









You Are Here: Home » Guest Article » காரணமின்றி காரியங்கள் நடப்பதில்லை - Guest Article
நமது தள வாசகர்களிடையே மிகவும் பரிச்சயமானவர் நண்பர் எம்.அருணாசலம். எந்த ஒரு விஷயத்தையும் பிரச்னையையும் பாசிட்டிவாக அணுகுவது தான் இவரது சிறப்பு. நடக்கும் சம்பவங்கள் குறித்து இவரது கருத்து மற்றும் பார்வை பற்றி அறிந்துகொள்ள உங்களில் சிலரை போல, நானும் மிக ஆர்வமாக இருந்தேன்.
இதோ நண்பர் அருணாசலம் தனது பிசியான பணிக்கிடையிலும் நமக்கு அனுப்பியுள்ள அசத்தலான கட்டுரை. அதை ‘GUEST ARTICLE’ ஆக இங்கு தருகிறேன்.
கடைசி நான்கு பத்திகள் அனைவரும் மனதில் இருத்தவேண்டிய விஷயம்.
- Sundar
E-mail: simplesundar@gmail.com
Mobile: 9840169215
———————————————————————————————-
நல்லவனா இருப்பது கஷ்டம்; வாழ்வது ரொம்ப ரொம்ப கஷ்டம்
அஜித் பேசியதும், தலைவர் அதற்க்கு எழுந்து நின்று கை தட்டியதும், அதற்க்கு பின் நிகழ்ந்த சில, பல நிகழ்வுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பது என் தாழ்மையான கருத்து.
முதலில், நண்பர் ஈ. ரா. அவர்களின் மிக சிறந்த முறையில் எழுதப்பட்ட கண்ணியம் மிக்க முந்தைய கட்டுரை, ரஜினியை பற்றி தரக்குறைவாக பேசும், அறிக்கை விடும் மிருகங்களின் காதுகளிலோ, அறிவிலோ ஏறுமா என்பதே சந்தேகம் தான். ஆனால், நடுநிலையாளர்கள் இதனை படித்து உண்மை நிலையை புரிந்து கொண்டால் நலம்.
ஈ. ரா. அவர்களின் இந்த சிறந்த படைப்பு, நம் போன்ற ரசிகர்களால் நெட்டில் பரப்ப பட வேண்டும். அதற்க்கு ஈ. ரா. மறுப்பு சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன். நன்றி ஈ. ரா. உங்களின் அருமையான கட்டுரைக்கு. உங்களை போன்ற ரசிகர்களை பெற்றதற்கு தலைவர் உண்மையிலேயே பெருமை பட வேண்டும் - இவ்வளவு கொந்தளிப்பான சூழலிலும் நீங்கள் தன்னிலை மறக்காமல், மிருகங்களையும் மனிதர்கள் போல் மதித்து கட்டுரை எழுதியதற்கு.
சுந்தர்ஜி, உங்களுக்கும் நன்றி. ரசிகர்களை ஒரு கட்டுக்குள் அமைதியாக கட்டுகோப்புடன் இருக்குமாறு கேட்டுகொண்டமைக்கு.
“என்ன தேசமோ” எனக்கு மிகவும் பிடித்த வரிகளை கொண்ட பாடல். அந்த படம் போலவே, இன்றைய சூழலும் அமையும் என்று தலைவரோ, பாலு மகேந்த்ராவோ, இளைய ராஜாவோ அல்லது வைரமுத்துவோ நினைத்திருப்பார்களா?
நண்பர் அன்புஅரண் கூறியதை போன்றே நானும் நினைக்கிறேன். இதில் தேவைக்கு அதிகமாகவே தலைவரை தாக்கி பேசும், “ஜாகுவார்” என்ற தூய தமிழ் பெயரை வைத்துக்கொண்டிருக்கும் ஒரு “தகர டப்பா”, துள்ளும் துள்ளலை பார்த்தாலே தெளிவாக தெரிகிறது - HE HAS A VESTED INTEREST IN THE LAND SCAM ABOUT TO UNRAVEL. அத்தகைய சூழ்நிலையில், ரஜினி பொது மேடையில், முதல்வர் முன்னிலையிலேயே, நிலங்களை ஏழை தொழிளார்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும். ஏற்கனவே பணத்தில் புரள்பவர்கள் ஒதுங்க வேண்டும் என்றும் சொன்னால், தகர தமிழனின் வியாபாரம் படுத்து விடாதா? அவன் இந்த scheme மூலமாக எவ்வளவு தொழிலாளர்களிடம் கட்ட பஞ்சாயத்து செய்து, நிலங்களை அபகரிக்க பார்த்தானோ? அதில் தலைவர் ரஜினி முட்டு கட்டை போட்டால், தகர தமிழனின் தன்மானம் சும்மா இருக்குமா?
இதற்க்கு நடுவில், பெப்சி தலைவர், அறிக்கை என்ற பெயரில் Open Mafia Threat விடுத்து இருக்கிறார். இவர்தான் FEFSI என்னும் திரை தொழிலார்களுக்கான அமைப்பின் இப்போதைய தலைவராக இருப்பவர். இந்தியாவில், தொழிலாளர் சங்கம் (labour union) என்ற அமைப்பே, மாபியா கும்பலாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டன. எனவே, FEFSI அமைப்பும் இப்போது மாபியா போன்று செயல்படுவதில் ஆச்சர்யமே இல்லை. இதில் என்ன ஆச்சர்யம் என்றால், இந்த குகநாதன் விட்டிருக்கும் அறிக்கையே ஒரு மிரட்டல் கடிதம் போன்று அமைந்திருப்பதுதான்.
இவ்வாறு பொதுமக்கள் முன்னிலையிலே விடப்படும் அறிக்கையே இத்துனை மிரட்டலாக இருந்தால், இவர் உண்மையிலேயே அஜித்தை மிரட்டியிருக்க வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்பது தெளிவு. நிறைய நடிகர்கள் வந்தால்தான், ஸ்பான்சர்ஷிப் கிடைக்கும். நிகழ்ச்சி தொலைக்கட்ட்சியில் களைகட்டும். அதில் இவரை போன்ற பேர்வழிகள் கமிஷன் அடிக்க முடியும். இதற்காகவே குகநாதன், ஜாகுவார் தகரம், ராதாரவி, மற்றும் வேறு சிலர், பல சங்கங்களின் தேர்தலில் குடிமி பிடி சண்டை போட்டு தேர்வு பெற்றதாக சொல்லிக்கொண்டு அவற்றினை கைப்பற்றி அராஜகம் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
இவர்களுடைய இப்போதைய வருத்தமே, அஜித் இவர்கள் அனைவரின் ரவுடி தனத்தை பொதுவில் பேசி பொதுமக்களிடம் இவர்களை போட்டுகொடுத்துவிட்டது தான். Ajith has called a spade, a spade. Thalaivar, as is his wont, has openly appreciated Ajith thru his standing ovation.
இதனால், இவர்கள் செய்யும் திருட்டுத்தனம் பொதுமக்கள் மத்தியில் தெரிந்துவிட்டதுதான் அவர்களின் ஆத்திரத்திற்கு காரணம். இதன் காரனகர்த்தாக்களான அஜித் மற்றும் ரஜினி மீது தங்களின் ஆத்திரத்தை இவ்வாறு ‘தமிழ்’ முலாம் பூசி மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள் இந்த ரௌடிகள்.
பொது மக்கள் இதனை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.
ரசிகர்கள் யாரும், இவர்களின் உளறல்களை பொருட்படுத்த வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். ரசிகர்களுக்கு இந்த கயவர்களின் அறிக்கைகளை படித்தவுடன் ரத்தம் கொதிக்கும் என்று எனக்கு தெரியும். எனக்கும் கூடத்தான் இந்த செய்திகளை படித்தவுடன் ரத்தம் கொதித்தது. ஆனால், சிறிது பொறுமையாகவும், நிதானமாகவும் யோசித்தால் ஆத்திரப்படுவதால் ஒரு பயனும் இல்லை என்று தெளிவாகும்.
ரசிகர்கள் ஆத்திரப்பட்டு, இவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிட்டால், அவர்கள் சொன்ன அனைத்தும் உண்மை என்பது போல் ஆகி விடும் அல்லவா? அவர்கள் இவ்வாறு அறிக்கை விட்டதன் காரணமே, ரசிகர்களை தூண்டி வன்முறையில் இறங்க வைக்க வேண்டும் என்பதற்க்காகத்தானே? இதனால் ரஜினிக்கு கெட்ட பெயர் வருவதோடு மட்டுமின்றி, தங்கம் அறிக்கையில் சொன்னதுபோல், தமிழர் மற்றும் தமிழர் அல்லாதோர் ஆகியோருக்கு இடையே ஒரு கலவரத்தையே மூட்டி விட காரணம் ஆகி விடும். எனவே, ரசிகர்கள், இந்த நேரத்தில் பொறுமை காக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆத்திர படுவது எளியது. பொறுமையாக இருப்பது, அதுவும் தூண்டி விடப்படும் நேரத்தில் பொறுமை காப்பது என்பது, மிகவும் கஷ்டம்தான். ஆனால், தலைவர் ரஜினிக்காகவும், அவரின் நற்பெயருக்கு களங்கம் நேராமல் இருப்பதற்காகவும், நாம் பொறுமையாக இருந்தே ஆகவேண்டும்.
இப்படியே போய்கொண்டிருந்தால், நாட்டிலுள்ள தெரு பொறுக்கிகள் எல்லாம், தலைவரை துச்சமாக மதித்து கேவல படுத்திக் கொண்டே இருப்பார்களே, என்று கேட்கும் நண்பர்களுக்கு நான் சொல்லி கொள்வது இதுதான்:
நீங்கள் திருப்பி அறிக்கை விடுவதாலோ, அல்லது அவர்கள் வீட்டின்மேல் கல் எறிந்தாலோ மட்டும், இவர்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி விடுவார்களா என்ன? நிச்சயம் மாட்டார்கள். நான் மேலே கூறியபடி, அவர்கள், பிரச்னையை தமிழர், தமிழருக்கு எதிரிகள் என்று திசை திருப்பி குளிர் காய பார்ப்பார்கள். அவர்களுக்கு இதனால் ஒரு நஷ்டமும் இல்லை. மக்களிடம் நல்ல பேர் உள்ளவன்தான், தன் பேரை தக்க வைக்க பாடு படுவான். கெட்டவனோ அல்லது மக்களுக்கு யாரென்றே தெரியாதவனோ, எதை பற்றி கவலை பட போகிறான்? சற்று யோசியுங்கள். நல்லவனாக இருப்பது கஷ்டம்தான். அதுவும், கழகங்களின் ஆளுகைக்கு உட்பட்ட தமிழ்நாட்டில், நல்லவனாக வேஷம் போடுவது மிக எளிது. ஆனால், நல்லவனாகவே வாழ்வது ரொம்ப, ரொம்ப கஷ்டம்.
இதுவும் கடந்து போம்
இதற்க்கு விடிவுகாலமே இல்லையா என்றால், ஒரு நண்பர் கமெண்ட் செய்திருந்தபடி “இதுவும் கடந்து போம்”.
எனக்கு (ever optimist) என்ன தோன்றுகிறது என்றால், இத்தகைய சம்பவங்கள் தலைவருக்கு வெறுப்பை தோற்றுவித்தாலும்கூட, சிறுக, சிறுக அவரின் மனதை வேறொரு பாதையில் பயணிக்க வைக்கும் சக்தி இத்தகைய சம்பவங்க்ளுக்கே உண்டு. ஆக காரணங்கள் இன்றி காரியம் நடைபெறுவதில்லை.
பாபா பட பெட்டி கடத்தல் சம்பவம், ரஜினியின் சொந்த படம் எனவே சொந்த பிரச்னை என்று வைத்துக்கொண்டாலும், இந்த சம்பவம், திரை தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மற்றும் உண்மையை துணிவாக பேசியதற்கு கிடைத்த அவமதிப்பு. எனவே, அந்த மகாவதார் பாபாஜி தலைவருக்கு மனதில் ஒரு வைராக்கியத்தை கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
M.Arunachalam
www.hereisarun.blogspot.com
[END]
Well said mr .Arun
wonderful article…
பொதுமக்கள் மத்தியிலயும் சக நடிகர்கள் தொழிலாளர்கள் மத்தியிலயும் தலைவர், அஜித் ஆகியோரின் மதிப்பு இந்த நிகழ்வுகளில் மூலம் இன்னும் உயர்ந்துள்ளது என்பது முற்றிலும் உண்மை. நடிகர் சங்கமோ அல்லது வேறு எந்த கருமமோ நம் தலைவருக்கு சப்போர்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி நாம் எதிர்பார்க்கவும் தேவை இல்லை. நமக்கும் நம் தலைவருக்கும் கொடுத்துதான் பழக்கம்; வாங்கி பழக்கமே இல்லை. இதைவிட பெரிய எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்தவர், அவற்றை வென்றும் வந்தவர் நம் தலைவர். ஆனால் அஜித்திற்கு இது புதுசு. நல்ல வேலை, நம் தலைவரின் ஆதரவு அஜித்திற்கு கிடைத்தது, இல்லை என்றால் அஜித்தை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பாங்க.
இப்போது நம் வேலை ஒன்றே ஒன்றுதான். தலைவரின் பின்னால் எப்போதும் போல் அமைதியாக நிற்போம். அவரின் மனம் வருந்தும்படியோ அல்லது அவரின் புகழுக்கு களங்கம் நேரும்படியோ எதுவும் அவரின் ரசிகர்களாகிய நம்மால் நடந்துவிடக் கூடாது. இந்த பக்குவம் நம் ரசிகர்களுக்கு எப்போதோ வந்துவிட்டது, அதனை இப்போதும் கடைபிடிப்பதே மிகவும் முக்கியம்.
அருமையான வரிகளால் ரசிகர்களின் மனக்குமுறலை வெளிக்கொணர்ந்த நண்பர் ஈ.ரா அவர்களுக்கும் நண்பர் அருணாச்சலம் அவர்களுக்கும் என் நன்றி. சுந்தர் வழக்கத்தை விடவும் இம்முறை உங்களின் பணி சிறப்பாக இருப்பதை உணர்கிறேன். நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
—————————————
Sorry for minor chopping. I have reasons for it.
- Sundar
Great article from Arun.
Arun , as you said , i understand , we should be patient and ignore it. But ,this is not the first time that these kind of useless guys are talking about thalaivar.We need to put a full stop for it once for all so that , in future , whoever is trying to talk about thalaivar will remember.
Thalaivar is toooooooooooo good. Thats why , he is so calm and cool and doesn't even care abt these kind of incidents.
We really need to put a full stop for all these kind of non-sense things once for all so that it won't continue in the future.
-Muru
What a matured detailed and a superb analysis. All these wicked animals are taking advantage of goodness of Thalaivar but they will have to pay for their deeds. The law of karma will work on them. We need not worry about Thalaivar because his love for all is unconditional and does not depend on their behavior
And thanks to Arun sir for a wonderful analysis
absolutely marvellous comment about mr.rajinikanth the great
அருமையான கட்டுரை ….
வாழ்த்துகள் அருணாசலம்…
அரூண்ஜி
இத தான் உங்களிடம் எதிர்பார்த்தேன் .சரியான நேரத்தில் தரப்பட்ட மிக சரியான பதிவு இன்றும் நாம் அனைவரும் தலைவரின்பால் அன்புடன் இருக்கும் காரணமே எந்த காலத்திலும் பின்னால் நடக்க போகும் விளைவுகளை பற்றி கவலை படாமல் தன் மனதில் பட்டதை பேசும் அந்த வெள்ளை உள்ளம் மட்டும்தான்.உண்மையை சொல்கிறேன் அந்த இடத்தில மட்டும் தலைவர் எழுந்து கை தட்டவில்லை என்றால் அஜித்தின் நிலை இன்றைய நிலையை விட மோசமாக ஆகியிருக்கும் வாய்புகள் அதிகம் .இதை புரிந்துதான் தலைவர் சட்டென எழுந்து கை தட்டிவிட்டார்(உண்மையில் அது பாராட்டு அல்ல பாதுகாக்கவே otherwise life would be miserable for அஜித் இதை அஜிதின்பால் நட்பாகவே சொல்கிறேன் அஜித் ரசிகர்கள் தவறாக நினைக்க வேண்டாம் நாங்கள் இந்த மாதிரி காயப்பட்டு காயப்பட்டு இன்று மனவலிமையுடன் பக்குவபட்டுவிட்டோம் இது எங்களுக்கு ஒரு ரசிகனாக மட்டும் இல்லை தனிப்பட்ட வாழ்கையில் ஒரு நல்ல மனிதனாகவும் இருக்க முயற்சி செய்ய முடிகிறது அப்படி எங்களை பக்குவ படுத்துவதுதான் தலைவரின் நோக்கமும் கூட. அதுதான் மற்றவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம்.)
அப்புறம் சுந்தர்ஜி ஒரு சந்தர்பத்தில் கூறியது போல ஒரு நல்லவருக்கு ரசிகனை இருப்பது மிகவும் கஷ்டமான் விஷயம் .அனால் அதில் இருக்கும் சந்தோசமே தனி .
விட்டு தள்ளுங்க நண்பர்களே எவ்வளவோ பார்த்துட்டோம் இத பார்க்க மாட்டோமா ?.எனக்கு தமிழ் சினிமா மட்டுமே போதும் என்று சொன்ன தலைவரை எதிர்த்த புரட்சி தமிழர்கள்!(இது நேர் குத்துதான்) தெலுங்கு மற்றும் மலையாளம் திரையுலகம் வரை சென்று விட்டார்கள் அவர்கள் கன்னடத்திலும் நடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.அபபவும் தலைவர் அங்கு ஏதும் பிரச்சினை என்றாலும் சென்று தீர்த்து வைப்பார் அது அவர் கூடவே பிறந்த குணம் .மீண்டும் சொல்கிறேன் எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா ?
இப்போ தலைவரை பற்றி பேசும் சங்க பிரதிநிதிகளுக்கு(!) இது நிரந்தர பதவி கிடையாது.ஆனால் தலைவருக்கு மக்கள் மனதில் கிடைத்திருக்கும் பதவிக்கு அழிவே கிடையாது.
அப்புறம் இன்னொரு விஷயம் நமக்கெல்லாம் தலைவரை எப்போதும் பிடிக்கும் ஆனால் இந்த மாதிரி சில நேரங்களில் தான் தலைவரை எப்போதும் விமர்சிக்கும் பொதுமக்களும் கூட தலைவரின் பால் ஈர்க்கப்படுகிறார்கள் அதில் நமக்கெலாம் சந்தோசம்தானே நல்லா பட்டை தீட்டுங்கடா அந்த கருப்பு வைரத்தை ஒரு நாள் பட்டய கிளப்புவோம் நாங்க. அஜித் ரசிகர்களே நாங்களிருக்க பயமேன் ?கவலை கொள்ள வேண்டாம்.இது உங்கள் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல இதயத்தின் அடித்தளத்தில் இருந்து உண்மையை பேசும் எல்லா மனிதர்களுக்கும் எம் தலைவன் மட்டும் அல்ல எங்களின் ஆதரவும் உண்டு. அருண் அவர்களை அழைத்ததற்கு சுந்தர்ஜி உங்களுக்கு நன்றி.
ரஜினி அமைதியா இருபது கடவுள் இவர்களை பார்த்துப்பான் என்றுதான்
அதைவிட ரஜினி இந்த ……லாம் தண்டிக்கணும் நினைச்சாலும் எந்த தீங்கும் செய்யமாட்டார் ஏன் என்றால் ரஜினி திருவள்ளுவரின் சிஷ்யன் " இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நானா நண்யம் செய்துவிடல் "
என்பதற்கேற்ப நடந்து காண்பிப்பார்
நாம இப்படி இருப்பது இதை ஏற்றுகொள்வது கஷ்டம் தான்
ஆனா முயற்சி செய்து பார்க்கலாமே
நம்மால் முடியும் ஏனா நாம ரஜினி ரசிகர்கள்
இவன்,
ஹரி.சிவாஜி
Highly sensible thoughts expressed in effective and meaningful words. Our Thalaivar should be really proud to have such fans and wellwishers who are able to keep their cool when provoked unnecessarily by others with vested interests. Whatever views I had in my mind about this incident, has been expressed by our friend Mr. Arunachalam and I am very happy to have such sensible people in our site. Sundarji deserves a big hug and appreciation for putting such meaningful opinions.
கழகங்களின் ஆளுகைக்கு உட்பட்ட தமிழ்நாட்டில், நல்லவனாக வேஷம் போடுவது மிக எளிது. ஆனால், நல்லவனாகவே வாழ்வது ரொம்ப, ரொம்ப கஷ்டம். correcta soninga sir………..
சுந்தர் சார் எந்த பிரச்சனை தன்னை சுற்றி நடந்தாலும் அதுக்கு ஒரு பதிலோ இல்ல ரசிகர்கள் அமைதியா இருங்கன்னு ஒரு அறிக்கையோ தலைவர் வெளிடுவது இல்ல அது ஏன்?
———————————-
Good question. Will tell you the right answer for you in a separate post.
- Sundar
Hats off to your sir for this wonderful write up. I hope you remember me. this is john from bangalore. I have been out for sometime. Superstar is a man beyond all this now. We as his followers have learnt many things from him. As a christian what Jesus teaches us is to not take take revenge, forgive people and never give up on truth. Dont we see these things in Superstar. This too shall pass.
மதுரைல நாலாம் நம்பர் பஸ் ரூட் ரொம்ப பிரபலம் .காரணம் பிக் பாக்கெட் ரொம்ப அதிகம் .அந்த நாலாம் நம்பர் பிக் பாக்கெட் காரன் பார்த்தா மாதிரிதான் இருப்பான்.சோ இவன் சொல்லுவதை எல்லாம் நாம் ஒரு பொருட்டா நினைக்ககூடாது
//மக்களிடம் நல்ல பேர் உள்ளவன்தான், தன் பேரை தக்க வைக்க பாடு படுவான். கெட்டவனோ அல்லது மக்களுக்கு யாரென்றே தெரியாதவனோ, எதை பற்றி கவலை பட போகிறான்?//
அருமை அருண் ஜி….சரியான கேள்வி..
தங்கள் பாராட்டுக்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் சுந்தர்ஜிக்கும் நன்றிகள்
Wonderful article….very good presentation
ரொம்ப சரியா சொன்னிங்க முத்துக்குமார்
சுந்தர்ஜி மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.
சுந்தர்ஜி என் கட்டுரையை மிக அழகாக செதுக்கி பஞ்ச் உள்ள தலைப்பு எல்லாம் கொடுத்து ரொம்பவே நன்றாக ஆக்கி விட்டார்.
முரு,
//But ,this is not the first time that these kind of useless guys are talking about thalaivar.//
Take it from me - this won't be the last time either for such things to happen against Thalaivar in TN.
//We need to put a full stop for it once for all so that, in future, whoever is trying to talk about thalaivar will remember.//
How? By taking law into our hands? Never…. never…. so. Lets talk something which is practical, sensible & ultimately, will not disturb the society.
அன்பு அரண்,
// நமக்கெல்லாம் தலைவரை எப்போதும் பிடிக்கும். ஆனால், இந்த மாதிரி சில நேரங்களில் தான் தலைவரை எப்போதும் விமர்சிக்கும் பொதுமக்களும் கூட தலைவரின் பால் ஈர்க்கப்படுகிறார்கள். அதில் நமக்கெலாம் சந்தோசம்தானே. நல்லா பட்டை தீட்டுங்கடா, அந்த கருப்பு வைரத்தை.//
Well Said. People are watching all these Tamasha being enacted by these film industry jokers and Rajini's reaction (?), or, is it the lack of it?, to it.
So, friends, by extension of that logic, people are watching Rajini fans' reaction too, vis-a-vis other actor's fans. So, we have the responsibility to behave in a matured manner.
கோபி,
//சுந்தர் சார் எந்த பிரச்சனை தன்னை சுற்றி நடந்தாலும் அதுக்கு ஒரு பதிலோ, இல்ல ரசிகர்கள் அமைதியா இருங்கன்னு ஒரு அறிக்கையோ, தலைவர் வெளிடுவது இல்ல. அது ஏன்?//
May be Thalaivar does not want to give importance to such lowly people like that stunt guy Joker Thagaram by answering his bull-shits. Same is the case with FEFSI mafia. Since it doesn't involve his fans in any way, why should he involve his fans too?
John,
Welcome back, man. You are 100% correct. I may even go to the extent of saying, Thalaivar is following Jesus' famous saying "ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டு". What do you say?
அனைவருக்கும் மறுபடியும் நன்றிகள் பல.
அன்புடன் அருண்
Sundar
I have been reading your posts regularly. I have one request for you. You are doing a great job of pacifying the fans over the issue thats happening in the recent days. I dont wanna get into those with this comment. I juz wanna ask you, if there is someway that our Thalaivar get these things noticed? If not, shall we take some steps formally to plead our thalaivar to go thru the articles of our website whenever he finds time? Its not only the fans who has to understand what his peer fans says.
It will also be great if Thalaivar feels what normal fans feels about the issue and what he feels that Thalaivar can do to overcome this issue. Because the articles publishes here are from fans who may not hold a superior post in fan clubs with whom Thalaivar may discuss what can be done moving forward.
As a Thalaivar veriyan, I would like to plead Thalaivar to have a look into these to get a feel of what an ordinary well wisher of our Thalaivar suggests to him.
—————————————————-
I already took appropriate steps for this. But i am not sure whether thalaivar is reading these stuff or not. I left everything to Almighty and doing my duty now.
- Sundar
மதிப்பிற்குரிய சுந்தர் அவர்களே, நம் எண்ணங்களை நேரில் பகிர்த்து கொள்ள ஒரு get together ?
———————————————————-
ஓ… தாராளமாக. ஆனால் இந்த பதட்டமெல்லாம் தணியட்டும். ஓகே?
- சுந்தர்
மற்றும் ஒரு அருமையான பதிவு , matured , நன்றி அருண் ஜி ,
ஈரா நீர் ரஜினி ரசிகர்களின் நாடி வேறா? உங்கள் வரிகளின் அனல் போதும் இவர்களை ஏரிபதற்கு ……..
எம்.அருணாசலம் அவர்களே மிகவும் அருமையான பதிவு ,வாழ்த்துக்கள்
//அப்புறம் இன்னொரு விஷயம் நமக்கெல்லாம் தலைவரை எப்போதும் பிடிக்கும் ஆனால் இந்த மாதிரி சில நேரங்களில் தான் தலைவரை எப்போதும் விமர்சிக்கும் பொதுமக்களும் கூட தலைவரின் பால் ஈர்க்கப்படுகிறார்கள் அதில் நமக்கெலாம் சந்தோசம்தானே நல்லா பட்டை தீட்டுங்கடா அந்த கருப்பு வைரத்தை ஒரு நாள் பட்டய கிளப்புவோம் நாங்க.//
அருமை அன்புஅரன்
//ஆனா முயற்சி செய்து பார்க்கலாமே
நம்மால் முடியும் ஏனா நாம ரஜினி ரசிகர்கள் //
குட் தாட் ஹரி சார்
//அவர்கள், பிரச்னையை தமிழர், தமிழருக்கு எதிரிகள் என்று திசை திருப்பி குளிர் காய பார்ப்பார்கள்.//
இதுவே நடக்கும்! சரியாக கூறினீர்கள் அருண்.
நான் உங்களிடம் இருந்து இன்னும் பெரிய கட்டுரை எதிர்பார்த்தேன்!
உங்க தளத்தில் எழுதுங்கள் நேரமிருக்கும் போது.
கலி யுகத்தில் தர்மம் ஒற்றை காலில் தான் நடக்கும் … அதுவும் நொண்டி நடக்கும் … this was told by Rajini during one of his speech…so Yellam nanmaikkey…
பொறுத்தார் பூமி ஆள்வார்.ரசிகர்கள் வீட்டிற்கும், நாட்டிற்கும் நல்லது செய்ய வேண்டும் என்பதே தலைவரின் விருப்பம்.தலைவரை தாக்கி பேசினால் ஓசி விளம்பரம் கிடைக்கும். பொறுமையாய் இருப்பது நம்மை அடுத்த கட்டத்திற்கு தயார் செய்து கொள்ள உதவும் நேரமாக நாம் எடுத்து கொள்ளலாம். தலைவரின் பொறுமைக்கு உதாரணமாக எத்தனையோ தருணங்களை சொல்லலாம். இதுவும் கடந்து போகும். தலைவர் வந்து விடுவாரோ என்ற பயத்தினால் தான் இவர்கள் அறிக்கை பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதையெல்லாம் தலைவர் சட்டை செய்ய மாட்டார். நாமும் தலைவரை பின்பற்றுவோம்.
நண்பா
தலைவர் பேசினாலும் நியூஸ் ல இருப்பார். பேசலனாலும் நியூஸ் ல இருப்பார். ஆனா.. இவங்க நிலைமை கொஞ்சம் யோசிச்சி பாருங்க.. தலைவர பார்த்து குரைக்கும்போதுதான்.. அடடா இவங்க இருக்காங்கனு தோணும்….
" உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலை யாகும்.."
மலை போல உள்ள பிரச்சினையே மயிரா போச்சுன்னு சமாளிச்சிட்டோம்.. இதெல்லாம் ஜிஜூபி மேட்டர்..
" இட்டதிங்கு சட்டமேன்றுதான் … சங்கமே எண்ணுவது இன்று இனிக்கும்..
கட்டவிழ்த்த காளைகன்றுதான் சங்கமே.. முட்டும்போது முட்டி வலிக்கும்..
சொன்னால் செய்யும் சூரன்தானே.. ஊரே பேசும் வீரன்தானே..
ராஜா வீட்டு ***குட்டி ரொம்ப தானே துள்ளுது.. கட்டி போட்டு காளை யைதான் கிட்ட வந்து முட்டுது..
போடா போடா நீயும் இந்த காளைகிட்ட மாட்டும்போது..
நீ கொடுத்தத திருப்பி கொடுப்பேன்.. எண்ணி கொள்ளடா.. "
————————————————-
I like mr.E.R 's article. Where is Sarath,Radika,Radharavi? Have you able to understand onething above 3 persons and Zaqur's one thing is common! Now thidirunu Koundamani sir's daloge coming my mind that is Politics la ithalem satharanamappa.
—————————————————
Sarath is afraid whether he would lose even his 831 caste votes. that's what he is silent.
- Sundar
Arun,
I completly agree with you. We should be able to do with calm and without creating any public distrubance. I am against voilance as well. Please don't get me wrong.
We can do something like Gandhi giri by sending something ? any thoughts?
சுந்தர்,
இன்றைய ஜூவி பார்த்திர்களா கிடைக்கிற கேப்பில் எல்லாம் தலைவரை பத்தி தப்பா
எழுதுறானுங்க.குனிய குனிய குட்டிக்கிட்டுதான் இருப்பானுனுங்க.
————————————————
Ignore it.
- Sundar
இந்த நடிகர் சங்கம் ஏன் இப்படி ஆகிப்போனது?
MGR சிவாஜி SSR , போன்ற பெரும் நடிகர்கள் தலைவர்களாக இருந்த நடிகர் சங்கம் ஏன் இப்படி ஆகிப்போனது?
ராதாரவி வரையில் சங்கமாக இருந்த நடிகர் சங்கம் இன்றைக்கு கட்ட பஞ்சாயத்து கூடமாக மாறிப் போயிருக்கிறது.
இந்த விஜயகாந்த் வந்த பொறகுதான் நடிகர்களை மிரட்டும் பஞ்சாயத்து கூடமாக மாறிப் போனது.
எல்லா பிரிவுக்கும் சினிமாவில் சங்கம் உள்ளது. ஒவ்வொவொரு சங்கமும் தன உறுப்பினருக்காக மற்ற சங்க உறுப்பினருக்கு ரெட் கார்டு போடுவார்கள். ஆனால் எந்த சங்கமும் தன உறுப்பினர் மீதே ரெட் கார்டு போடுவது கிடையாது.
ஆனால் நடிகர் சங்கம் மட்டும் தன உறுப்பினர் மீதே ரெட் கார்டு போட்டு மிரட்டும் அவலம். பிரச்சனை என்று வரும் போது தன உறுப்பினரையே காலை வாரும் தலைகள்.
காரணம் தன பட வாய்ப்பு போய் விடுமே என்ற சுயநலவாதிகள். . தன திறமை மீதே நம்பிக்கை இல்லாத வாய்ப்பை தேடி அலையும் தலைகள் எப்படி திமிங்கலமிடங்களுடன் நியாயம் பேசும்.
கூப்பிட்ட இடங்களில் போய் உட்கார்ந்து காட்டிய இடங்களில் கையெழுத்து போட்டு தன உறுப்பினர்களையே மாட்டி விடும் நடிகர் சங்கத்திடம் எப்படி நியாயம் கிடைக்கும்.
//சிறுக, சிறுக அவரின் மனதை வேறொரு பாதையில் பயணிக்க வைக்கும் சக்தி இத்தகைய சம்பவங்க்ளுக்கே உண்டு. ஆக காரணங்கள் இன்றி காரியம் நடைபெறுவதில்லை.//
ஆமாம் அருண் இந்த மாத்ரி அனுபவித்த நமக்கே இப்படி மனது பக்குவ படுகிறது என்றால் எல்லாத்தையும் நேரடியாக அனுபவிகிறார் …?
இவர்களும் நமக்கும் நம் தலைவருக்கும் அவர்களுக்கே தெரியாமல் நன்மையே செய்கிறார்கள்
//இப்போ தலைவரை பற்றி பேசும் சங்க பிரதிநிதிகளுக்கு(!) இது நிரந்தர பதவி கிடையாது.ஆனால் தலைவருக்கு மக்கள் மனதில் கிடைத்திருக்கும் பதவிக்கு அழிவே கிடையாது.// சூப்பர் அன்பு
கோபி — நம்மள பத்தி தலைவருக்கு தெரியும் , அவர் வந்து பேட்டிகொடுத்து தான் நம்மள அமைதி படுத்தனும் என்று இல்லை ..அப்படி தான் நாம அமைதி ஆவோம்ன நாம் முழுமையா ரஜினி ரசிகர்களாக மாறவில்லை என்று தான் அர்த்தம் (அதாவது பக்குவப்படவில்லை)
தலைவருக்கும் அவரது உண்மயான ரசிகர்களுக்கும் ஒரு உள்ளுணர்வு உரையாடல் உண்டு
அதெல்லாம் விட இதற்கு வந்து பதில் சொன்னா இந்த விசயம் இன்னும் பெருசா பேசப்படும்
தலைவர திட்டி பேசிய செய்தியே இவளோ முக்கியத்துவம் அடையது என்றால் தலைவரே வந்து பேசினால் ?
——————————————
Excellent Hari Sivaji.
- Sundar
இந்த நேரத்தில் நல்லதொரு பதிவை தந்த அருணாசலம்
அவர்களுக்கு நன்றி
நன்றி அருணாசலம் சார்.
ஈ ரா வின் கட்டுரை பிரச்னையை சரியாக சீர்தூக்கி பார்த்து அலசி பதிவு செய்திருக்கிறார். அற்புதமான கட்டுரை மேலும் இதை வாசகர்களுக்கு பதிவு செய்த சுந்தருக்கு நன்றி.
அருமையான கட்டுரை வாழ்த்துக்கள் திரு.அருணாசலம் அவர்களுக்கு.
தலைவரின் பார்வை ஒருவர் மீது கோபமாக விழுந்தாலும் ன்னு அவன் பெரிய ஆளாக ஆகிவிடுவான் அவர் கருணையாக பார்த்தாலும் அவன் பெரிய ஆளாக ஆகிடுவான் .இந்த ஜாகுவார் தகரம் சும்மா வெத்து வேட்டு அவனையெல்லாம் எதிர்த்து நாம பேசுனா அவன் ரொம்ப அலட்டிக்குவான் ஏதோ தூசி பட்டதை தட்டி விடுவதைப்போல தட்டிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான் .அவன் நேரடியாக பேச முடியாமதான் நாடார் போர்வைய போர்த்திகிட்டு பேசுறான் கோழைப்பய.தமிழன் தமிழன்னு பேசுற எவனும் உருப்படியா இல்ல .தலைவர் இறங்கி வந்து ஒரு என் ஆளு எல்லாம் வாங்கடானு ஒரு அறிக்கை கொடுத்தால் போதும் அப்புறம் தெரியும் இவனுங்க சங்கதி .
நாகூர் பாரி
மாவட்ட தலைவர்
நாகை(தெற்கு)மாவட்ட ரஜினி நற்பணி மன்றம்
செல்:9952526675
அட வீடுங்க பாஸ்…சுரியன பார்த்து நாயீ குறைச்ச …யாருக்கு நஷ்டம்…டோன்ட் வொர்ரி பே ஹாப்பி
my dear all rajini fans dont worry about this matter thai is very very foolish news
wait for you a political break. after thaliver rajini ji come to politics he gon to cm then we all enjoy god is great
நல்லவனா இருப்பது கஷ்டம்!!! நல்லவனா வாழ்ந்து காட்டுவது மிகவும் கஷ்டம்!!! எப்படி தலைவா இரண்டையும் நீ மிக சுலபமாக செய்கிறாய்!!!!!!!!!!!!!!!!!
தலைவரை எதிர்த்தவர்கள் இன்று அழிந்து போய் விட்டார்கள்!!! கூடிய சீக்கிரம் நீ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உங்கள் கண்டனத்திற்கு எங்கள் தலைவரின் தலை மயிர் கூட ஆடாது!!!!
சிங்கத்தை கொஞ்ச முடியாது..தலைவரை மிஞ்ச முடியாது…அவரை யாராலையும் அழிக்கமுடியாது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!