You Are Here: Home » Videos » கோடீஸ்வரனும் சரி ஏழையும் சரி தன் பிள்ளை நன்கு படிக்கவேண்டும் என்று நினைப்பது ஏன்? சூப்பர் ஸ்டாரின் எவர்க்ரீன் பன்ச்!

சூப்பர் ஸ்டார் இடைவிடாது படங்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் கூட அவ்வப்போது ஒரு சில படங்களில் (நட்புக்காக) கௌரவ வேடத்தில் தோன்றுவார். அப்படி கௌரவ வேடங்களில் தோன்றும் படங்களில் கூட அவரது முத்திரையை பதிக்காது அவர் விட்டதில்லை. அவர் இடம் பெறும் அந்த சில நிமிட காட்சிகளுக்காகவே அந்த படங்களை பார்த்து ரசித்த ரசிகர்கள் அநேகம் பேர் உண்டு.

அப்படி சூப்பர் ஸ்டார் அசத்தலான ஒரு கௌரவ வேடத்தில் நடித்த ‘கோடை மழை’ என்னும் படத்தை கே.டிவி.யில். சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. ‘துப்பாக்கி கையிலெடுத்து’ என்னும் இசைஞானி இளையராஜாவின் பிரபல பாடல் இடம்பெற்றது இந்த படம்தான். 1986 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்கியவர் முக்தா எஸ்.சுந்தர். இசை இசைஞானி இளையராஜா.

இந்தப் படத்தில் பள்ளி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சூப்பர் ஸ்டார் ரஜினி உரை நிகழ்த்தும் பிரமாதமான காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கிறது.

கேட்டதும் சிந்திக்க தூண்டும், நமது கண்களில் நீரை வரவழைக்கும் பிரமாதமான உரை இது.

என்னா நடிப்பு… என்னா டயலாக் டெலிவரி..என்னா எக்ஸ்பிரஷன்… என்னா ஸ்பீட்… தலைவா..!!!!!!!!!!!!!!!!!!!  (இப்போ இருக்குற முன்னணி(?!) நடிகர்கள் யாராவது ஒரு சீன் இப்படி நடிச்சி காட்டுங்க பார்க்கலாம்!! அப்புறமா என்ன பட்டம் வெச்சுகுறதுன்னு யோசிக்கலாம்!!!!)

தற்போது பள்ளிகளில் கல்லூரிகளில் மாணவர்களாக இருக்கும் நம் ரசிகர்கள் அனைவரும் மனதில் இருத்தவேண்டிய உரை இது. தவிர நாம் சாதரணமாக கையில் கட்டும் வாட்சுக்கு (WATCH ) சூப்பர் ஸ்டார் கொடுக்கும் விளக்கத்தை பாருங்கள்….

என்ன ஒரு அருமையான விளக்கத்தை எத்துனை எளிமையாக சூப்பர் ஸ்டார் கூறிவிட்டார் பார்த்தீர்களா?

பெற்றோர்களுக்கு அடங்காது படிக்க மறுக்கும் பிள்ளைகள் இந்த வீடியோவை ஒரு முறை பார்த்தால் அவர்கள் மனதில் ஒரு சிறிய மாற்றமாவது ஏற்படும் என்பது உறுதி. இது போன்ற அற்புதமான வாழ்வியல் கருத்துக்கள் தேன் தடவி கொடுக்கப்படும் மருந்தைப் போல சூப்பர் ஸ்டாரின் அனேக படங்களில் நிறைந்திருக்கின்றன. (அவற்றை இயன்றவரை அடிக்கடி இந்த பகுதியில் கவர் செய்ய முயற்சிக்கிறேன்).

இதே போல சூப்பர் ஸ்டாரின் பள்ளி விழா உரை ஒன்று ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்திலும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நாமும் அதை சில மாதங்களுக்கு முன்பு இங்கு வெளியிட்டிருக்கிறோம்.

(இது நிஜமல்ல நிழல் தானே என்று வாதிடுபவர்களுக்கு : நிஜத்திலும் இதே போல பள்ளி விழா ஒன்றில் [ஏ.வி.எம். பள்ளி] சூப்பர் ஸ்டார் கலந்துகொண்டு ஆற்றிய உரை நினைவிருக்கிறதா?)

(வீடியோ கிளிப்பை உடனடியாக பார்க்க முடியாதவர்கள் அவசியம் பிறகு பார்க்கவும்!)

Video Clip

[END]

7 Responses to “கோடீஸ்வரனும் சரி ஏழையும் சரி தன் பிள்ளை நன்கு படிக்கவேண்டும் என்று நினைப்பது ஏன்? சூப்பர் ஸ்டாரின் எவர்க்ரீன் பன்ச்!”

  1. k s amarnath k s amarnath says:

    sir can u tell me from which movie is the scene?

    ———————————
    Kodai Mazhai - (1986) Guest Appearance.

  2. kppradeep kppradeep says:

    தலைவா நீங்கள் ஒரு படிக்காத மேதை,பண்பில் சிகரம், அடக்கத்தில் அனைவர்ருக்கும் எடுத்துக்காட்டு மனிதருள் மகான்.

    நன்றி சுந்தர்ஜி

  3. dr suneel dr suneel says:

    amazing depth!! wonderful speech thanks sundar ji for sharing this video

  4. sriram sriram says:

    என்னா நடிப்பு… என்னா டயலாக் டெலிவரி..என்னா எக்ஸ்பிரஷன்… என்னா ஸ்பீட்… தலைவா..!!!!!!!!!!!!!!!!!!!

    சூப்பர் !

  5. RKumar RKumar says:

    கோடைமழை படத்தில் இடம்பெற்ற இந்த காட்சி அருமை. இதே போல ஒரு சில முந்தைய படங்களில் சில காட்சிகளை இப்பகுதியில் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். உதாரணமாக மூன்று முடிச்சு படத்தில் இடம்பெறும் "நான் ஒரு கதாநாயகி" பாடலில் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல் மிக மிக அருமை. குறிப்பாக பற்ற வைத்த சிகரட்டை வாயில் போடுவது, எதிர் திசையில் பார்த்துக்கொண்டே படிகளில் வேகமாக ஏறுவது போன்ற காட்சிகள். முதல் படம் என்ற சுவடு எந்த இடத்திலும் தெரியாத வண்ணம், ஒரு அனுபவம் வாய்ந்த நடிகரைப்போல அதில் நடித்திருப்பார் சூப்பர் ஸ்டார். நம்முடைய நண்பர்கள் பார்த்து ரசிக்கும்படி சுந்தர் பரிசீலிப்பார் என்று நம்புகிறேன்.

  6. r.v.saravanan r.v.saravanan says:

    கோடை மழை படம் நான் வெளியான புதிதில் பார்த்திருக்கிறேன்

    ரஜினி அவர்களின் பேச்சை கேட்டு வியந்திருக்கிறேன்

    நன்றி சுந்தர்

  7. nagorebari nagorebari says:

    என்ன அருமையான பேச்சு…ஸ்டைல்…உச்சரிப்பு…அபாரம்..!

    நாகூர் பாரி

    மாவட்ட தலைவர்

    நாகை(தெற்கு)மாவட்ட ரஜினி நற்பணி மன்றம்

    செல்:9952526675

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates