்கள். ! கமல் கம்மென்று போய் விடுவார்.  ரஜினியோ  வந்து பேசி விட்டுப் போவார்.  இதுதான் நடக்கும்.. ஏன் என்றால் அந்த மனிதன் மன்னிக்கவே பிறந்த மன்னன்.. இதைத்தான் அவர் கடந்து வந்த பாதை காட்டுகிறது.  ஆனால் ரசிகர்கள் அவர் அளவிற்கு பக்குவம் அடைய இன்னும் பல காலம் பிடிக்கும். அது வரை இது போன்று சலசலப்புக்கள் எழும்! கட்டுரைகளும் எழும்..!

தலைவா, ஈ யை அடிக்க இரும்பு வேண்டாம்.. ஆனால் தேவைப்படும்போது உறிஞ்ச வந்துவிட்டு காரியம் முடிந்ததும் காணாமல் போகும்  கொசுக்களிடம்  இருந்து தப்பிக்க இனியாவது நீங்கள் ஒரு  வலையை வைத்துக் கொள்ள வேண்டும்.. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அவர்கள் உம்  ரத்தத்தை உறிஞ்சும்போது எங்களுக்கு வலிக்கிறது……

அன்புடன்
ஈ.ரா. என்னும் இராமநாதன்
Padikkathavan.blogspot.com

43 Responses to “திடீர் தமிழ் ஆர்வலர்கள் & காரியம் சாதிக்கும் கொசுக்கள் - Guest Article”

  1. Prabhu Prabhu says:

    Fantastic Article. Anba pesina adangi povom, Adhigaram panninna adakittu povom. Thalaiva oru varthai sollunga. Enga power ah kattanum. INi mel evanum ungala pathi pesa bayapadanum. Engalukku manasu valikkudhu.

  2. கிரி கிரி says:

    ஈரா நல்லா எழுதி இருக்கீங்க.. நானும் எழுத நினைக்கிறேன் நேரம் இல்லை :-(

  3. kppradeep kppradeep says:

    "மாபெரும் சாதனைகள் அனைத்தும் முதலில் ‘முடியாது’ என்று சொல்லப்பட்டவையே….!!!!"

    Super Sundarji

    "தலைவா, ஈ யை அடிக்க இரும்பு வேண்டாம்.. ஆனால் தேவைப்படும்போது உறிஞ்ச வந்துவிட்டு காரியம் முடிந்ததும் காணாமல் போகும் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க இனியாவது நீங்கள் ஒரு வலையை வைத்துக் கொள்ள வேண்டும்.. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அவர்கள் உம் ரத்தத்தை உறிஞ்சும்போது எங்களுக்கு வலிக்கிறது…… "

    ஈ.ரா. என்னும் இ.ராமநாதன் ரொம்ப ஈர மனசு உடையவர் என்று தெரிகிறது

    தலைவர் ஒரு யோகி . இந்த சாக்கடைகளை பற்றி ரொம்ப யோசிக்கமாட்டார். கொசு அடித்து கொலைகார பட்டம் வேண்டாம். அவரவர் கர்மவினை அவர்களை சுடும் கண்டிப்பாக

    Thanks to both for pouring out your thoughts

  4. அந்த மனிதன் மன்னிக்கவே பிறந்த மன்னன்…….., உண்மையான வரிகள்…….., அந்த நல்ல மனிதரை சீண்டினால், சீண்டுபவர்கள் நிச்சயம் தண்டனை அனுபவிப்பார்கள் !

  5. senthil senthil says:

    ஈ. ரா. & சுந்தர்,

    லக்சக்கணக்கான ரசிகர்களின் மனதை பிரதி பலிக்கும் அருமையான பதிவு.

    அப்பா சாமி இந்த கொசுங்க தொல்லை தங்க முடியலட சாமி!

    கொசுத்தொல்லையில் இருந்து தப்பிக்க தலைவரை அரசியல் வலை பின்ன சொல்லி வேண்டும் பக்தன்.

  6. Mahesh Mahesh says:

    fantastic article Mr.Eera. Thanks Sundarji for publishing it.
    தலைவா நல்லவனா இரு
    ஆனால் அநியாயத்துக்கு நல்லவனா இருக்கியே.
    தீர்ப்பு சொல்லும் நாட்டாமை எங்க பொய் ஒளிஞ்சிகிட்டறு. அவரு படம் CD மட்டும் தலைவர் வேணும்.. பேச ரஜினி வேணும். ஆனா அவருக்கு ஒண்ணுன்னா ஒரு நடிகன்ன இல்லேன்னாலும், சங்க தலைவரா குட குரல் குடுக்க தில் இல்லா… போங்கடா நீங்களா உங்க சங்கமும்…. போயி குத்து பாட்டு போட்டு குஷி படுத்துங்க இன்னும் பிச்ச போடவாறு

  7. சுந்தர்: It is not a problem in Tamilnadu only. Look at the Thackreys in Maharashtra. Same isue created there also. India is facing a very ugly regionalism where every State is thinking of other state as an enemy state. Will they say MGR is amalayee like Ajit. or Jaya is from Karnataka. Probably they will if they did not succed in politics. I think thalivar should step in to politics-about right time

    Can a person not congratulate another person fpor speaking his mind? I still feel Mu Ka is behing this because Rajini went to Jaya house and invited her for Soundraya engagament

    There are so many people like me who are outside the country as economic migrants. What happens if the other countries start behaving like this?

  8. sekar sekar says:

    பாட்ஷா படத்தில் தலைவர் அடி வாங்கும் போது அவர் தம்பி சொல்வாரே ….. அடி வாங்குவதற்கு என்றே பிறந்தது போலே என்று…. அது போல ஒவ்வொரு தடவையும் அமைதி காத்தால் எப்படி?

    செல்லாக் காசுக்கு கூட பிரயோசனப்படாத சாக்குவார் தங்கங்கள் குலைகிறது. ஒரு காசுக்கு கூட உபயோகப்படாத சிறு நரிகள் ஊளை இடுகின்றன.

    நடிகர் சங்கம் கையெழுத்திட்டு தன்னை நடு வீதியில் அம்மணமாக்கி கொண்டு விட்டது.

    நடு நிலையான நல்லவனை கை விட்டு நடிகர் சங்கம் முன்னால் தலைவர்கள் MGR , சிவாஜி போன்ற இலட்சிய ஜாம்பவான்கள் உட்கார்ந்த பதவிக்கு இழுக்கு சேர்த்து விட்டார்கள்.

    நடிகர் சங்கம் அடிமை சாசனத்தில் கைஎழுத்து போட்டிருக்கிறார்கள்.

  9. sekar sekar says:

    இறைவா……

    நண்பர்களிடமிருந்து என்னை காப்பாற்று…..

    எதிரிகளை நான் ( ரசிர்கர்கள்) பார்த்து கொள்கிறேன்.

    ————தலைவர்

    எதிரிகளை பா. மா. க வை சந்தர்ப்பம் வந்த போது ஆப்பு வைத்தோம் போன தேர்தலிலே….

    திருமாவளவனுக்கு வரும் தேர்தலிலே பாடம் கற்று கொடுப்போம் வரும் தேர்தலிலே அவர் எந்த கூட்டணியில் இருந்தாலும்.. உறுதி ஏற்போம் இன்றே….

  10. தலைவா நீங்கள் சிவாஜியாக இருந்தது போதும் எம்.ஜி.ஆர் ஆக அவதாரம் எடுங்கள்.

    ரசிகர்களுக்கு சமுதாயத்தில் அங்கீகாரம் ஏற்படுத்தி தருவேன் என்றீர்கள் கடந்த ரசிகர் சந்திப்பில், அது இப்போது உடனடியாக தேவை.

    இப்போது நீங்கள் தமிழகத்தை ஆள்பவர்கள் மற்றும் ஆண்டவர்களின் குணநலன்களை நன்கு அறிந்திருப்பீர்கள். தங்களை வாழ வைத்த தமிழக மக்களின் நலன் காக்க, ஜாதிய,அராஜக மற்றும் பண அரசியலை ஒழித்திட காமராஜரை போன்ற தன்னலமற்ற ஒரு தலைவன் தமிழகத்திற்கு உடனடியாக தேவை. முடிவு உங்கள் கையில் ……

  11. Suresh Suresh says:

    லாஸ்ட் பஞ்ச் செமையான அந்த வலியை சொல்கிறது தலைவா

  12. mayavi mayavi says:

    நான் சில கட்டுரைகளை உங்களுக்கு தர விரும்புகிறேன்
    இது இந்த பக்கத்தில் இருந்து எடுக்கபட்டது
    http://truetamilans.blogspot.com/2010/02/blog-post_22.html#ixzz0gGFVarYx

    ‘படிக்காதவன்’ படத்தின் வெற்றிக்குக் காரணமான ‘ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்; உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி’ பாடல் காட்சிதான் தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிக முறை ஒளிபரப்பப்பட்ட பாடலாக இருக்கும்.

    இருந்தும் ரஜினி இப்போதும் அதே பாடலை மறுபடியும் ஹம்மிங் கொடுத்துக் கொண்டேயிருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். என்றைக்கு அந்தப் பாடலின் அர்த்தம் புரிந்தவராகக் காட்சியளிக்கப் போகிறார் என்றுதான் தெரியவில்லை.

    எதற்கெடுத்தாலும் ‘தமிழ்’, ‘தமிழ்’ என்று தமிழை கொத்துபுரோட்டா போடும் சில அரசியல் வியாபாரிகளின் கூச்சல், தமிழ்த் திரையுலகில் மறுபடியும் சப்தமில்லாமல் தலையெடுத்துவிட்டது. இந்த முறையும் இவர்கள் வாய்க்கு ஊறுகாய் ரஜினிதான். கூடவே துணைக்கு அஜீத்தையும் இழுத்து வைத்திருக்கிறார்கள்.

    ஒருவருக்குப் பாராட்டு விழா என்றால் பேச்சாளர்களைத் தவிர்த்து மற்றவர்களை முறைப்படி அழைக்கலாம். “கண்டிப்பாக வரணும்” என்று சொல்வதோடு முடித்துவிடுவது நாகரிகம்.. “வரலைன்னா சொத்துல பங்கு கிடையாது.. உன்கூட ‘கா..” என்று நட்பு ரீதியாகவும், உறவு முறையிலும் அன்போடு மிரட்டுவதும் ஒரு வகையில் நடப்பதுதான்.

    ஆனால், “வரவில்லையெனில் நீ தொழிலே பண்ண முடியாது.. ஊர்லயே இருக்க முடியாது” என்று சொல்லி அழைப்பது அந்த விழாவையே கேலிக்கூத்தாக்கும் விஷயம். இதைத்தான் கலைஞரின் பாராட்டு விழாவில் செய்திருக்கிறார்கள் திரையுலக சங்கத்தினர்.

    வராவிட்டால் திரையுலகில் நீடிக்கத் தடை.. பணி புரிய முடியாது என்றெல்லாம் மிரட்டி அழைக்கப்பட்டிருப்பதால், வந்தவர்கள் எல்லாம் மனதார வாழ்த்தினார்கள் என்றா கருத முடியும்..? இதுவே கேவலமில்லையா..? ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து “என்னை நாலு வார்த்தை ‘நச்சு’ன்னு வாழ்த்திட்டுப் போடா பேமானி..” என்று மிரட்டி அவர் பயத்தில் எட்டு வார்த்தையில் கவிதை பாடிவிட்டுப் போனால் அதைக் கேட்டும் ஒருவர் நெக்குருகி போய் நிற்கிறாரென்றால் அவர் நிச்சயம் ‘நட்டு கழன்ற கேஸாகத்தான்’ இருக்க முடியும்.

    இப்படியொரு தோற்றத்தை வலுக்கட்டாயமாக முதல்வருக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் திரையுலகத்தினரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும்.

    “ரஜினி, கமல் இருவரும் வராவிட்டால் கூட்டம் வராது.. குத்துப் பாட்டு நடனங்கள், கேளிக்கைகள், கிண்டல்கள், குத்தல்கள் போன்ற கலைநிகழ்ச்சிகள் இல்லையெனில் நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் ஸ்பான்ஸர் கிடைக்காது.. சின்ன ஸ்பான்ஸர் கிடைத்தால் பணம் பெயராது.. பணம் வரவே இல்லையெனில் இவருக்கு பாராட்டு விழா நடத்துவதால் எங்க டிவிக்கு என்ன பிரயோசஜனம்..?” என்று கலைஞர் டிவியின் மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி போட்டுக் கொடுத்த திட்டப்படிதான் அத்தனையும் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்பாக கமலஹாசன் முதல்வரை சந்திக்க அவரது வீட்டுக்கு வந்தார். கமலஹாசன் வரப் போவதை முன்கூட்டியே பெப்ஸியின் தலைவருக்கு பாஸ் செய்த டிவிக்காரர்கள் “கமல்ஹாசனையும் கலைநிகழ்ச்சியில் ஏதாவது ஒண்ணு செய்ய வைச்சிருங்க.. கமல், சி.எம்.கிட்ட பேசும்போது நீங்களும்கூட இருந்து பேசி முடிச்சிட்டீங்கன்னா கமல் தட்ட மாட்டார்” என்று ஒரு புது திரைக்கதை எழுதி சொல்லியனுப்பினார்களாம்.

    தான் மட்டுமே பேச வந்து பெப்ஸியின் தலைவரே இந்த வீட்டில் வரவேற்கிறாரே என்கிற புதுமையில் சபையில் புகுந்த கமலுக்கு அவரே எதிர்பார்க்காத அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் குகநாதன், “ஐயா நீங்களே இவர்கிட்ட சொல்லிருங்க.. ஏதாவது ஒரு படத்தோட வசனத்தை மட்டும் ஒரு பத்து நிமிஷம் பேசுற மாதிரி இருந்தால் போதும்..” என்று கலைஞரிடம் போட்டுக் கொடுக்க.. ‘தேவர் மகன்’ புரியாமல் பார்த்தபடியிருக்க.. “நான் சொல்லிக்கிறேன்.. தம்பி நடிப்பாரு..” என்று கலைஞரும் ‘தானா வந்து மாட்டுறாங்க பாருங்க..’ என்ற நினைப்பில் சொல்லிவிட அன்றைக்கே பத்திரிகைகளில் செய்தி வந்து பரபரப்பூட்டியது கலைஞரின் வசனத்தை கமல் மேடையில் பேசி நடிக்கப் போகிறார் என்று..

    தான் பேச வந்த விஷயத்தைவிட தன்னை சிக்க வைத்த காரண, காரியத்தால் சங்கடமாகிப் போன கமல், பிற்பாடு கலைஞர் டிவியில் இருந்து வந்த தொடர் நெருக்கடி கண்டு கடுப்பாகித்தான் போயிருக்கிறார். கடைசிநாள் வரையிலும் தன்னுடைய நிகழ்ச்சிக்கான நேரம் எவ்வளவு என்பதைச் சொல்லாமலேயே டபாய்த்துவிட்டு முதல் நாள்தான், “ஸ்டெடி பண்ண நேரமில்லை. பிராக்டீஸும் முடியலை.. சொதப்பலா நான் எதையுமே செய்ய மாட்டேன்னு உங்களுக்குத்தான் தெரியுமே.. விட்ருங்க..” என்று ஒரே போடாகப் போட்டுத் தப்பித்துக் கொண்டாராம்.

    இந்த அதிர்ச்சியை சமாளிக்கத்தான் சம்பந்தப்பட்ட கிளிப்பிங்ஸை போட்டு முதல்வரை அழுக வைத்து சமாளித்துவிட்டார்கள். ஆனாலும் அஜீத் கொடுத்த அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் இதே அஜீத்துக்கு பத்திரிகை வைத்து அழைப்புவிடுக்கப் போனவர்கள் கொடுத்ததும் ஒருவிதத்தில் அதிர்ச்சிதான்.

    “நானும் வாழ்த்துறேன்.. பொதுவா நான் இந்த மாதிரி பங்ஷன்ல கலந்துக்குறதே இல்லையே.. என்னுடைய பங்களிப்பா எவ்வளவு வேணுமா சொல்லுங்க.. அதைக் கொடுத்துடறேன்..” என்றுதான் அஜீத் சொல்லியிருக்கிறார். ஆனால் அழைக்கப் போனவர்கள் அப்போது வைத்த நக்கலும், கிண்டலும், மிரட்டலும்தான் அஜீத்தை அப்படி பேச வைத்துவிட்டது என்கிறார்கள்.

    அந்தப் பேச்சுக்கு ரஜினி மட்டுமல்ல அரங்கில் இருந்த முக்கால்வாசி பேரும் கைதட்டி ஓய்ந்துதான் போயிருக்கிறார்கள். இப்போது நெட்டில் ஓடும் கிளிப்பிங்ஸ்களை கேட்டுப் பாருங்கள். தெளிவாகவே தெரிகிறது. மறுநாளில் இருந்து பல இளம் நடிகர்கள், நடிகைள், இயக்குநர்கள், பிரபலங்கள் என்று பலருமே அஜீத்திற்கு போன் செய்தும், மெஸேஜ் அடித்தும் பாராட்டித் தள்ளிவிட.. தனது எதிர்ப்புக் குரல் திரையுலகிலும் மையமாக சுழன்றுவருவதை அஜீத்தும் புரிந்து கொண்டிருந்தார்.

    அதேவேளை கலைஞர் டிவி நிர்வாகிகளையும், விழா அமைப்பாளர்களையும் அழைத்து “கூப்பிட்டு வைச்சு கேவலப்படுத்திட்டீங்களே..” என்று கலைஞர் காய்ச்சி எடுத்த பிறகுதான் இந்த பிரச்சினை வேறு முலாம் பூசி வெடிக்கத் துவங்கியுள்ளது.

    சிங்கப்பூர் கலை நிகழ்ச்சி, நடிகர் சங்க நிகழ்ச்சிகள், நெய்வேலி ஊர்வலம், இராமேஸ்வரம் ஊர்வலம், ஈழத் தமிழருக்கான உண்ணாவிரதப் போராட்டம் என்று அத்தனைக்கும் அஜீத்தை அழைப்பதற்காக ஒரு தனிப்படையையே போட வேண்டிய நிலைமை என்று இருந்ததால் நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி அஜீத் மீது காட்டமாகவே இருந்தார். அதனை நக்கீரன் பத்திரிகையில் அப்படியே பேட்டியாக அளித்திருந்தார்.

    அஜீத்திற்கு எதிராகப் பேட்டியளிக்க கட்சி நடிகர், நடிகையர் தவிர மற்ற பொதுவானவர்கள் யாரும் முன் வராததால் சம்பந்தப்பட்ட டிவி வட்டாரத்தில் இருந்து கை காட்டிய பின்பே ஜாக்குவார் தங்கம் லைம்லைட்டிற்கு வந்ததாக கோடம்பாக்கத்தில் சொல்கிறார்கள். அவருடைய பேட்டியையே யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட.. விஷயத்தை பெரிதாக்கியே தீருவது என்ற நோக்கத்தில் உருவானதுதான் அவருடைய வீடு தாக்கப்பட்டது என்கிற சினிமா திரைக்கதையில் உருவான புகார் நடவடிக்கை.

    அஜீத்தின் தூண்டுதல் என்று சொல்லி புகாரை பதிய வைத்து அதையை நடிகர் சங்கத்திலும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் ஜாக்குவார் தங்கம். அதே நடிகர் சங்கத்தில் வைத்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த ஜாக்குவார், “ரஜினி ஒரு ஜோக்கர். அவர் சொன்னதையெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க..” என்று சொன்னது மிகப் பெரிய அதிர்ச்சி.

    இதற்கு இந்த நிமிடம்வரையிலும் நடிகர் சங்கத்தில் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. ஆனால் கூட்டப்பட்ட சமரச பேச்சுவார்த்தையில் அஜீத் மன்னிப்பு கேட்டுத்தான் ஆக வேண்டும் எனவும், ரஜினிகாந்திற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அறிவித்து முடித்திருக்கிறார்கள். ஜாக்கிவாரின் ரஜினி பற்றிய கமெண்ட்டுக்கும், அஜீத் பற்றிய பேச்சுக்கும் எந்தவித ரியாக்ஷனும் அந்த அறிக்கையில் இல்லவே இல்லை.

    நடிகர் சங்கத்தின் நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ரஜினி வந்தால்தான் சிங்கப்பூரில் கல்லா கட்ட முடியும் என்று சொல்லித்தான் அழைத்தார்கள். வந்தார். இப்போது வங்கியில் கல்லா நிரம்பி வழிகிறது. சென்சிடிவ்வான காவிரி பிரச்சினையில் தலையைக் கொடுக்க வேண்டாம் என்று மறுத்தும் வராமல் போனால் கர்நாடகாவிற்கு ஆதரவாளன் என்று பட்டம் சூட்டிவிடுவார்கள் என்று பயந்துபோய் வந்து பேசியதில் இரண்டு பக்கமும் குட்டு வாங்கிக் கொண்டு போனார். விதி வலியதாச்சே.. சங்கத்தின் மூலம் நடத்திய ஈழப் போராட்டத்திற்கு வந்தே தீர வேண்டும் என்றார்கள். வந்தார். பேசினார். தன் கடமையை சங்கத்திற்காக முடித்துவைத்துவிட்டுப் போனார்.

    நடிகைகள் பற்றி ஆபாசமாக எழுதிய ‘தினமலர்’ பத்திரிகைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்திற்கு வந்து இரு தரப்பினரையுமே பேலன்ஸ் செய்வதைப் போல் பேசிவிட்டுச் சென்றார். அதையே கிண்டல் செய்தவர்கள் பின்பு வந்து பேசியவர்கள் பேசிய பேச்சுக்களால் விளைந்த விளைவுகளைப் பார்த்த “ரஜினி பேசியது சரிதான்..” என்றார்கள் கடைசியில்.

    ‘ஜக்குபாய்’ திரைப்படம் இந்த 25-வது நாளான இன்றைக்கு சென்னையில் மட்டும் வெற்றிகரமாக 3 தியேட்டர்களிலாவது ஓடுகிறது என்றால் அதற்குக் காரணம் ரஜினிதான். ஏதோ தன்னால் முடிந்த அளவுக்காவது படத்தின் எதிர்பார்ப்பைக் கூட்டிவிடுவோம் என்ற எண்ணத்தில் படத்தின் கதையைப் பற்றிச் சொல்லி கிக் ஏத்தினார். ஆனாலும் படம் பெயிலியர் ஆனது வேறு கதை.

    ‘ஜக்குபாய்’ படத்தின் பிரிவியூவுக்கும் அழைத்தார்கள். கூட்டத்தோடு கூட்டமான பிரிவியூக்களுக்கு வராதவர் இந்த அழைப்பை மட்டும் ஏற்று வந்தார். நடிகர் சங்கத் தலைவருக்கு திருப்தியளிக்கும்வகையில் அவருக்கு இன்றுவரையிலும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்திருக்கிறார் ரஜினி. அப்படியிருந்தும் அந்தக் கூட்டத்தில் அவருக்கு ஆதரவாகப் பேச யாருமில்லை.. இதுதான் ரஜினியின் ராசி..!

    ஏதோ இந்த சினிமா அமைப்புகளினால்தான் திரையரங்குகளில் திரைப்படங்கள் ஓடுகின்றன என்று அவர்கள் நினைக்கிறார்கள். கலைஞர் டிவிக்கு காசு பெயர்வதற்கு நாங்கள் ஏன் உயிரைக் கொடுத்து உழைக்க வேண்டும் என்கிறார்கள் நடிகர், நடிகைகள். ஒருவகையில் இவர்கள் சொல்வதும், கேட்பதும் நியாயம்தான்.

    உண்மையான பாராட்டுவிழா என்றால் எதற்கு ஆடல், பாடல், கேளிக்கைகள்..? பேச்சு மட்டும் போதாதா..? பேசியே தீருவது என்றால் ஒருவரைப் பற்றி எத்தனை முறை, எத்தனை மேடைகளில்தான் பேசுவார்கள். அவர்களுக்கே எரிச்சலாக இருக்காதா..? கோபம் இருந்தாலும் மறைத்துக் கொண்டு, எரிச்சல் இருந்தாலும் இல்லாமல் காட்டிக் கொண்டு பேசிவிடு என்று சொன்னால் அந்தப் பேச்சில் என்ன உண்மையான அன்பா வெளிப்பட்டிருக்கும்..?

    முதல்வர் இந்த பாராட்டு பற்றிய விஷயத்தில் உலகத்திலேயே மிக, மிக வித்தியாசமான மனிதர். இப்படியொரு விளம்பர வெறி பிடித்த மனிதரை வேறு எந்த லோகத்திலும்கூட நாம் பார்க்க முடியாது. அவருக்குத்தான் புரியாது என்றாலும் இந்த சினிமாக்காரர்கள் ஏன் இப்படி அநியாயத்திற்கு கூஜா தூக்குகிறார்கள்..? தூக்கினால் தூக்கட்டும். தூக்க மாட்டோம் என்பவர்களை விட்டுவிட வேண்டியதுதானே..? ஊரைவிட்டே ஒதுக்குவோம் என்று சொல்லும், இவர்களுக்கும் கிராமங்களில் மரத்தடி பஞ்சாயத்து செய்யும் நாட்டாமைகளுக்கும் என்ன வித்தியாசம்..?

    ரஜினியும், அஜீத்தும் முதல்வரை சந்தித்த அன்று மாலை நடந்த ‘பாடகசாலை’ படத்தின் கேஸட் வெளியிட்டு விழாவில் பேசிய பெப்ஸியின் தலைவர் குகநாதன், “நாங்கள் பண்பாகவும் கேட்போம். பணிவாகவும் கேட்போம். வற்புறுத்தி அல்லது மிரட்டியும் கேட்போம். என்ன செய்துவிட முடியும் இவர்களால்? அப்படியும் கேட்காவிட்டால் அவர்களை எப்படி ஓரங்கட்ட முடியும் என்ற வழிமுறையும் எங்களுக்குத் தெரியும்…” என்று ஏதோ வில்லன் ரேஞ்சுக்கு பேசியிருக்கிறார். வருத்தப்பட வேண்டிய விஷயம். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பதைப் போல பெப்ஸி தலைவருக்குள் இருந்த ‘உடன்பிறப்பு’ பாசம் வெளியே வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

    கலைஞரின் பாராட்டு விழாவுக்கு வந்தே தீர வேண்டும் என்று பல கலைஞர்களை மிரட்டிப் பணியவைத்த இவர்கள், நடிகர் சங்கத்தில் ஆயுள்கால உறுப்பினராக இருக்கும் செல்வி ஜெ.ஜெயலலிதாவை வற்புறுத்தினார்களா என்று தெரியவில்லை. புரட்சிக் கலைஞர் விஜயகாந்தை ஏன் வரவில்லை என்று கண்டித்தார்களா என்று தெரியவில்லை. கிராமத்து நாயகன் ராமராஜனுக்கு வராததற்கான காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்களா என்றும் தெரியவில்லை. எஸ்.எஸ்.சந்திரனுக்கு தந்தி அடித்தாவது அழைத்தார்களா என்பதும் தெரியவில்லை. ‘திரையுலக அஷ்டாவதனி’ விஜய டி.ராஜேந்தரை அழைக்க வண்டி போனதா என்றும் தெரியவில்லை. அவருடைய புதல்வர் நடிகர் சிம்பு என்ன காரணம் சொல்லி லீவ் லெட்டர் கொடுத்தார் என்பதும் தெரியவில்லை.. இது எல்லாவற்றையும்விட, குகநாதன் செயலாளராக இருக்கும் ‘தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்க’த்தின் தலைவர் இயக்குநர் விசு ஏன் வரவில்லை என்று அவரது சட்டையைப் பிடித்துக் கேட்டார்களா என்றும் தெரியவில்லை. ஆனால் இவர்களையெல்லாம் ஏன்.. எதற்கு.. என்று கேட்க முடியவில்லை.

    இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பொதுவானவனாக யாருமே இருக்க முடியாது என்பதுதான். ஒன்று நீ எனக்கு நண்பனா இரு. அல்லது அவனுக்கு நண்பனாக இரு. இரண்டுமே இல்லாவிடில் நீ எனது எதிரிதான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள் இரு தரப்பு அரசியல்வியாதிகளும். அந்த வியாதி இப்போது சினிமாவுலகத்தையும் தொற்றிக் கொண்டுள்ளது.

    அந்த நிகழ்ச்சிக்கு வராதவர்களே தமிழ் இன உணர்வு இல்லாதவர்கள் என்கிற ரீதியில் பேச்சு எழுவது பிரச்சினை இப்போது எந்தத் திசையில் போகிறது என்பதை உணர்த்துகிறது. ஜாக்குவார் தங்கம் தான் சார்ந்திருக்கும் நாடார் இனத்தினரின் பெயரை போஸ்டரில் அடித்து மிரட்டிக் கொண்டிருக்கிறார். இனப் பிரச்சினையில் உட்புகுந்து இப்போது ஜாதிப் பிரச்சினையாகவும் உருமாறி வருகிறது. இந்த லட்சணத்தில் இதற்கு திருமாவளவனின் ஆதரவும் ஜாக்குவார் தங்கத்துக்காம். இப்படி எதையாவது செய்து வருங்கால முதல்வர் லிஸ்ட்டில் இடம் பிடித்துவிடலாம் என்று தீர்மானித்திருக்கிறார் திருமா. திருமாவின் ஆதரவு ஜாக்குவாருக்கு என்றவுடன் ரஜினிக்கும், அஜீத்துக்கும் ஆதரவு ஈரோட்டு நாயக்கரின் பேரன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடமிருந்து கிடைத்திருக்கிறது. சபாஷ்.. மெல்ல மெல்ல அரசியலும் உட்புகுகிறது. எங்கே போய் முடியும் என்றுதான் தெரியவில்லை.

    இதுவரையிலும் ரஜினி என்னும் தமிழின் சூப்பர்ஸ்டாரின் இருப்பிடத்தை அசைக்க முடியாத இயலாமையில் முடியாதவர்கள் பலரும் வைக்கின்ற ஒரு முட்டாள்தனத்தை இன்றைக்கு சினிமாக்காரர்களே முன் வைப்பது கேவலமானது. அவருடைய புகழ் அவர்களுக்கு வேண்டும்.. பணம் அவர்களுக்கு வேண்டும்.. ஆனால் அவர் மட்டும் வேண்டாம் என்பது இவர்களது புதிய சூத்திரமாக இருக்கிறது. வெட்கக்கேடானது.

    கலையில் மொழி இல்லை என்று இவர்களுடைய முன்னோர்கள் சொல்லியதால்தான் தென்னிந்திய நடிகர் சங்கத்தை எம்.ஜி.ஆர்., சிவாஜி, நாகேஸ்வரராவ், என்.டி.ராமாராவ், ராஜ்குமார், பிரேம்நஸீர், மது என்று தென்னிந்திய ஹீரோக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆரம்பித்தார்கள். காலப்போக்கில் அவரவர் தாய் மொழியில் சங்கங்களை ஆரம்பித்தாலும், இந்த மொழித் திரைப்படங்கள் அடுத்த மொழியிலும், அடுத்த மொழித் திரைப்படங்கள் இந்த மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுத்தான் வந்தன. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ராஜ்குமார், நாகேஷ்வரராவ், பிரேம்நசீர் என்று அக்கால ஹீரோக்கள் அனைவருமே தங்களுக்குப் பொருத்தமான அடுத்த மாநிலக் கதைகளை தனதாக்கி அதில் வெற்றியும் பெற்றியிருக்கிறார்கள்.

    இன்றைக்கு ‘தமிழ்..’ ‘தமிழ்’ என்று பேசத் துவங்கியிருக்கும் பெப்ஸியின் தலைவர் குகநாதனே தெலுங்கிலும் எத்தனையோ திரைப்படங்களுக்கு பணியாற்றியிருக்கிறார். தமிழைவிட தெலுங்கில்தான் குகநாதன் கதை விஷயத்தில் ரொம்பவே பிரபலம்.. தெலுங்குலகில் ‘ரிப்பேர் திலகம்’ என்பார்களாம் அவரை. முடிச்சவிழ்க்க முடியாத ‘திரைக்கதை முடிச்சுக்களை அவிழ்ப்பதில் கில்லாடி குகன்’ என்று பாராட்டப்பட்டவர் அவர். ஆனாலும் இன்றைக்கு தான் தெலுங்கிலும் மற்ற மொழிப் படங்களிலும் பணியாற்றியதையும், சம்பாதித்தையும் மறந்துவிட்டு தமிழைத் தூக்கிப் பிடிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்.

    ஆரம்பக் காலத்தில் ஏவி.எம்.மின். ஆஸ்தான கதாசிரியராக இருந்த குகநாதன்தான் எம்.ஜி.ஆர் நடித்த ‘குமரிக்கோட்டம்’, ‘புதிய பூமி’ படங்களுக்கு கதாசிரியர். எஸ்.பி.முத்துராமன் முதல்முதலாக இயக்கிய ‘கனமுத்துப்பாப்பா’வின் கதாசிரியரும், தயாரிப்பாளரும் இவர்தான். சிவாஜியின் ‘ராஜபார்ட் ரங்கதுரை’ படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். அஜீத் நடித்த “மைனர் மாப்பிள்ளை” படத்தை இயக்கி தயாரித்ததும் குகநாதன்தான். ஆனால் இதுதான் தமிழில் குகநாதன் தயாரித்த கடைசி படம்.

    ஒருவேளை அந்தப் படத்தின் தயாரிப்புப் பணியில் தனிப்பட்ட முறையில் அஜீத்திற்கும், குகநாதனுக்கும் இடையில் ஏதாவது மோதல் இருந்திருக்குமோ என்கிற ரீதியில் பத்திரிகையாளர்கள் இப்போது தோண்டித் துருவிக் கொண்டிருக்கிறார்கள்.

    குகநாதனின் சர்ச்சைக்கிடமான அந்தப் பேச்சு சற்று ஓவரானது என்பதை திரையுலகப் பிரபலங்களே ஒத்துக் கொள்கிறார்கள். இப்போதைய சமாதானத்துக்காக அறிக்கையில் கையெழுத்திட்டதாக ராதாரவி சொல்கிறாராம். ஆனாலும் குகநாதனின் அந்த மேடைப் பேச்சு நடிகர்களை இப்போது உசுப்பிவிட்டிருக்கிறது.

    பல கண்டன போன்கால்களுக்கும், வருத்தங்களுக்கும் பிறகு நடிகர், நடிகைககளை விழாவுக்கு வந்தே தீர வேண்டும் என்று பெப்ஸி அமைப்பின் பெயரில் குகநாதன் மிரட்டியதாகவும், கட்டாயப்படுத்தியதாகவும் இப்போது நடிகர் சங்கத்தின் மூலம் முறைப்படியான புகார், தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாம். குகநாதனின் பேச்சு எல்லை மீறியது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். நடிகர் சங்கத்தின் இந்த நடவடிக்கை சரிவர பத்திரிகைகளில் வெளிவராமல் போயிருக்கிறது.. ஏன் என்று தெரியவில்லை.

    அஜீத் இப்போதுவரையிலும் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி வருகிறார். ஆனாலும் “நமக்குள்ளதான.. ஒரு பேப்பர்ல எழுதி அறிக்கைவிட்டுட்டு ஆக வேண்டியதை பாருங்க.. அடுத்த நாளே எல்லாரும் மறந்திருவாங்க..” என்ற ரீதியில் அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடந்துதான் வருகின்றன.

    இடையில் அவர் தெம்பாக இருப்பதற்கு இன்னுமொரு அரசியல் காரணமும் உண்டு. தயாநிதி அழகிரிக்கு அடுத்து கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஜீத். மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை வெளியிடமாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கினாலும், மதுரையின் பட்டத்து இளவரசரால் அந்தத் தடையை நொடியில் தூக்கிவிட முடியும் என்கிறார்கள் சிலர்.

    இதற்கு, நயன்தாராவுக்கு முன்பு ஒருமுறை பெப்ஸி அமைப்பு தடை போட்டிருந்தபோது “ஆதவன் படத்தின் ஹீரோயின் நயன்தாராதான்” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு சப்தமில்லாமல் பெப்ஸியின் அந்த தடை உத்தரவை குப்பைக் கூடைக்குப் போகச் செய்ததை உதாரணம் காட்டுகிறார்கள் பத்திரிகையாளர்கள்.

    தமிழ்.. தமிழ்.. என்று திரையுலகில் இன்றைக்குச் சொல்பவர்களெல்லாம் ஒரு காலத்தில் ஐந்து மொழியிலும் தங்களது படங்களை ஏதாவது ஒரு ரூபத்தில் ஓட வைத்துக் கொண்டிருந்தவர்கள்தான். அன்றைக்கு அவர்கள் சம்பாதிக்க அத்தனை மொழிகளும் வேண்டும்.. அத்தனை மொழிக் கலைஞர்களும் வேண்டும் என்று ஆளாய்ப் பறந்தவர்கள் இன்றைக்கு சூடு குறைந்து, சுதியிறங்கி மைக் மட்டுமே மிச்சம் என்ற நிலைமைக்கு வந்த பின்பு தமிழ் மட்டுமே நம் மொழி என்று பேசுவது நயவஞ்சகத்தனம்.

    தாங்கள் கலைஞரை சந்தித்த பிறகும் தங்களுக்கு எதிராகக் கண்டன அறிக்கையும், தடைகள் வருவதையும், தமிழின் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றபோதும் சங்க அமைப்பின் பெயரில் தங்களை நோக்கி கல்லெறியும் சம்பவங்களைப் பார்க்கின்ற இந்த நேரத்திலாவது ரஜினியும் அஜீத்தும் இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை புரிந்து கொண்டால் அவர்களுக்கு நல்லது.

    ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களைப் பகைத்துக் கொண்டால் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் அதோ கதிதான் என்பதை முதலில் கலைஞரும், பின்பு ஜெயலலிதாவும் இப்போது மீண்டும் கலைஞரும் அவ்வப்போது பலருக்கும் உணர்த்தி வந்தாலும் அனுபவப்பட்டவர்களே புரியாததுபோல் இருப்பதும், நடிப்பதும் ஏன் என்றுதான் தெரியவில்லை.

    இந்த வெட்கக்கேட்டை செய்த, செய்யும் இருவருமே கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் இந்தக் கலைத்துறையின் துரதிருஷ்டம்.

  13. RAJA RAJA says:

    திரு - ஈ.ரா. என்னும் இராமநாதன்,

    நன்றி ,ஒவ்வொவரு ரசிகனின் மனதில் உள்ளதை அப்படிஎ சொல்லி உள்ளீர்கள் ,இதை படிக்கும் பொழுது என் கண்கள் கலங்கியது,ரசிகனான நமக்கே கண் கலங்கும் போது,இதை அனுபவித்து கொண்டிருக்கும் நமது தலைவரின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும்.

    நன்றி கெட்ட மனிதர்கள் தான் நடிகர் சங்க நிர்வாகத்தில் உள்ளார்கள்

  14. B. Kannan B. Kannan says:

    டியர் சுந்தர்,
    அருமையான பதிவு..
    ஈ. ரா பதிவும் எங்களின் மன நிலையை வெளிப்படுத்தியது..
    யார் இந்த பித்தளை.. தலைவரை பற்றி பேச என்ன
    யோக்யதை இருக்கு..
    குகநாதன் மற்றும் சேகரும் தலைவர் என்ன தப்பு பண்ணார் என்று கண்டனம் சொல்றாங்க..
    Where is sarath?
    For marketing he needs thalaivar. For backing up he needs thalaivar..
    At this moment what he should have done.. Min.a letter supporting our
    thalaivar stance..
    BUT?????????
    These fellows should not be reprieved..
    கண்டவனுங்க எல்லாம் பேசுறதை கேட்க வேண்டியதா இருக்கு..
    For this too thalaivar will not give any response..
    These press too (not all) is trying to cash in on this situation..
    Thalaivar has to take a GOOD decision.. Take this as stepping stone and
    enter politics.. We r here for u always Thalaivaa..
    Expecting that hour to come quickly!
    ஏதாவது தவறான வார்த்தை வந்திருந்தால் தவறாக எடுதுக்கொள்ள
    வேண்டாம் சுந்தர்..
    கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
    பா. கண்ணன்.

  15. மிக அருமையான பதிவு, ஒவ்வொரு வரியும் ரசிகனின் உணர்வை பிரதிபளிகிறது.

  16. சுந்தர்ஜி,

    சில நாட்களாக நான் வேறொரு பர்சனல் பிரச்னையில் இருந்ததால் (அது இன்னும் முடியவில்லை) என்னால் இந்த நிகழ்வுகளை உடனே அறிந்துகொள்ள முடியவில்லை. நண்பர் டாக்டர் பிரதீப் அவர்கள் போன் செய்தபோதுதான் இவற்றை பற்றியே எனக்கு தெரிய வந்தது.

    இப்போது உ(ந)ம் வலைப்பதிவை பார்த்தும், படித்தும் அணைத்து விவரங்களையும் தேர்ந்து கொண்டேன். அஜித் பேசியதும், தலைவர் அதற்க்கு எழுந்து நின்று கை தட்டியதும், அதற்க்கு பின் நிகழ்ந்த சில, பல நிகழுவுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பது என் தாழ்மையான கருத்து.

    முதலில், நண்பர் ஈ. ரா. அவர்களின் மிக சிறந்த முறையில் எழுதப்பட்ட இந்த கண்ணியம் மிக்க கட்டுரை, ரஜினியை பற்றி தரக்குறைவாக பேசும், அறிக்கை விடும் மிருகங்களின் காதுகளிலோ, அறிவிலோ (இருந்தால்தானே என்கிறீர்களா?) ஏறுமா என்பதே சந்தேகம் தான். ஆனால், நடுநிலையாளர்கள் (இப்படி ஒன்னு தமிழ் நாட்ல இருக்கோ?) இதனை படித்து உண்மை நிலையை புரிந்து கொண்டால் நலம். ஈ. ரா. அவர்களின் இந்த சிறந்த படைப்பு, நம் போன்ற ரசிகர்களால் நெட்டில் பரப்ப பட வேண்டும். அதற்க்கு ஈ. ரா. மறுப்பு சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன். நன்றி ஈ. ரா. உங்களின் அருமையான கட்டுரைக்கு. உங்களை போன்ற ரசிகர்களை பெற்றதற்கு தலைவர் உண்மையிலேயே பெருமை பட வேண்டும் - இவ்வளவு கொந்தளிப்பான சூழலிலும் நீங்கள் தன்னிலை மறக்காமல், மிருகங்களையும் மனிதர்கள் போல் மதித்து கட்டுரை எழுதியதற்கு.

    சுந்தர்ஜி, உங்களுக்கும் நன்றி. ரசிகர்களை ஒரு கட்டுக்குள் அமைதியாக கட்டுகோப்புடன் இருக்குமாறு கேட்டுகொண்டமைக்கு. "என்ன தேசமோ" எனக்கு மிகவும் பிடித்த வரிகளை கொண்ட பாடல். அந்த படம் போலவே, இன்றைய சூழலும் அமையும் என்று தலைவரோ, பாலு மகேந்த்ராவோ, இளைய ராஜாவோ அல்லது வைரமுத்துவோ நினைத்திருப்பார்களா?

    நண்பர் அன்புஅரண் கூறியதை போன்றே நானும் நினைக்கிறேன். இதில் தேவைக்கு அதிகமாகவே தலைவரை தாக்கி பேசும், "ஜாகுவார்" என்ற அழகிய தமிழ் பெயரை வைத்துக்கொண்டிருக்கும் ஒரு "தகர டப்பா", துள்ளும் துள்ளலை பார்த்தாலே தெளிவாக தெரிகிறது - HE HAS A VESTED INTEREST IN THE LAND SCAM ABOUT TO UNRAVEL. ஜாகுவார் தகரம் யார் யாருக்கு பினாமியாக செயல்பட்டு கொண்டு சினிமா தொழிலாளர்கள் பெயரில் நிலங்களை அபகரிக்க பார்த்துக்கொண்டு இருக்கிறானோ, யாருக்கு தெரியும்? அத்தகைய சூழ்நிலையில், ரஜினி பொது மேடையில், முதல்வர் முன்னிலையிலேயே, நிலங்களை ஏழை தொழிளார்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும். ஏற்கனவே பணத்தில் புரள்பவர்கள் ஒதுங்க வேண்டும் என்றும் சொன்னால், தகர தமிழனின் வியாபாரம் படுத்து விடாதா? அவன் இந்த scheme மூலமாக எவ்வளவு தொழிலாளர்களிடம் கட்ட பஞ்சாயத்து செய்து, நிலங்களை அபகரிக்க பார்த்தானோ? அதில் தலைவர் ரஜினி முட்டு கட்டை போட்டால், தகர தமிழனின் தன்மானம் சும்மா இருக்குமா?

    இதற்க்கு நடுவில், வி. சி. குகநாதன் என்னும் ஒரு வெத்து வேட்டு, அறிக்கை என்ற பெயரில் Open Mafia Threat விடுத்து இருக்கிறான். இவன்தான் FEFSI என்னும் திரை தொழிலார்களுக்கான அமைப்பின் இப்போதைய தலைவராக இருப்பவன். இந்தியாவில், தொழிலாளர் சங்கம் (labour union) என்ற அமைப்பே, மாபியா கும்பலாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டன. பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் உள்ள நிலக்கரி மாபியா உலக புகழ் பெற்றது. கோவை தொழிலாளர்கள் மாபியா கூட வன்முறைக்கு பேர்போனது. எனவே, FEFSI அமைப்பும் இப்போது மாபியா போன்று செயல்படுவதில் ஆச்சர்யமே இல்லை. இதில் என்ன ஆச்சர்யம் என்றால், இந்த குகநாதன் விட்டிருக்கும் அறிக்கையே ஒரு மிரட்டல் கடிதம் போன்று அமைந்திருப்பதுதான். இவ்வாறு பொதுமக்கள் முன்னிலையிலே விடப்படும் அறிக்கையே இத்துனை மிரட்டலாக இருந்தால், இவன் உண்மையிலேயே அஜித்தை மிரட்டியிருக்க வாய்ப்புகள் மிக அதிகம் என்பது தெளிவு. நிறைய நடிகர்கள் வந்தால்தான், சேனல்கள் நிறைய விலைக்கு அந்த நிகழ்ச்சியினை வாங்கும். அதில் இவனை போன்ற பேட்டை ரவுடிகள் கமிஷன் அடிக்க முடியும். இதற்காகவே குகநாதன், ஜாகுவார் தகரம், ராதாரவி, மற்றும் இவர்களை போன்ற மனித போர்வையில் உள்ள மிருகங்கள் சில, பல சங்ககளின் தேர்தலில் குடிமி பிடி சண்டை போட்டு தேர்வு பெற்றதாக சொல்லிக்கொண்டு அவற்றினை கைப்பற்றி அராஜகம் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

    இவர்களுடைய இப்போதைய வருத்தமே, அஜித் அவர்களின் ரவுடி தனத்தை பொதுவில் பேசி பொதுமக்களிடம் கேட்ட பெயரை வாங்கி கொடுத்து விட்டதுதான். Ajith has called a spade, a spade. Thalaivar, as is his wont, has openly appreciated Ajith thru his standing ovation.

    இதனால், இந்த ரௌடிகள் செய்யும் திருட்டுத்தனம் பொதுமக்கள் மத்தியில் தெரிந்துவிட்டதுதான் அவர்களின் ஆத்திரத்திற்கு காரணம். இதன் காரனகர்த்தாக்களான அஜித் மற்றும் ரஜினி மீது தங்களின் ஆத்திரத்தை இவ்வாறு தமிழ் முலாம் பூசி மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள் இந்த ரௌடிகள்.

    பொது மக்கள் இதனை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள் என்பது திண்ணம். ஏனெனில், அவர்களுக்கு தகரமும் யாரென்று தெரியாது. குகநாதனும் எவனென்று தெரியாது. அப்படியே தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், தோண்ட, தோண்ட இவர்கள் எப்பேர்பட்ட அயோக்யர்கள், கயவர்கள், கற்பழிப்பாளர்கள் போன்ற உண்மைகள்தான் போலீஸ் ரேகோர்டுகளிளிருந்து தெரிய வரும்.

    ரசிகர்கள் யாரும், இந்த அயோக்கியர்களின் உளறல்களை பொருட்படுத்த வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். ரசிகர்களுக்கு இந்த கயவர்களின் அறிக்கைகளை படித்தவுடன் ரத்தம் கொதிக்கும் என்று எனக்கு தெரியும். எனக்கும் கூடத்தான் இந்த செய்திகளை படித்தவுடன் ரத்தம் கொதித்தது. ஆனால், சிறிது பொறுமையாகவும், நிதானமாகவும் யோசித்தால் ஆத்திரப்படுவதால் ஒரு பயனும் இல்லை என்று தெளிவாகும்.

    ரசிகர்கள் ஆத்திரப்பட்டு, இந்த கயவர்களின் இருப்பிடத்திற்கு போய் ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிட்டால், அவர்கள் சொன்ன அனைத்தும் உண்மை என்பது போல் ஆகி விடும் அல்லவா? அவர்கள் இவ்வாறு அறிக்கை விட்டதன் காரணமே, ரசிகர்களை தூண்டி வன்முறையில் இறங்க வைக்க வேண்டும் என்பதற்க்காகத்தானே? இதனால் ரஜினிக்கு கேட்ட பெயர் வருவதோடு மட்டுமின்றி, தகர கயவன் அறிக்கையில் சொன்னதுபோல், தமிழர் மற்றும் தமிழர் அல்லாதோர் ஆகியோருக்கு இடையே ஒரு கலவரத்தையே மூட்டி விட காரணம் ஆகி விடும். எனவே, ரசிகர்கள், இந்த நேரத்தில் பொறுமை காக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆத்திர படுவது எளியது. பொறுமையாக இருப்பது, அதுவும் தூண்டி விடப்படும் நேரத்தில் பொறுமை காப்பது என்பது, மிகவும் கஷ்டம்தான். ஆனால், தலைவர் ரஜினிக்காகவும், அவரின் நற்பெயருக்கு களங்கம் நேராமல் இருப்பதற்காகவும், நாம் பொறுமையாக இருந்தே ஆகவேண்டும்.

    இப்படியே போய்கொண்டிருந்தால், நாட்டிலுள்ள தெரு பொறுக்கிகள் எல்லாம், தலைவரை துச்சமாக மதித்து கேவல படுத்திக் கொண்டே இருப்பார்களே, என்று கேட்கும் நண்பர்களுக்கு நான் சொல்லி கொள்வது இதுதான்:

    நீங்கள் திருப்பி அறிக்கை விடுவதாலோ, அல்லது அவர்கள் வீட்டின்மேல் கல் எறிந்தாலோ மட்டும், தகரம் போன்ற கயவர்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி விடுவார்களா என்ன? நிச்சயம் மாட்டார்கள். நான் மேலே கூறியபடி, அவர்கள், பிரச்னையை தமிழர், தமிழருக்கு எதிரிகள் என்று திசை திருப்பி குளிர் காய பார்ப்பார்கள். அவர்களுக்கு இதனால் ஒரு நஷ்டமும் இல்லை. மக்களிடம் நல்ல பேர் உள்ளவன்தான், தன பேரை தக்க வைக்க பாடு படுவான். கெட்டவனோ அல்லது மக்களுக்கு யாரென்றே தெரியாதவனோ, எதை பற்றி கவலை பட போகிறான்? சற்று யோசியுங்கள். நல்லவனாக இருப்பது கஷ்டம்தான். அதுவும், கழகங்களின் ஆளுகைக்கு உட்பட்ட தமிழ்நாட்டில், நல்லவனாக வேஷம் போடுவது மிக எளிது. ஆனால், நல்லவனாகவே வாழ்வது ரொம்ப, ரொம்ப கஷ்டம்.

    இதற்க்கு விடிவுகாலமே இல்லையா என்றால், ஒரு நண்பர் கமெண்ட் செய்திருந்தபடி "இதுவும் கடந்து போம்". எனக்கு (ever optimist) என்ன தோன்றுகிறது என்றால், இத்தகைய சம்பவங்கள் தலைவருக்கு வெறுப்பை தோற்றுவித்தாலும்கூட, சிறுக, சிறுக அவரின் மனத்தை வேறொரு பாதையில் பயணிக்க வைக்கும் சக்தி இத்தகைய சம்பவங்க்ளுக்கே உண்டு. பாபா பட பெட்டி கடத்தல் சம்பவம், ரஜினியின் சொந்த படம் எனவே சொந்த பிரச்னை என்று வைத்துக்கொண்டாலும், இந்த சம்பவம், திரை தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மற்றும் உண்மையை துணிவாக பேசியதற்கு கிடைத்த அவமதிப்பு. எனவே, அந்த பாபாஜி தலைவருக்கு மனதில் ஒரு வைராக்கியத்தை கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    அன்புடன் அருண்

  17. vasudevan vasudevan says:

    thalaiva neenga udanadiya oru mudivu edukkunum enna amathiyagave iruntha ivanuga namakku kallarai kattituvanga ivanga ellarukkum aappu vachi neenga thamizhaga thalavarukum naal parthu engi kondirukkrom

    ippdikku ungal kodikkanakana rasikargalil oruvan

  18. dr suneel dr suneel says:

    ஈ ரா சார் , என்ன ஒரு ஆழம் ..என்ன சொல்லுவதேண்ட்ரே தெரியல … hats off

  19. tamilan tamilan says:

    பொறுத்தார் பூமி ஆழ்வார்………

  20. kamaladasan kamaladasan says:

    dear rama nathan its really nice

  21. Narayan Narayan says:

    To dear Sundar and all Thalaivar fans ,

    Only at the time of any Thalaivar film release these incidents happen.

    One should keep in mind that Endhiran is a big budget film. It should not face the same fate as that of Baba. Since Baba was his own production Thalaivar was able to repay the loss ( it is not a loss as per SSRS ).We have to be patient till the film gets released. He is in this field for more than 25 yrs.

    He knows the black sheep gang present in film industry as well as politics and has the ability to overcome these hurdles. We should not indulge in any acts that will affect the prospect of Endhiran. Thalaivar has told to wait till Endhiran rel.

    He has the blessings of GOD. He has said in one speech that " சோதனையெல்லாம் தாண்டினால் தான் சாதனை". WHEN GOD IS WITH US WHO CAN BE AGAINST US. (போடா ஆண்டவனே நம்ம பக்கம் )

  22. tbsiva tbsiva says:

    Xcellent article Sundar and Eraa… THis useless nadigar sangam needs Thalaivars presence for each and everything they want… But whenever a problem comes to thalaivar, none of these idiots are atleast raising their voices in favor of thalaivar

    Thalaivar should change….Otherwise even a guest role artist who has joined yesterday in cinema will talk some bullshit about him and get cheap fame…. Thats what happening nw

  23. santhosh santhosh says:

    ஒவ்வொரு முறையும் அவர்கள் உம் ரத்தத்தை உறிஞ்சும்போது எங்களுக்கு வலிக்கிறது

  24. balaji balaji says:

    Vaaimaiyae vellum…God will give peace to our thalaivar & ajith.

    regards,

    balaji

    dubai

  25. Prabhu Prabhu says:

    ஹாய் சுந்தர்,

    இந்த பதிவு இன்னும் கார சாரமாக ; நடு நிலைமையோடு இருக்கிறது…எனக்கு பிடித்து இருந்ததால் இங்கு சுட்டுகிறேன். எனக்கும் இந்த கருத்துக்கு உடன்பாடு தான் http://truetamilans.blogspot.com/2010/02/blog-pos...

    இவன்

    பிரபு

  26. prasanna prasanna says:

    Ji my blood is boiling. who is this idiot jaguar allias poli thangam?Thalaiva pls take a decision we cant digest anymore from stupid unknown people who speaks against you. Thalaiva enter into politics we will show our power..

  27. ss ss says:

    அட சும்மா இருங்கப்பா. தலைவரை பத்தி தெரிஞ்சுமா இப்படியெல்லாம் உணர்ச்சிவச படுறீங்க.

    நாய் ன்னா குறைக்க தான் செய்யும்.. அதுக்கு போய் டென்ஷன் ஆனா எப்படி.?

    குரைக்கிற நாய் ங்கள பாத்து கல்லை எரிஞ்சி ஏன் ஹீரோ ஆக்குறீங்க. இப்போ அது கூட்டமா வர பாக்குது..

    விட்டுட்டு நம்ம வேலைய பாக்க போவோம் , வாங்க.

  28. peraveen peraveen says:

    // நம்மை உறுத்தும் மற்றொரு விஷயம்…ரஜினிக்கு கண்டனம் என்று கூறியிருக்கும் அறிக்கையில் நடிகர் சங்கம் கையெழுத்திட்டு இருப்பதுதான். .. குகநாதனுக்கு கண்டனம் என்று சொல்லி பெப்ஸி அமைப்பினர் கையெழுத்து போடுவார்களா? சேகரனுக்கு கண்டனம் என்று சொல்லி விநியோகஸ்தர் சங்கத்தினர் கையெழுத்து போடுவார்களா? சாக்குவார் தங்கத்துக்கு கண்டனம் என்று சொல்லி ஸ்டன்ட் நடிகர்கள் போடுவார்களா? //

    நச்…..

  29. napoleon napoleon says:

    சூப்பர்! ஈரா அவர்களுக்கும் மற்றும் மாயாவி அவர்களுக்கும் மற்றும் சுந்தர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் எழுத்துக்கள் மிகவும் உயர்ந்தவை, என் மனதில் அமைதியையும் அதே சமயம் என் மனதில் இருந்த எண்ணத்தையும் வெளிபடுத்தின. நன்றிகள் பல.

  30. lakshmi lakshmi says:

    Last பெவ் lines எச்செல்லேன்ட் Mr ER. It ஷோs தி பெயின்.

  31. mayavi mayavi says:

    மிக்க நன்றி நெப்போலியன் அவர்களே…

    தலைவர் கூறியதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்

    " " கடமையை செய் பலனை எதிர்பார்" "

  32. உண்மைலேயே நல்ல கட்டுரை. அணைத்து ரசிகர்களின் மனதை படம் பிடித்து காட்டி உள்ளது. நமக்குள்ள களம் வரும் வரை பொறுப்போம் தலைவர் வழியில்.

  33. veera veera says:

    *************** எல்லாம் கூட்டமாத்தான் கும்மாளம் அடிக்கும் . ஆனா சிங்கம் உறுமினால் நாலா பக்கமும் சிதறி ஓடும் …வயித்தெரிச்சல் பார்ட்டிங்க …கெடுவான் கேடு நினைப்பான் …

  34. KADKAT KADKAT says:

    // ஒவ்வொரு முறையும் அவர்கள் உம் ரத்தத்தை உறிஞ்சும்போது எங்களுக்கு வலிக்கிறது…… //

    என்னை சிலிர்க்கவைத்த வரி.

    நன்றி ஈ.ரா.

  35. சுயநலமிக்க தமிழ் ஆர்வளர்களே!! நீங்கள் இந்த தமிழ் நாட்டுக்காக தனிப்பட்ட முறையில் என்ன செய்தீர்கள் திரு ரஜினிகாந்த் அவர்கள் சமீபமாக ஈழ தமிழ் மக்களுக்கு பத்துலட்சம் நன்கொடை அளித்துள்ளார் இதற்குமுன் எத்துனையோ ….இங்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் எதுக்கெடுத்தாலும் தமிழ்மக்களின் பணம் என்று சொல்கிறார்களே யாராவது எதையாவது நாம் கொடுத்துவிடுவோமா ,, அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தார் பணத்தை மட்டுமா பெயரையும் புகழையும் அன்பையும் சேர்த்து இன்னும் எத்துனையோ கணக்கில் அடங்காதவை . அவர் தமிழக மக்களின் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிகிறார் சொல்வதற்கு நாள் ஒன்று போதாது வாழ்க ரஜினிகாந்த் !!அவர்கள் வளர்க அவரது தொண்டு !! அவருக்கு எது நடந்தாலும் இனி நல்லவையாக நடக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன் இங்ஙனம் ஸ்ரீமணிகண்டன் ,. கோவை .

  36. harisivaji harisivaji says:

    நண்பர் ஈ ரா

    இது பெரும்பாலான ரஜினி ரசிகர்களின் மனசாட்சிகளின் வெளிப்பாடு

    //ஜாதியின் பெயரை சொல்வதே வெட்கக்கேடான விஷயம் என்று தமிழகத்தில் இருந்த சூழல் மாறி, இன்று ஜாதியின் பெயரை பெருமையுடன் சொல்லி, அதற்க்கு ஆதரவு திரட்டுவது எத்துனை கேவலம்? நாடு எங்கே போகிறது? காந்தி தேசமே உனக்கு காவல் இல்லையா?//

    இது நச்சுனு இருக்கு இப்பெலாம் எதுகெடுத்தாலும் ஜாதி பெற சொல்லி தப்பித்து கொள்கிறார்கள்

    இதற்கு அந்த ஜாதி சங்கங்களும் சப்போர்ட் வேற

    உடனே அரசியல் வியாதிகளும் ஓட்டுக்கு நாக்க தொங்க போட்டு போயட்ரானுங்க

    //எங்களுக்கு வலிக்கிறது…… //

    எனக்கும்

  37. வெல்டன் ஈ.ரா

    பதிவின் கடைசி வரிகளை படித்து என்னை

    அறியாமல் கை தட்டி விட்டேன்

    ரஜினி அவர்கள் படித்தால் கண்டிப்பாக சந்தோசபடுவார்

    அவரது பக்குவம் தெரிகிறது உங்களிடம்

    நன்றி சுந்தர்

  38. rajnianifa rajnianifa says:

    http://vimarisanam.wordpress.com/
    வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

  39. napoleon napoleon says:

    திரு.மாயாவி அவர்களே, உங்கள் மணியான எழுத்துக்களை வரும் காலங்களில் நிறைய எதிர்பார்க்கிறேன் இந்த வலையில். அதே போல் நம் இரா வின் எழுத்துக்களையும்தான்.

  40. nagorebari nagorebari says:

    அருமையான கட்டுரை .வர வர இந்த தமிழனுங்க தொல்லை தாங்க முடியலப்பா…மழைக்குக்கூட பள்ளிக்கூடம் பக்கம் போகாதவன்லாம் தமிழங்குறான் அறிஞர்,புலவர்னு என்னென்னமோ சொல்லிக்குறான் அவனுங்கதான் தமிழன் மாதிரியும் நாமெல்லாம் தாய்லாந்து காரனுங்க மாதிரியும் பேசுறானுங்க.யாருப்பா இந்த ஜாகுவார் தகரம் இந்த கோழைப்பயலுக்கு எவன்டா இந்த அளவுக்கு பேச துணிச்சல் கொடுத்தது ? மவனே…எங்க தலைவர் பக்குவமான ஆளா இருக்குறதாலே நீயெல்லாம் பேசுற …ஒரு நாளைக்கு அவர் ஒரு சொடுக்கு போட போறாரு அப்புறம் இருக்குடி….

    நாகூர் பாரி

    மாவட்ட தலைவர்

    நாகை(தெற்கு)மாவட்ட ரஜினி நற்பணி மன்றம்

  41. /தேவைப்படும்போது உறிஞ்ச

    வந்துவிட்டு காரியம்

    முடிந்ததும் காணாமல் போகும்

    கொசுக்களிடம் இருந்து தப்பிக்க

    இனியாவது நீங்கள் ஒரு

    வலையை வைத்துக் கொள்ள வேண்டும்..

    ஏனென்றால் ஒவ்வொரு முறையும்

    அவர்கள் உம்

    ரத்தத்தை உறிஞ்சும்போது எங்களுக்கு வலிக்கிறது……/

    Excellent article. Ippodhan idhai padichen. Rasigargal manadhai appadiye pradhipalithullar EE.RAA. Thanks sir.

  42. deepanbabu deepanbabu says:

    இந்த வறி ,மிகவும் அற்புதம்
    “அந்த மனிதன் மன்னிக்கவே பிறந்த மன்னன்”
    இந்த மன்னனின் ரசிகனாகிய நான் இந்த வறியை கடைசிவரை பின்பற்றுறவேண்….

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates