You Are Here: Home » Videos » வைரமுத்துவின் தமிழை ரசிக்க மாறுவேடத்தில் வந்த சூப்பர் ஸ்டார் - வீடியோ!

சில வாரங்களுக்கு முன்பு, சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற கவியரசு வைரமுத்துவின் கவியரங்கிற்கு சூப்பர் ஸ்டார் மாறுவேடத்தில் சென்று, மக்களோடு மக்களாக அமர்ந்து ரசித்ததை பற்றி நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். உங்களுக்கு நினைவிருக்கலாம்.

நண்பர் விஜய் ஸ்ரீனிவாசன் இது குறித்து நமக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார். சென்ற வாரம் வெள்ளி மாலை கலைஞர் தொலைகாட்சியில் அக்கவியரங்கம் காட்டப்பட்டதாகவும், அதில் மாறுவேடத்தில் வந்திருந்த தலைவரை தான் பார்த்ததாகவும் கூறியிருந்தார்.

இது போதாதா நமக்கு? நிகழ்ச்சியின் வீடியோவை தேடி பிடித்துவிட்டோம். என்ன.. தலைவர் வர்ற பார்ட்டை கண்டுபிடிக்கிறது தான் கொஞ்சம் கஷ்டமாயிருந்துச்சு. (செம த்ரில்லிங்பா!)

சூப்பர் ஸ்டாரை தேடும் சாக்கில், வைரமுத்துவின் தமிழருவியில் நாமும் சில மணித்துளிகள் நனைந்தோம் என்பதில் மகிழ்ச்சி! காதல் பற்றி இன்னும் ஆழமாக புரிந்துகொண்டோம் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி!!

கீழ்கண்ட வீடியோவில், 3:34 நொடிகளில் கூலிங் க்ளாஸ் மற்றும் சால்வை அணிந்த ஒரு பெரியவரை பார்க்கலாம். சாட்சாத் அந்த பெரியவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி. யாருக்கும் எந்த தொந்தரவும் இன்றி, தமிழமுதம் பருக நினைத்த சூப்பர் ஸ்டாரின் செயல் பாராட்டத்தக்கது.

முழு தொகுப்பையும் பார்க்க விரும்புபவர்கள் கீழ்கண்ட லின்க்கை க்ளிக் செய்யவும்:

http://www.tamilbase.com/

சூப்பர் ஸ்டார் தோன்றும் வீடியோவை மட்டும் பார்க்க விரும்புபவர்கள், கீழ்கண்ட லின்க்கை க்ளிக் செய்யவும் அல்லது வீடியோவை ப்ளே செய்யவும்.

http://www.youtube.com/watch?v=UU1qOfe3PQc&feature=player_embedded

(Video Courtesy: techsatish.net)

————————————————————————————-
Related news:

வைரமுத்து கவியரங்கத்துக்கு மாறுவேடத்தில் வந்த சூப்பர் ஸ்டார் – தினத்தந்தி செய்தி!

http://onlysuperstar.tamilmovieposter.com/?p=6806
————————————————————————————-

From our archives:

தலைவர் ஏன் மாறுவேடம் புனைகிறார்?

‘மாறுவேடத்தில் நகர்வலம்’ – கதைக் களத்தில் கல்கியும் நிஜ களத்தில் ரஜினியும்!!
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=4828

[END]

29 Responses to “வைரமுத்துவின் தமிழை ரசிக்க மாறுவேடத்தில் வந்த சூப்பர் ஸ்டார் - வீடியோ!”

  1. S.Vijay S.Vijay says:

    Sundar,

    Hats off to your commitment & hardwork… No words to appreciate you . Thanks a lot

  2. muthusingaram muthusingaram says:

    இது எல்லாம் ஒரு செய்தியா சாரே? வைரமுத்து ஜால்ரா போடுவதில் பலே கில்லாடி.

  3. tljana tljana says:

    I'm sitting with my team in my favourite city,a city that hs gven me unforgettable moments of my life,LA.Doing the last touches on Endhiran.

    rasool pukutty in twitter.

  4. DARWIN DARWIN says:

    சுந்தர் இதை நான் கலைஜர் டீவியில் பொட்ட பொதே கண்டுபிடிசிட்டேன். ஒரு உண்மையான தலைவர் ரசிகனுக்கு அவர் எந்த வேடத்தில் வந்த‌ாலும் கண்டுபிடிச்சிவிடலாம்…

    thalaivar is very smart

  5. Ajay Ajay says:

    Are you sure? I could not see any resemblance…

  6. harisivaji harisivaji says:

    எப்படி போனாலும் கண்டுபிடிசுடுறாங்க ….இந்த சுந்தர் பையன் யாரு ….ரஜினி

  7. Mrs.krishnan Mrs.krishnan says:

    Great work. Vidha vidhama getup podaradula ulaga nayaganaye minjiduvar pola iruke. Avaruku Tamil mela evlo patru irundha indha nigalchiku maruvedathil vandu rasithirupar. Puriya vendiyavangaluku purinja sari.

  8. ganesh ganesh says:

    grt work done……………………. simply superb…. thanks sundarji..

  9. anbuaran anbuaran says:

    பார் போற்றும் மன்னனை பாருங்கள் இது போல் எங்காவது ஒரு மனிதரை பார்த்ததுண்டா உலகில் மீண்டும் மீண்டும் உன்பால் ஈர்க்கப்படுகிறேன் தலைவா இதை நான் வாழ்நாள் முழுவதும் உன்னிடம் எதிர்பார்கிறேன் உனது செய்கையால் எனக்கு நிறைய உணர்த்துகின்றாய்.சுந்தர்ஜி நன்றி.

  10. Vira Vira says:

    சத்தியமா சொல்கிறேன் .. வீடியோ பார்த்து கண் கலங்கிட்டேன்….! எவ்வளவு பெரிய ஸ்டார் … தமிழின் பால் பற்று கொண்டு.. இவ்வளவு மெனக்கட்டு இருக்காரு…

    நண்பர்களே.. இனியும் நம் தலைவரை பார்த்து எந்த ………………வது (fill it ) தமிழன் இல்லைன்னு சொன்னான்னா..?… அவன ஓட ஓட அடிக்கறத தவிர வேற வழி இல்ல…

    தலைவா நீ ஒரு இந்தியன்… தமிழன்…! வாழ்க….

    -வீரா

  11. R.Gopi R.Gopi says:

    //Mrs.krishnan says:

    July 20, 2010 at 9:14 am

    Great work. Vidha vidhama getup podaradula ulaga nayaganaye minjiduvar pola iruke. Avaruku Tamil mela evlo patru irundha indha nigalchiku maruvedathil vandu rasithirupar. Puriya vendiyavangaluku purinja sari.//

    மிஸஸ்.கிருஷ்ணன்….

    யாருக்கு புரியணும்னு சொல்றீங்கன்னே எனக்கு புரியல…

    ஒரு வேளை, என் புரிதலில் கோளாறோ? சுந்தர் மாதிரி பெரியவங்க (Avaruku Tamil mela evlo patru irundha indha nigalchiku maruvedathil vandu rasithirupar. Puriya vendiyavangaluku purinja sari) இந்த வார்த்தையின் அர்த்தத்தை சொல்லி என்னை மாதிரியான பாமரனுக்கு விளக்கலாமே!!

  12. sriram sriram says:

    மக்களுடன் மக்களாய் வாழும் மன்னனே ,உன்னை பின்பற்ற நாங்கள் என்ன தவம் செய்தோமோ!

    பசுவின் குணம் யானையின் பலம் ,உனக்கு நிகர் உலகில் நீ ஒருவன் மட்டுமே !

  13. mrs.krishnan mrs.krishnan says:

    @R.gobi. Sorry sir. Nandan correcta sollala poliruku. Unga baashail sollanumna tamil karadi maadhiri aalungaluku purinja sari. Tamil mela aarvam illadha orutharuku indha programmuku vesham pottu varanumnu avasiam illaye. Vairamuthuvukaga vandarna original getuplaye vandurupar.tamil tamilnu uyira vidara silar idhai purinjukanum. Adu purinjalum othukamatanga. Naai vaalai nimutha mudiadhu. (unga jokkiria nethudan pathen. Fulla padika time illa. Sunday padikanum. Gramarajan- super)

  14. mrs.krishnan mrs.krishnan says:

    @ R. Gopi. Ungalamadhiri arivaalike purialena, naan sonna vidathiladan thappu.

  15. ponraj ponraj says:

    எந்திரன் திரைக்குவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகன். பதிவுக்கு நன்றி சுந்தர்.

  16. R.Gopi R.Gopi says:

    //mrs.krishnan says:

    //(unga jokkiria nethudan pathen. Fulla padika time illa. Sunday padikanum. Gramarajan- super)//

    நன்றி திருமதி கிருஷ்ணன் அவர்களே… ஜோக்கிரியிலும், எடக்கு மடக்கிலும் (www.edakumadaku.blogspot.com) நிறைய காமெடி கதம்பம் உள்ளது… படித்து மகிழுங்கள்…

    July 20, 2010 at 2:21 pm

    //@ R. Gopi. Ungalamadhiri arivaalike purialena, naan sonna vidathiladan thappu.//

    யப்பா…… தெரியாம சொல்லி மாட்டிக்கிட்டேனோ!!?? என்னது, நான் அறிவாளியா? (இந்தியாவுக்கு சுதந்திரம் கெடச்சுடுத்தா!!??)எனக்கு தெரிஞ்சதெல்லாம், ஒரே ஒரு வாளி தான்… அது, பாத்ரூம்ல குளிக்க தண்ணி பிடிச்சு வைக்கற அந்த ப்ளாஸ்டிக் வாளி!!

  17. mrs.krishnan mrs.krishnan says:

    @ R.Gopi. Kadasi varai yedavadu purinjudanu sollalaye sir.

  18. karthik karthik says:

    Thank u sundarji,

    he is real ulaga nayagan.

  19. T.JAWAHAR T.JAWAHAR says:

    மக்களுடன் மக்களாய் வாழும் மன்னனே ,உன்னை பின்பற்ற நாங்கள் என்ன தவம் செய்தோமோ!

    பசுவின் குணம் யானையின் பலம் ,உனக்கு நிகர் உலகில் நீ ஒருவன் மட்டுமே !

  20. RAMAR Tuticorin RAMAR Tuticorin says:

    சூப்பர் ஸ்டார் போல நல்ல மனிதர் யாரும் இல்ல.

  21. DEEN (PROUDLY RAJINI DEEN (PROUDLY RAJINI says:

    கோபி அவர்களே..!! mrs கிருஷ்ணன் சொன்ன கருத்து என்னவென்றால்,நிறைய அரைவேக்காட்டு,தமிழன் என்று சொல்லி கொண்டு வீட்டில் தெலுங்கு பேசிக்கொண்டு இருப்பவர்களையும்,ரஜினி தமிழன் அல்ல அவர் தமிழ் நாட்டில் இருக்க கூடாது என்று வாந்தி எடுத்து கொண்டு இருப்பவர்களையும்,(இதில் கரடி மட்டும் அல்ல,புரட்சி தமிழன் என்று சொல்லி கொள்பவர்களும்,நடிகர் சங்கத்தில் இருக்கும் சில வயிறு (ரஜினியின் புகழ் நினைத்து )) எரியும் சுயநலவாதிகளையும்,சில சீப் விளம்பர அரசியல்வாதிகளையும் மனதில் கொண்டு mrs. krishnan குறிப்பிட்டுள்ளார்..am i correct mrs.krishnan? இது அனைத்து ரஜினி ரசிகர்களுக்கும் தெரிந்த விஷயம் தான்.!

    கோபி அவர்களே,நானும் தங்கள் ஜோக்கிரி மற்றும் EDAKKU MADAKKU வாசகன்! ரொம்ப நாளாக படித்து கொண்டு வருகிறேன். உங்களுக்கு நல்ல sense of humour இருக்கு friend ..

    உண்மையில் என்ஜாய் பண்ணி உங்க சைட் படிப்பேன்! இன்னும் சொல்ல போனால்,என்னோட favorite bar -ல் onlysuperstar ,jokkiri , edakkumadakku ,1st வைத்து இருக்கேன்..! காரணம் இவை நான் ஒவ்வொரு நாளும் விசிட் பண்ணும் sites !! என்னோட லேப்டாப் on பண்ணினேன் என்றால் முதலில் onlysuperstar கு விசிட்!!then ஜோக்கிரி..! then எடக்குமடக்கு..! அதுக்கு அடுத்து தான் என் சொந்த விஷயங்கள் (even 2 check my mails !)

    so keep it up gopi..all the best..

    sundarji தலைவர் நியூஸ்ல கலக்குறாங்க..!நீங்களும் humour ல கலக்குறீங்க..! இதில சந்தோஷ பட வேண்டிய விஷயம் என்னன்னா…நீங்க எல்லோரும் தலைவர் ரசிகர்கள்.!! எனக்கு இதில் பெருமையா இருக்கு.. KEEP IT UP GUYS..!

  22. DEEN (PROUDLY RAJINI DEEN (PROUDLY RAJINI says:

    SUNDARJI அவர்களே,
    இந்த தலைவர் நியூஸ் http://www.tamilcinema.com -ல் படித்தேன்..
    இதில் தவறு இல்லையென்றால் உங்கள் சைட்-ல் பிரசுரிக்கவும்.
    தலைவருக்காக தாங்கள் எவ்வளவோ செய்கிறீர்கள் …ஏதோ என்னால் முடிந்த ஒரு சிறிய தலைவர் நியூஸ் நம் ரசிகர்களுக்காக..!

    எந்திரன் ஆகஸ்ட்டில் வராது?
    -குறுகுறுக்கும் கோடம்பாக்கம்

    'எப்போ வரும் எந்திரன்' என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆகஸ்ட்டில் ரிலீஸ் என்று சூப்பர் ஸ்டார் ரஜினியும் சொல்லிவிட்டார். ஆனால்?

    மலையை கட்டி இழுப்பது என்றால் அவ்வளவு எளிதில் நடக்கிற காரியமா? இப்போதிலிருந்தே ஏரியாவை விலை பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆடியோ ரைட்ஸ் மட்டும் ஏழு கோடிக்கும் மேல் விற்கப்பட்டிருப்பதாக தகவல். இந்நிலையில் விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பையும் மீறி எக்கச்சக்க கோடிகளில் துவங்குகிறதாம் வியாபாரம். இந்த முறை பல அரசியல்வாதிகளும் எந்திரன் வாங்க ஆர்வம் காட்டுவதுதான் மேலும் ஆச்சர்யம் என்கிறது கோடம்பாக்க நிலவரம். ரஜினி படத்தை நாமும் ரிலீஸ் பண்ணினோம் என்ற பெருமையை தட்டிக் கொள்ளதான் அரசியல்வாதிகளிடையே இந்த போட்டியாம்.

    இந்த பரபரப்பு ஒருபுறம் இருக்க, ஆகஸ்ட்டில் படத்தை ரிலீஸ் செய்யும் வாய்ப்புகள் ரொம்பவே குறைவு என்கிற தகவலும் வந்து சேர்கிறது. செப்டம்பர் இரண்டாவது வாரத்தில்தான் எந்திரன் திரைக்கு வரும் என்கிறது சில உறுதியான செய்திகள்.

    தேர் தெருவுக்கு வந்தால்தானே பேருக்கொரு அர்ச்சனை, பொழுதுக்கொரு சூடம் என்று பக்தி களைகட்டும்? சீக்கிரம் வாங்க தலைவரே - http://www.tamilcinema.com

    ——————————————————————
    எஸ்… இந்த செய்தி உண்மை தான். ஆனா இதை நாம ஏற்கனவே சொல்லிட்டமே பாஸ்…. படிக்கலியா நீங்க?

    http://onlysuperstar.tamilmovieposter.com/?p=7133
    http://onlysuperstar.tamilmovieposter.com/?p=7092

    - சுந்தர்

  23. mrs.krishnan mrs.krishnan says:

    Thank u very much Deen. Neenga solradathan nanum solla vanden. Thanks.

    —————————————-
    அப்பாடா… சந்தோஷம்.
    பெரியவங்கல்லாம் ஏதோ பேசிக்கிட்டுருக்கீங்க. சின்னப் பையன் நாம் எதுவும் குறுக்கே பேசக்கூடாதுன்னு தான் நான் சைலன்ட்டா இருந்தேன்.
    - சுந்தர்

  24. DEEN (PROUDLY RAJINI DEEN (PROUDLY RAJINI says:

    நீங்க சொல்றது உண்மை தான் சுந்தர்ஜி..நீங்க இந்த விசயத்தை எப்போவோ சொல்லிட்டிங்க..! (ரஜினி நியூஸ் ல நீங்க தான் ராக்கெட் ஸ்பீட் ஆச்சே..!) நான் ஏற்கனவே உங்க சைட்-ல படிச்சுட்டேன்.தலைவர் திரையில் fast என்றால் நீங்க net ல fast ..!! பேசாம நீங்க உங்க பெயரை speed sundar னு மாத்திக்கலாம்..!!.(எவன் எவனோ தனக்கு தானே பட்டம் வைத்து கொள்கிறான்! உங்களுக்கு நாங்க அந்த பட்டம் கொடுக்க உங்களுக்கு அந்த தகுதி இருக்கு..lol ..)

    எந்திரனை மலையாக உருவக படுத்தினது, அரசியல்வாதிகளும் எந்திரன் வாங்க போட்டி போடுவது, இது எல்லாத்தையும் விட வேற ஒரு common site -ல இந்த நியூஸ் வந்ததை பார்க்க சந்தோசமா இருந்தது..! நம்ம ரசிகர்களும் சந்தோஷ படட்டும் என்று தான் அனுப்பினேன்!

    நன்றி சொன்னதுக்கு நன்றி mrs .krishnan அவர்களே..! u r welcome ..

    mrs .krishnan ..சுந்தர்ஜியை லொள்ளை கவனிச்சீங்களா?! நாம எல்லோரும் பெரியவங்கலாம்!,சுந்தர்ஜி சின்ன பையனாம்! அதனால குறுக்கே பேசாம இருந்தாங்களாம்!

    சுந்தர்ஜி..!! இந்த லொள்ளு தான வேணான்றது?! கோபி வந்துட்டு போனவுடன் நீங்களும் அவர மாதிரி காமெடியா கலாய்க்க ஆரம்பிச்சுட்டீங்க! தலைவர் போல தலைவர் ரசிகருக்கும் பெருந்தன்மை இருக்க தான் செய்யும்! அவரை போல sense of humour ,வர தான் செய்யும்..!! கலக்குங்க சின்ன பாஸ்..!!

  25. Mrs. Krishnan Mrs. Krishnan says:

    //அப்பாடா… சந்தோஷம்.

    பெரியவங்கல்லாம் ஏதோ பேசிக்கிட்டுருக்கீங்க. சின்னப் பையன் நாம் எதுவும் குறுக்கே பேசக்கூடாதுன்னு தான் நான் சைலன்ட்டா இருந்தேன்.

    - சுந்தர்//

    சுந்தர் அண்ணா இந்த schoolla நீங்கதான் எங்களுக்கெல்லாம் ஹெட் மாஸ்டர். கோபி அண்ணன் கிளாஸ் டீச்சர். நாங்கெல்லாம் students அதுவும் நான் நியூ admission . நீங்க போய் இப்படி சொல்லலாமா? ஒரு கமெண்ட் அனுபினதுகு இப்படி ஒரு punishmenta ?

    @ Mr . Deen

    //நன்றி சொன்னதுக்கு நன்றி mrs .krishnan அவர்களே..! //

    இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல.

  26. R.Gopi R.Gopi says:

    //அப்பாடா… சந்தோஷம்.

    பெரியவங்கல்லாம் ஏதோ பேசிக்கிட்டுருக்கீங்க. சின்னப் பையன் நாம் எதுவும் குறுக்கே பேசக்கூடாதுன்னு தான் நான் சைலன்ட்டா இருந்தேன்.

    - சுந்தர்//

    ஹலோ மிஸஸ் கிருஷ்ணன், தீன்…. ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட்….

    சின்னவர் சுந்தர் அமைதியா, எதுவும் குறுக்கே பேசலேன்னா, எவ்ளோ பெரிய களேபரம் நடக்குதுன்னு….

    //mrs.krishnan says:

    July 20, 2010 at 4:24 pm

    @ R.Gopi. Kadasi varai yedavadu purinjudanu sollalaye sir.//

    தாங்கள் சொன்னதை புரிந்தேன்…. தெளிந்தேன்…. நன்றி…. இப்போ ஓகேவா!!

    //Mr . Deen

    //நன்றி சொன்னதுக்கு நன்றி mrs .krishnan அவர்களே..! //

    இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல.//

    என்ன…கொஞ்சம் ஓவரா? நீங்க வேற… இது தீன் போட்ட 12 பால் ஓவர்…..

  27. Lawrance Lawrance says:

    ஒரு கொலையாளியின் புகைப்படத்தை ஏதோ ஒரு அரசு விழாவின் பிலிம் பதிவில் இருந்து
    சி.பி.ஐ. நோண்டி எடுத்து விட்டார்கள் என கேள்விப்பட்டபோது அடேயப்பா!!! இது தான் நோண்டி நொங்கெடுப்பதோ… என வியந்திருக்கிறேன்.

    ஆனால், அப்படி ஒரு டிடெக்டிவ் சுந்தருக்குள் இருப்பார் என எதிர்ப்பார்க்கவே இல்லை.

    சுந்தர் சூப்பர்….
    சூப்பர் ஸ்டாரின்
    சூப்பர் ரசிகன்

    ஆனால் ஒரு தலைவர் மாறுவேடம் பூண்டு மக்களோடு மக்களாய் இருக்க ஆசைப்படுவதற்கு என்ன என்ன காரணம் இருக்கலாம்.

    1. தமிழ் ஆர்வம் ‍ எஸ் நிச்சயம் இருக்கலாம்
    2. மேடைக்கு நேரடியாய் வந்துவிட்டால், அவரை முன்னிலைப்படுத்தி முகஸ்துதி பாடுவதில் இஷ்டம் இல்லாமல் இருக்கலாம்
    3. மக்கள் எதை ரசிக்கிறார்கள், அவர்களது ரசனையின் ரகம் புரிய முயற்சி செய்யலாம்
    4. பாமர மக்களின் அன்றாடத் தேவை என்ன, அவர்களை பாதிக்கும் விஷயம் என்ன என புரிந்தால் என்னால் ஏதாவது செய்ய முடியுமா என உச்சகட்ட மனிதாபிமானம் இருக்கலாம்.
    5.தான் அடைந்த புகழ், செல்வாக்கை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு வேளை நானும் சராசரியாய் இருந்திருந்தால் எப்படி என உணர வந்திருக்கலாம்.

    அவரே இதுதான்… இதற்குத்தான்… என சொல்லும் வரை, அந்த மகானை புரிய முயற்ச்சிப்பதே ரசிகனின் பணியாகும்.

    ———————————————————————
    லாரன்ஸ், தங்கள் வருகைக்கு நன்றி.

    தலைவர் இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. கடந்த பல வருடங்களாக மாறுவேடத்தில் நிகழ்சிகளுக்கு போய்வருகிறார். பாடலாசிரியர் பா.விஜய் ஒரு மேடையில் சூப்பர் ஸ்டார் மாறுவேடத்தில் வந்து ஒரு நிகழ்ச்சியை கண்டு ரசித்துவிட்டு சென்றது பற்றி கூறியிருக்கிறார்.

    ஏன், தலைவரே 'சாமி' வெள்ளி விழாவில், சூர்யாவின் 'காக்க காக்க' படத்தை மாறுவேடம் புனைந்து மக்களோடு மக்களாக கலந்து ரசித்து பார்த்ததை கூறியிருக்கிறார்.

    தலைவர் ஏன் மாறுவேடம் புனைகிறார் என்பதற்கான காரங்களை அலசி நாம் அளித்த பதிவை மறுபடியும் நீங்கள் ஒரு முறை படிக்க வேண்டும்.

    ‘மாறுவேடத்தில் நகர்வலம்’ – கதைக் களத்தில் கல்கியும் நிஜ களத்தில் ரஜினியும்!!
    http://onlysuperstar.tamilmovieposter.com/?p=4828

    - சுந்தர்

  28. Senthil Kumar Senthil Kumar says:

    சத்தியமா சொல்கிறேன் .. வீடியோ பார்த்து கண் கலங்கிட்டேன்….!

    அனைவரும் கண்களின்கினோம்…

    நண்பர்களே.. இனியும் நம் தலைவரை பார்த்து எந்த ………………வது (fill it ) தமிழன் இல்லைன்னு சொன்னான்னா..?… அவன ________ தவிர வேற வழி இல்ல…

    இந்த மாதிரியான ———————- பத்தி நாம பேச வேண்டிய அவசியம் இல்லை…

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates