You Are Here: Home » Videos » ‘விஜய் அவார்ட்ஸ்’ விழாவில் சூப்பர் ஸ்டாரின் உரை - வீடியோ!‎’

சூப்பர் ஸ்டார் விருது பெறுகிறார் என்ற ஒரே காரணத்துக்காக விஜய் அவார்ட்ஸ் விழாவை விஜய் டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் எப்படியாவது தங்கள் TRP யை ஏற்றிவிடவேண்டும் என்று விஜய் டி.வி. தரப்பினர் பகீரதப் பிரயத்தனம் செய்திருந்தனர். சென்னை நகர் முழுக்க சூர்யா, விஜய், உள்ளிட்ட நடிகர்கள் விருதுகளை பெறுவது போல பிரம்மாண்ட மல்டி-கலர் போஸ்டர்கள். ஹைலைட்டாக சூப்பர் ஸ்டார், சிவாஜி அவர்களின் வீட்டில் விருதை பெரும் கண்கவர் போஸ்டர்.

ஒவ்வொரு நடிகரையும் விருதை பெற அழைத்தபோது அவர்கள் அளித்த வர்ணனை அபாரம். பொருத்தம். ஒரே ஒருவரை தவிர. நிகழ்ச்சியை பார்த்துகொண்டிருந்த எனக்கு ஒரு கட்டத்தில் ஆத்திரம் மேலிட்டு சேனலை மாற்றிவிட்டேன்.

மறுபடியும் சூப்பர் ஸ்டார் பேசுவதற்கு சற்று முன்னர் தான் மீண்டும் அந்த சானலுக்கு வந்தேன்.

சூப்பர் ஸ்டாருக்கு இவர்கள் அளித்த வர்ணனை… மீண்டும்.. மீண்டும் கேட்கத் தூண்டும் ரகம். எழுதிய கைகளுக்கு ஒரு மோதிரம் போடவேண்டும்.

சூப்பர் ஸ்டார் நடிகர் திலகத்தை பற்றி பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஆணியடித்தார்ப் போல ஸ்ட்ராங். கமல் ஒரு கணம் கண் கலங்கிவிட்டார்.

வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு….

20 Responses to “‘விஜய் அவார்ட்ஸ்’ விழாவில் சூப்பர் ஸ்டாரின் உரை - வீடியோ!‎’”

 1. kppradeep kppradeep says:

  Dear Sundar sir,

  They were irritating so much and had to wait till 11 pm to see Thalaivar speak and what a speech and the answers he gave was amazing. The intro before the award was also very good. I think Kamal was just wiping his sweat and not his tears. Moreover when bala said AnbeSivam was inspiration to make Naan Kadavul kamal's answer was annoying. AnbeSivam is and for that matter any movie is a Director's movie and kamal was just an Actor and did i not read it somewhere that the AnbeSivam was inspired some other foreign movie?. kamal takes a great pleasure at having a dig at people who believe in GOD. One should know how to talk in a forum without hurting anybody. Before AnbeSivam BABA came and in that "Babaji" tells Rajini every one is GOD and I know it but you do not and thats the difference between me and you.

  Next year Most favorite actor/ Best Actor/ popular Actor from Vijay TV will go to- Should i complete it The whole world knows.

 2. Jon Jon says:

  Hi Sundar, Thanks for this wonderful video. I was really moved by our Superstar’s emotions. very rare to see him like this in public. Thats shows how much respect and love he has for Sivaji sir. Iam proud and honoured to say iam Superstar’s fan.

 3. Ashwin Ashwin says:

  Excellent speech by Thalaivar. He is unbelievable. What a great personality. Thanks Sundar for making me weep. Rocking video.

 4. kppradeep kppradeep says:

  டைரக்டர் பால கீழ் இருக்கும் படத்தின் வீடியோவில் இருந்து inspire ஆகி இருக்கலாம். கமல் இருந்ததால் அன்பே சிவம் என்று சொன்னார். கமல் கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் "நாக்கில எழுதலே" என்று பேசி தன் அதிக பிரசங்கி தனத்தை காட்டி விட்டார். அதனால் தான் என்றும் அன்பழகன் நெடுஞ்செழியன் மாதிரி நம்பர் 2 வாக வே இருக்கிறார்.

  Kamal please grow up. see the following link
  http://www.youtube.com/watch?v=QSCSdXv8AtI&fe...

 5. tveraajesh tveraajesh says:

  தலைவர் மிக அருமையாக நிறுத்தி நிதானமாக அதைவிட மிக கண்ணியமாக இருந்தது அவரின் பேச்சு. கோபி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சற்று கூட யோசிக்காமல் தனது பாணியில் பதில் அளித்து அசத்தி விட்டார். நிச்சயம் அவருக்கு இந்த கௌரவமான விருது அவரின் திரை உலக பயணத்தில் ஒரு மணி மகுடம் தான். சந்தேகம் இல்லை.

  ————————————-
  இந்த 'கோபி'ன்னு பேர் இருக்குறவங்க எல்லாம் கேள்வி கேக்குறதுல மன்னனுங்கன்னு நினைக்கிறேன்….

  - சுந்தர்

 6. dr suneel dr suneel says:

  indha trp rating kaga thana avanga aasa patanga…na prgrm pakavae illa..correct ah surya ku award kodukradhu lendu thaan start pannen paka..

  thalaivar and shivaji had great mutual love and respect. thalaivar was emotional, vaartha varala avaruku.

 7. karthik karthik says:

  Hi Sundar,

  Nice post. Nice video Clip. I have never seen Thalaivar getting emotional in public. This shows how much love and affection he is having towards The Great Sivaji Ganesan. In this early morning you made not only me, my family to drop tears(Tamizhagame azhudhiruckum!)

  Thanks again Sundar. We have to learn a lot from our Thalaivar.

  Thanks,

  Karthik.T.

 8. Leo Leo says:

  தலைவரின் பேச்சு மிக மிக அருமை.

  தலைவர் எப்பொழுதும் போல சூப்பர்.

  நன்றி சுந்தர் சார்.

 9. கிரி கிரி says:

  கண்கலங்க வைத்து விட்டார் ..உண்மையாகவே! :-(

 10. Pradeep G Pradeep G says:

  Hi Sudar,,,
  Thanks for the video…I was also eagerly waiting to see Thalaivar speech yesterday..But i differ from your comment…I like the whole show…Vijay TV awards was honest & true…Every award winner had their own values & talent (leave the favourite category..it was because of audience polls)…

  I like the way kppradeep said "Next year Most favorite actor/ Best Actor/ popular Actor from Vijay TV will go to- Should i complete it The whole world knows"…I hope atleast Enthiran rajini will attend award function & not to collect all the awards from home,,,

 11. darwin darwin says:

  தலைவர் அமைதியா அவர் இடத்துல இருக்கார் அவர் களத்தில் irangina avalvu thaan .

 12. சுந்தர்ஜி,

  தலைவர் ரஜினி அவர்கள் செவாலியே சிவாஜி கணேசன் விருது பெரும் விடியோவை இணைத்தமைக்கு நன்றிகள் பல.

  நான் அதனை நேற்று விஜய் டிவியில் பார்ப்பதற்காக காத்திருந்தேன். ஆனால், இயக்குனர் பாலா "நான் கடவுள்" படத்திற்கு விருது பெறும்போது, அதற்கு inspiration ஆக இருந்தது "அன்பே சிவம்" படத்தில் வரும் "நீங்க கூட கடவுள் தான்" என்ற வசனந்தான் என்று விருது வழங்கிய கமலிடம் கூறப்போக, அதற்கு நியாயமாக பெருமை பட்டிருக்க வேண்டிய கமல், அதற்கும் மேலே போய், தேவை இன்றி, இந்துக்களின் கடவுள் நம்பிக்கைகளை வேண்டுமென்றே கேவலப்படுத்தும் வகையில் பேசியதில், எனக்கு ரத்தம் கொதித்தது. உடனே, audio வை mute செய்து விட்டேன், அந்த ஆள் பேசுவதை கேட்க பிடிக்காமல்; சிறுது நேரத்தில், டிவியை அனைத்தும் விட்டேன், மூட் அவுட் ஆகியதால். கடைசியில், தலைவர் விருது பெறுவதை பார்க்கவே இல்லை.

  எனவேதான், இன்று தலைவரின் பேச்சை இந்த விடியோவில் பார்க்கையில், என்ன ஒரு பக்குவப்பட்ட மனிதர், கொஞ்சம் கூட தலைகனமோ, தற்பெருமையோ, மற்றவர்களையோ, மற்றவற்றையோ தாழ்வாகவோ, இழிவாகவோ கருதும் எண்ணமே இல்லாமல், ஈகோ என்பது கிஞ்சித்தும் இன்றி, ஏதோ ஒரு சாதாரண ஆள் போல் நின்று தன் வெற்றிக்கு முழு முதல் காரணமான "ரஜினி ஸ்டைல்" என்பதே, சிவாஜி சாரின் ஸ்டைல் தான் என்று கூறியதை பார்த்தபோது, சிலிர்த்தேன் - "தலைவா, நீ ஒரு மகான்" என்று.

  என்ன ஒரு வித்தியாசம் இவர்கள் இருவருக்கும்? விருது வழங்க வந்த இடத்தில், தன்னுடைய தற்பெருமையை பேசிக்கொண்டு இருந்த ஒரு "தற்குறி நடிகன்" எங்கே? அதே விழாவில், தனக்கு ஒரு முக்கியமான விருது வழங்கப்படவிருந்தாலும், அதற்கு தான் தகுதியானவன்தானா என்று கேட்டு, சிவாஜி அவர்களின் பெயரினால் வழங்கப்படும் விருது என்பதால், அதனை தாழ்மையுடன் சிறிதும் கர்வமின்றி பெற்றுக்கொண்ட, "நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாத" ஒரு "மனிதன்" எங்கே?

  இந்த contrasting personalities இருவரையும் ஒரு சேர மக்கள் கண் முன்னால் கொண்டு வந்த விஜய் டிவிக்கு நன்றி. மக்கள் இனியாவது கமல் என்ற ஆள் எப்பேர்பட்ட தலைகனம் பிடித்த "நிஜ வாழ்க்கை நடிகன்" என்பதை புரிந்து கொள்வார்கள் என்று நம்புவோம்.

  தலைவர் ரஜினி அவர்களுக்கு ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையும், பூரிப்பும், நியாயமான கர்வமும் அடைகிறேன்.

  அன்புடன் அருண்

 13. Skandamurthy Skandamurthy says:

  அடுத்த வருஷம் விஜய் அவார்டா??? தலைவருக்கு (ரோபோவுக்கு) தமிழ்நாடு ஸ்டேட் அவார்ட் + நேஷனல் அவார்ட் + ஆஸ்கார் அவார்ட் காத்திருக்கு..

 14. Bala Bala says:

  i am really proud to be a fan of this humble human being. No one can with fame of his level and stature could match him

  என்ன வாழ்கை என்ன மனுஷன் சார் ! ரஜினி ரஜினி தான்

 15. Satish KV Satish KV says:

  Hi Sundar

  Did you notice two things.

  1. Thalaivar didn't mention "Vijay TV" by name anywhere. The same happened during the show to felicitate Kamal Hasan. He knows very well that Vijay TV (or for that matter any media) will play his praise of the channel million times to gain mileage.

  2. Whatever Thalaivar said about Sivaji applies 100% to Thalaivar also. For a moment it looked like Thalaivar was telling about him :-) …. It matches 100%

  -Satish

 16. vasi.rajni vasi.rajni says:

  நண்பர் அருணாசலம் அவர்களின் ஆதங்கம் எனக்கு நன்றாக புரிகிறது. கடவுள் நம்பிக்கையை கேலிசெய்வது நிச்சயம் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. குறிப்பாக நாத்திகம் பேசுபவர்கள் ஹிந்து மதத்தையே தாக்கி பேசும் வல்லமை படைத்தவர்கள். தலைவர் இன்று ஆன்மிகத்தில் ஒரு சாதுக்களுக்கு நிகரான நிலையில் உள்ளவர். அவர் பெரியார் அவர்களை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் படைத்தவர். ஆனால், நிச்சயமா எந்த ஒரு நாத்திகனும் ஆன்மிகத்தின் சில நல்ல விஷயங்களை கூட ஆராய்ந்து பார்க்காமல் ஹிந்து மதத்தை தருமுரக விமர்சிப்பது எனது மனதை பல முறை; ஏன் ஒவ்வொரு முறையும் ரணப்படுதியுள்ளது.

  பெரியாரின் பல நல்ல கொள்கைகளை விட்டு விட்டு வெறுமனே நாத்திகம், மற்றும் இறை மறுப்பு கொள்கைகள் மட்டும் வைத்துள்ளவர்கள் நிச்சயம் பகுதரிவளர்கள் அல்லர். அப்படிப்பட்டவர்கள் குதரக்கவதிகள்!!!!!!

  தான் ஒரு உண்மையான அன்மிகவதியகவும்,ஆத்திகனகவும் பெரியாரின் கொள்கைகளை பகுத்தறிந்து ஏற்கும் நம் தலைவரே உண்மையான பகுத்தறிவாதி ..

  rajni will rule tamil nadu

 17. tveraajesh tveraajesh says:

  அருண் உங்கள் ஆதங்கம் புரிகிறது. இதற்காக கவலை படாதீர்கள். கமலை பற்றி அவரின் குணங்களை பற்றி திரை உலகம் நன்கு அறிந்த விஷயம். இதற்கு சரியான வசனத்தை கூறட்டுமா?

  நல்லவங்களை (தலைவரை) ஆண்டவன் சோதிப்பான். அனா கை விடமாட்டான். கெட்டவங்களுக்கு (தற்குறி நடிகன்) நெறைய குடுப்பான். ஆனா கை விட்டுடுவான். தலைவர் மனநிறைவோடு நிம்மதியாக தான் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார். ஆனால் அந்த நடிகனுக்கு எந்தவிதத்திலும் நிம்மதி இல்லை எனபது அனைவர்க்கும் தெரியும்.

 18. sriram sriram says:

  நண்பர் அருணாசலம் நான் மனதில் நினைத்த அனைத்தையும் கூறிவிட்டார் ,என்றும் தலை கனத்திடாத தலைவன் ,பெருமை கொள்வோம் !

 19. Vira Vira says:

  சுந்தருக்கு நன்றி!

  நிச்சயமாக தலைவரை பற்றிய முன்னுரை கேட்கும்போது சிலிர்த்துவிட்டது. தலைவருக்கு இது மணி மகுடம் தான்.

  ஆனால், நண்பர்களுக்கு, நாம் இங்கே கமலை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.

  எந்திரனுக்கு காத்திருப்போம்…! இந்த ஆண்டு இனி 'எந்திரன் ஆண்டு'!

 20. micson micson says:

  தலைகனமில்லா ,வெள்ளை உள்ளம் கொண்ட தன்னிகரில்லா ஒரே தலைவன் ,அண்ணன் ,அஞ்சா நெஞ்சன் ,இரும்பு நெஞ்சம் கொண்ட எந்திரன், சூப்பர் ஸ்டாரின் ரசிகனாக இருப்பதில் பெருமை,பெருமை

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates