You Are Here: Home » Guest Article, Superstar Movie News » “31ம் தேதியே பாடல்களை கேட்கலாம்” - எதிர்பாராத சந்திப்பில் வைரமுத்து அளித்த இன்ப அதிர்ச்சி! - Guest Article

ம் தள வாசகர் ரோஷன் எனக்கு ஒரு  இ-மெயில் (ஆங்கிலத்தில்) அனுப்பியிருந்தார்.  அதில் தான் கவிப் பேரரசு வைரமுத்துவை கோவை விமான நிலையத்தில் தற்செயலாக சந்திக்க நேர்ந்ததாகவும் எந்திரன் ஆடியோ குறித்து சில சூப்பர்  தகவல்களை பெற்றதாகவும் கூறியிருக்கிறார். கவிப்பேரரசுவுடன் புகைப்படம் கூட எடுத்துக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.

நன்றி ராகேஷ் அவர்களே. தாங்கள் நேற்று இருந்த ஃபீலிங்கை தங்கள் எழுத்துக்களை வைத்தே என்னால் உணர முடிகிறது. உங்கள் உற்சாகம் எனக்கும் தொற்றி, நான் ஏதோ வைரமுத்துவை பார்த்தது போல எனக்கு ஒரு உணர்வு.

தங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றி.

- சுந்தர்

simplesundar@gmail.com
+91-9840169215

————————————————————————-
அவரது மெயிலை அப்படியே மொழிபெயர்த்து தருகிறேன்:

கோவை விமான நிலையத்தில் கவியரசு வைரமுத்துவுடன் ஒரு ஜாலி சந்திப்பு - நம் வாசகர் ராகேஷ் ரோஷன்

ஹை சுந்தர்,

தலைவரை பற்றிய செய்திகளை ஆவலுடன் திக்குகள் எட்டும் தேடி பார்த்து படித்து ஆனந்தப்படும் தீவிர ரசிகன் நான். கடந்த 4 - 5 ஆண்டுகளாக உங்கள் தளத்தின் ரெகுலர் விசிட்டர். Blogspot காலத்திலிருந்தே நம் தளத்திற்கு ரெகுலராக வருகிறேன். ஆரம்பத்திலிருந்தே நான் நம் தளத்தில் நிறைய கமெண்ட்டுகளை அளித்திருக்கிறேன். உங்களுக்கு மெயில் அனுப்புவது இது தான் முதல் முறை.

என்னைப் பொறுத்தவரை “நான் தலைவரின் ரசிகன்” என்று யாராவது சொன்னால் அவர்களை உடனடியாக நான் விரும்ப ஆரம்பித்துவிடுவேன். நட்பு பாராட்டுவேன். அவர்கள் மீது எனக்கு ‘SOFT CORNER’ வந்துவிடும். (இது தான் நம்ம ரசிகர்களோட ஸ்பெஷாலிட்டி!). உங்களைப் பொறுத்தவரை, நீங்கள் செய்திகளை கையாளும் விதம் அதை எங்களிடம் பகிர்ந்துகொள்ளும் விதம் அருமை. அதுவும் தலைவரின் இக்கட்டான தருணங்களில் நம் ரசிகர்களை மனம் தளராது உற்சாகமாக வைத்திருந்ததில் உங்கள் பங்கு அபாரமானது. (எல்லாம் இறைவன் செயல்!).

நம் தளத்தை பார்க்கும்போதெல்லாம் எனக்கு உற்சாகம் பீரிட்டு கிளம்பும். நம் ரசிகர்கள் மற்றும் வாசகர்கள் அளிக்கும் கமெண்ட்டுகளை படிக்கும்போதெல்லாம் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தில் இருப்பதை போன்ற உணர்வு ஏற்படுகிறது. ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். நீங்களும் இதை ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். (நிச்சயமாக!)

சரி நான் விஷயத்துக்கு வருகிறேன். நேற்று மாலை (வியாழன்) கோவை கே.ஜி. திரையரங்கிற்கு மதராசப்பட்டினம் படம் பார்க்க சென்றிருந்தேன். படத்தின் நாயகி ஆமி ஜாக்சனும் இதர படக் குழுவினரும் படத்தின் ப்ரோமோஷனுக்காக கே.ஜி. திரையரங்கம் வந்திருந்தார்கள். நானும் என் நண்பனும் ஆமியை பார்ப்பதற்காகவே சென்றிருந்தோம். ஹி !! ஹி!! (அட நம்ம க்ரூப்!). தியேட்டரில் ஆமியை பார்த்தபோதும் எங்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. அவரை எப்படியும் சென்னை திரும்புகையில் விமான நிலையத்தில் சந்தித்துவிடவேண்டும், அட்லீஸ்ட் ஒரு போட்டோவாவது எடுத்துவிட வேண்டும் என்று இருவரும் முடிவு செய்து, கோவை விமான நிலையத்திற்கு சென்று விட்டோம்.  அங்கு ஆமிக்காக காத்திருந்தோம். 8.30 க்கு சென்னை செல்லும் விமானம் தயாராக இருந்தது. ஆனால் ஆமியை பார்க்கமுடியவில்லை. எங்கள் யோசனை backfire ஆகியது.

மயிலுக்காக காத்திருக்கும்போது மான் வந்ததுபோல ஒரு சம்பவம் அப்போது நடைபெற்றது. ஏர்போர்ட் நுழைவு வாயிலில் காத்திருந்தபோது  ஒரு இன்னோவா கார் வந்தது. ஒருவேளை ஆமியாக இருக்கப்போகிறது என்று காருக்குள் பார்த்தால், அட நம்ம கவியரசு வைரமுத்து. நான் தான் அவரை முதலில் பார்த்தேன்.

“மச்சான்… வைரமுத்து வந்திருக்கார்டா…” என்று கத்திக்கொண்டே நண்பனை நோக்கி ஓடினேன். நான் கத்தியது மற்றவர்கள் காதிலும் விழுந்துவிட்டதால், உடனே அனைவரும் காரை நோக்கி சென்றுவிட்டோம். வைரமுத்து காரை விட்டு இறங்கும்போது, அவருக்கு எதிரில் அருகே, முதல் ஆளாக நான் தான் நின்றுகொண்டிருந்தேன்.

அவரை பார்த்து நான் சொன்ன முதல் வார்த்தை “வணக்கம் சார்” என்பது தான். (வைரமுத்துவை பார்த்தா தமிழ தானா வருது!)

பதிலுக்கு அவர் “வணக்கம்” என்று கூற, எனக்கு உற்சாகம் பீறிட்டு கிளம்பியது.

உடனே நான், “சார் எப்படி இருக்கீங்க?” என்று கேட்டேன். பதிலுக்கு அவர், “நல்லாருக்கேன் பா” என்றார்.

அடுத்து நான் கேட்ட கேள்வி, “எந்திரன் பாடல்கள் எப்படி வந்திருக்கு சார்?” என்பது தான்.

அதற்க்கு அவர் அளித்த பதில், “பிரமாதமா வந்திருக்கு” என்பது தான். உடனே அவர சொன்னார், “31 ஆம் தேதி மலேசியாவில் ஆடியோ வெளியீடு!”

என்னால் என் கண்களை நம்பமுடியவில்லை. நடப்பதெல்லாம் கனவா நினைவா…. ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை.

“சார்… நிஜமாவே 31 ஆம் தேதியே ஆடியோ ரிலீஸ் ஆயிடுமா?”

“ஆமாம்பா… 31 ஆம் தேதியிலிருந்தே நீங்க பாடல்களை கேட்கலாம்” என்றார் கவியரசு. ஒரு நிமிடம் எனக்கு மூச்சே நின்றுவிட்டது. வைரமுத்து சாருக்கு இப்படின்னா… ஒரு வேளை நான் தலைவரை மட்டும் இப்படி பார்த்து பேசியிருந்தேன்னா… நான் மயக்கம் போட்டே விழுந்திருப்பேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள் இது சுந்தர்.

பிறகு அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினேன். நானும் என் நண்பனும் அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டோம். நேற்றைக்கு பூரா நான் வானத்துல மிதந்த மாதிரி  ஃபீல் பண்ணினேன் சுந்தர். இதை உடனடியாக உங்களிடம் பகிர்ந்துகொள்ள நினைத்தேன். மாலை தான் என் லேப்டாப் கிடைச்சது. இத்துடன் வைரமுத்து சாருடன் நாங்கள் எடுத்த புகைப்படத்தை இணைத்திருக்கிறேன்.

பிரதிபலன் எதிர்பார்க்காது நீங்கள் செய்யும் இந்த பணியை இப்படியே சீரும் சிறப்புமா தொடரவேண்டும் சுந்தர். உங்களால் நிறைய பேர் சந்தோஷமா இருக்கோம்.

வாழ்க தலைவர். வளர்க தமிழ் மக்கள்.

- Raakesh Roshan
roshan6464@gmail.com

————————————————————————-

Rakesh Roshan’s orginal mail:

Hi,
Sundar, i’m a die hard fan of thalaivar.I will catch all the bits and pieces of his news from all the possible resources.For the past 4-5 years i’m frequent visitor to your website……right from your blogspot days.I have given many comments in the past,but this is the first time i’m sending u a mail…..In my day to day life, if any one says they r a fan of thalaivar, i’ll start liking them  and will have some soft corner for them. But for u i have become a great fan of you…the way u interpret things about the various happenings of our thalaivar during the hard times where our thalaivar’s fans were in a confused frustrated way, is really mind blowing. I feel like i’m in a family when i see our website and the regular people who r posting the comments. i can say confidently that only a thalaivar fan will feel this way…i think u also will agree on this….
Ok sundar i’ll come to the subject. Yesterday evening i went to KG theatre in coimbatore to watch madraspattinam film where amy jackson and other film crew came for the promotion. I and my friend went there mainly to see Amy Jackson(he he he). After seeing her in the theatre also we didn’t get satisfied, so we came out of the theatre and went straightaway to the airport with the idea of taking a snap along with her.There was 8.30 flight to chennai. We waited for her but our idea backfired.
I was sitting near the entrance waiting for their car, by 8.25 pm i saw an innova coming near the entrance and i can’t beleve my eyes what i’m seeing,i saw vairamuthu inside…i was the only one who saw him and i told my friend ‘machan vairamuthu da’ and i ran to the car.After that people around the entrance came after seeing us. The moment he opened the car i was the one who was standing close to him.
After seeing him the first thing
i said was “vanakkam sir”(avara patha vudane thamil thaana varuthu)…

he also told me “vanakkam vanakkam”.

then i asked “sir eppidi irukeenga”..

he told “nalla irukken pa”

then immediately i asked him “sir ENDHIRAN songs eppidi vanthirukku”…..

he told me “pramathama vanthirukku”….

then he itself told “31 aam thethi malaysiavula audio release”….

i can’t belieave my ears, then i asked him without belief..“sir nejamaavae 31st release ayiruma”

he told “31aam thethiyil irunthu neenga paata kaekalaam”……i can’t able to breathe for a minute(vairamuthu vukke ippidinna thalaivara mattum naan pathirunthaenna naan mayangiyae vilunthiruppaen)…this was a great experience for me in my life sundar….

then i got the autograph form him and my friend and i took photos with him…..naan nenachu kooda paakala ippidi oru vaaippu kidaikkumnu….nethu poora naan vanathula mithanthutu irunthaen….i wanted to share this with u sundar, so only i’m sending my experience….morning eh ungalukku mail pannanumnu ninaichen….but ippo thaan ennoda laptop kidaichathu…..i had also attached the photo…
Unga works ah ippidiye serum sirappuma continue pannunga….unga naala neraiya per santhosama irukkanga….i don’t have words to appreciate u sundar for ur remarkable work without looking for any results….i will always be in suport for u sundar…..“Vaazhga Thalaivar, Valarga Thamil Makkal”

R O S H AN

[END]

34 Responses to ““31ம் தேதியே பாடல்களை கேட்கலாம்” - எதிர்பாராத சந்திப்பில் வைரமுத்து அளித்த இன்ப அதிர்ச்சி! - Guest Article”

  1. harisivaji harisivaji says:

    ///என்னைப் பொறுத்தவரை “நான் தலைவரின் ரசிகன்” என்று யாராவது சொன்னால் அவர்களை உடனடியாக நான் விரும்ப ஆரம்பித்துவிடுவேன். நட்பு பாராட்டுவேன். அவர்கள் மீது எனக்கு ‘SOFT CORNER’ வந்துவிடும். (இது தான் நம்ம ரசிகர்களோட ஸ்பெஷாலிட்டி!).///

    இதான் ரஜினி ரசிகனின் இலக்கணம்

    //நாம் அனைவரும் ஒரே குடும்பத்தில் இருப்பதை போன்ற உணர்வு ஏற்படுகிறது. ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.//

    நிச்சயமாக …எதோ பூர்வ ஜென்ம பந்த சொந்ததிடம் பழகும் உணர்வு
    இப்பொழுது எல்லாம் ரஜினி என்ற வார்த்தை மனிதன் என்றிலாமல் மதம் போன்ற ஒரு கூட்டமைப்பை உணர்த்துவது போல உள்ளது
    அந்த ஒரு பெயர் எதிரியை கூட நண்பனாக மாற்றிவிடும் சக்தி கொண்டது

    நான் என்றுமே மனிதனை கடவுளாக கொண்டாடுவதை விருமபமாட்டேன் ஆனால் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து …ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகளை துறந்து …படித்தவன் படிக்காதவன் ….என்பதை கடந்து
    ஒரே பெயர்

    அந்த ஒரு பெயர் ஒரு பந்தத்தை உருவாக்குவதை பார்க்கும் பொழுது அது ஒன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது

    ரோஷன் அதும் நீங்க எழுதின வரிகள் நேரில் நாங்களும் பார்த்து அனுபவித்த உணர்வை கொடுக்கிறது.

    மிக்க நன்றி
    ஹரி.சிவாஜி

  2. shakthi shakthi says:

    Lucky Roshan…. Temperature is rising, When will Sun (ROBO) rise ? Till 31st it is like darkness falls… on 31st it is going to be Shining in the Sky !!

  3. ROBOsathya ROBOsathya says:

    sooper roshan… pinniteenga….

    thanx a lot sundar sir fr giving us news in jet speed.

    epdiyo confirm aaiduchu..

    ini aandavan aatam thaan

  4. DARWIN DARWIN says:

    this is really true roshan i also feel the same as like you…thalaivar is one of the religion to us.

  5. A.Kishore A.Kishore says:

    Hello sir,

    I read about the live telecast of " Endhiran" audio release on Malaysian TV Channel and also about the meeting of Mr.Roshan and Mr.Vairamuthu. I am very

    thankful to Simple Sundar and others who give us regular updates on Endhiran

    I hope we also get a chance to listen to " Endhiran" songs in this website too

    Waiting for more interesting updates

    Kishore

  6. mrs.krishnan mrs.krishnan says:

    //நாம் அனைவரும்

    ஒரே குடும்பத்தில்

    இருப்பதை போன்ற

    உணர்வு ஏற்படுகிறது.

    ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.//

    UNMAI, UNMAI, UNMAI

  7. R.Gopi R.Gopi says:

    Great feeling for a GREAT FAN……..

    Well done Rakesh Roshan ……….. (அட உங்க பேர் கொண்ட ஹிந்தி நடிகர் ராகேஷ் ரோஷன் கூட தலைவரோட நல்ல நண்பர்கள்ல ஒருவர் & ஜீத் ஹமாரி (தமிழில் வெளிவந்த “தாய் வீடு படத்தின் ஹிந்தி பதிப்பு) பகவான் தாதா, மகாகுரு போன்ற ஹிந்தி படங்களில் தலைவர் கூட நடித்துள்ளார்!!!)

  8. k s amarnath k s amarnath says:

    roshan u raised my hearbeat

  9. R O S H A N R O S H A N says:

    sundar thank you….

  10. jaishankar jaishankar says:

    சத்தியமான வார்த்தைகள் ரோஷன் ர…தலைவரின் ரசிகர்களின் உறவு முறை … …இந்த உணர்வெல்லாம் அனுபவிச்சத்ஹன் புரியம் …வாழ்க தலைவர் ! வாழ்க இந்தியா !

  11. Rajini Jagan Rajini Jagan says:

    Tnx for this news for Mr.Roshan & Mr.Sundarji. also we r waitng for "Thalaivar Spl songs" to hear.

    ———————————————-
    Boss, no website is authorised to play endhiran songs other than thinkmusic.

    We shall hear in our home theatre or pc and can discuss here.

    - Sundar

  12. murugan murugan says:

    ரோஷன் அவர்களே நீங்கள் பெற்ற இன்பத்தை எல்லோரும் பருக வழங்கியதற்கு மிக்க நன்றி - தலைவரின் கோடானு கோடி ரசிகர்களைப்போல நானும் தலைவரின் பாடல் வெளியீட்டு விழாவிற்காக காத்திருக்கிறேன் - நன்றி சுந்தர் - வளர்க உங்கள் தொண்டு

  13. DEEN (PROUDLY RAJINI DEEN (PROUDLY RAJINI says:

    ஜெட் சுந்தர் சார்,..!
    இந்த article திரு.kolipaiyan அவர்கள் blog -ல் படித்தேன்..இதை நமது கோடான கோடி (ரசிக கண்மணிகள்) ரஜினி குடும்ப உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்க ஆசை..தலைவரின் எளிமைக்கு இந்த கட்டுரை ஒரு உதாரணம்..!நிச்சயமாக நமது குடும்பம் இதை படித்து சந்தோஷ படும்.! யாம் பெற்ற இன்பம் பெருக நமது ரசிக நண்பர்கள்..!!

    சூப்பர் ஸ்டார் தி கிரேட் ….
    படித்ததில் பிடித்தது, ரஜினி ..
    எஸ்.பி.முத்துராமன் அவர்கள், கனிமுத்துப்பாப்பா படத்தில் டைரக்டர் ஆனார். பாலச்சந்தரின் கண்டுபிடிப்பான ரஜினி என்கிற நடிகனை முழுமையாக பயன்படுத்தி வியாபார ரீதியில் ரஜினி படங்களை வெற்றியடையவைத்த இயக்குனர் என்றால் இவர்தான்.அவர் ரஜினி பற்றி சொன்ன ஒரு தகவல் உங்களுடன் …

    அந்த காலத்துல சிகரட்டை தூக்கிப் போட்டு வாயில் புடிகிறது, தலைமுடியை கலைசிக்கிட்டு ஸ்டைல் காட்டறதுன்னு ரஜினி வில்லனவே பெர்பார்ம் பண்ணிக்கிட்டு இருந்தப்ப சிவகுமார் சார் தான் பெரிய ஹீரோ. அவர் நடிச்ச படமெல்லாம் அமோகமா போயிகிட்டிருந்தது. அப்போதான் எனக்கு ஒரு வினோதமான யோசனை வந்தது.

    ஹீரோவா நடிக்கிற சிவகுமாரை வில்லனாவும் வில்லனா நடிச்சிக்கிட்டு இருக்கிற ரஜினியை ஹீரோவாவும் போட்ட எப்படி இருக்குனு -கிறது தான் அந்த யோசனை.

    இது ஒரு அக்னி பரிட்சைதான் என்று தெரிந்தாலும் மனசுல அந்த எண்ணம் ஆணியடிச்ச மாதிரி நிலைத்து போச்சு. இந்த ஐடியாவுக்கு தோதா எழுத்தாளர் மகரிஷி எழுதிய புவனா ஒரு கேள்விக்குறி என்ற நாவல் நம்பிக்கை கொடுக்கவும், அதே தலைப்பில் அந்தக் கதையைப் படமா எடுத்தோம்.

    இதே படத்துல ஒரு குருப் டான்ஸ்… இதை ஷூட் பண்ண சித்தூர் பக்கத்துல ஒரு குக்கிராமத்துக்கு போயிருந்தோம். ரஜினி நடிக்கிற சீனை எடுக்கிறப்பத்தான் பாட்டை ப்ளே-பேக் செய்ய மெசின் ரிப்பேராகின விஷயம் தெரிஞ்சது. அதை சரி பண்ணனுனா மறுபடி மெட்ராஸ் தான் போகணும். அதனால் ரஜினிகிடே 'மெட்ராஸ் போயி ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அடுத்த நாள் வாங்கனு சொன்னேன்.

    "அதுவரைக்கும் இங்கே நீங்க என்ன செய்ய போறீங்க?"- னு திருப்பி கேட்டார். "நாங்க இங்கேயே எதையாவது சாப்பிட்டுகிட்டு எங்காவாவது படுத்துகிறோம்னு" சொன்னேன். ஆனா, ரஜினி அதுக்கு சம்மதிக்கவில்லை. எங்களோடவே அந்த கிராமத்துல தங்கினதோட, அங்கே இருந்த பெட்டி கடையில் பட்ஜியும் பிஸ்கட்டும் வாங்கிக் சாப்பிட்டுட்டு ஒரு குடிசையிலேயே படுத்துத் தூங்கிட்டாரு.

    மறுநாள் எந்த பந்தாவும் பண்ணாம கிராமத்து இருந்த குளத்துல குளிச்சிட்டு ஸ்பாட்டுக்கு வந்துட்டாரு. இதை இப்போ நினைத்தாலும் எனக்கு ஆச்சரியமாத்தான் இருக்கு என்று ரஜினி பற்றி டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் சொன்னது.

    ரஜினின்னா ஸ்பீடா ஸ்டைலா மட்டுமில்ல சூப்பரா நடிக்கவும் முடியும்னு நிருபிச்ச படம் "புவனா ஒரு கேள்விக்குறி". ஆரம்பத்துல, "என்ன சார் டயலாக் எல்லாம் ரொம்ப பெருசா இருக்குனு" ரஜினி பயந்தாரு…. ஆனா, நான் கொடுத்த என்கரேஜ்மென்ட்டுல சும்மா பிச்சி எடுத்துடாரு.

    "ராஜா என்பார் மந்திரி என்பார்…" பாட்டுல ரஜினி காமித்த ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பெர்பார்மன்ஸ் அவருக்குள்ளே இருக்கிற அற்புதமான நடிகனை வெளிக்கொண்டு வந்ததைப் பார்த்துட்டு நான் மட்டுமல்ல … தமிழ் திரையுலகமே அசந்து போச்சு!

    ஆரம்பம் முதலே தனக்கென ஒரு கொள்கையுடன் + லட்சியத்துடன் வாழ்ந்த நல்ல மனிதர் நம்ப சூப்பர் ஸ்டார் இன்றைய தலைமுறைக்கு ஒரு எடுத்துகாட்டு. இப்படியும் சில நல்ல உள்ளங்கள்!

    சூப்பர் ஸ்டார் தி கிரேட்.
    நன்றி….திரு KOLIPAIYAN BLOG நண்பருக்கும்,
    இதை வெளியிட்ட அண்ணன் சுந்தர்ஜி அவர்களுக்கும்…

    ——————————————
    Nice article. Seems inspired from SPM's biography.
    - Sundar

  14. DEEN (PROUDLY RAJINI DEEN (PROUDLY RAJINI says:

    இதுவும் தலைவர் பற்றிய சுவாரஸ்யமான செய்தி..!

    நமது குடும்ப சந்தோசத்துக்காக..!

    ரஜினி - நடிக்க முடியாமல் போன படம்

    படித்ததில் பிடித்தது, ரஜினி

    ராகவேந்திரர் வாழ்க்கையில் சுல்த்தான்பாய் என்கிற பாத்திரம் வித்தியாசமானது. ராகவேந்திரரை ஏமாற்றுவதற்காக அவர் ஒருமுறை மாமிச துண்டுகளை ஒரு பாத்திரத்தில் வைத்துவிட்டார். ராகவேந்திரர் அதனை தனது அசைக்கமுடியாத பக்தியால் புஷ்பமாக மாற்றி விடுவார்.

    ராகவேந்திரரிடம் அப்போதே அவர் சிஷ்சியனாகிவிடுவார். கடைசியில் தான் மகா சமாதியாகும் இடத்தையும் சுல்தானே அமைத்துத் தரும்படி ராகவேந்திரர் கேட்டார். அதை அமைத்து முடித்து, சுவாமிகள் சமாதி ஆவதற்கு முன்பு சுல்தான், ராகவேந்திரர் காலில் விழுந்து கதறி அழுது,

    "ஐயா, நீங்கள் போனபின்பு இது இந்துக்களின் புனித தளமாகிவிடுமே இஸ்லாமியரான என்னை அனுமதிக்காவிட்டால் நான் எப்படி இங்கே வந்து உங்களைத் தரிசிப்பேன்?"

    என்று உருகி கேட்டார். உடனே ராகவேந்திரர்,

    "என் சமாதிக்கு மேல் ஒரு மாடம் அமைத்துவிடு. நீ எங்கிருந்து எப்போது பார்த்தாலும் நான் உனக்கு காட்சி தருவேன்"

    என்று சொல்லி மறைந்து விடுவார்.

    இந்த நிகல்வைகொண்டு, ஒரு படம் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தோணியது. விறுவிறுவென படமாக்கும் முயற்சிகள் ஆரமிக்கப்பட்டன.

    அதில் ராகவேந்திரராக அவர் மனதில் வைத்திருந்தது சிவாஜி சாரை தான். சுல்த்தான் பாய் வேடத்தில் ரஜினி சார் நடிப்பதாக முடிவெடுத்துவிட்டார். இதனை அறிவிப்பாக வெளியிட இருந்த நேரத்தில், ரஜினியின் நண்பர் அதனை சில நாட்கள் கலைத்து வெளியிடலாம் என்றார்.

    ஆனால், அது கடைசி வரை வெளியிடப்படவில்லை. சில நாட்களுக்கு பிறகு, புதிய காட்சிகளுடன் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் தயாரிக்கப் பட்ட கதையில் ரஜினியே ராகவேந்திரர் வேடத்தில் நடித்தார் - என்று பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்வை நம்முடன் பகிர்ந்துகொண்டவர் ரஜினியை வைத்து ஹீரோவாக பைரவி படத்தில் அறிமுகம் செய்த இயக்குனர் திரு.கலைஞானம் அவர்கள்.

    டிஸ்கி:

    இந்த சுத்தானை மனதில் கொண்டு தான் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா இயக்கிய அனிமேசன் படத்திற்கு "சுல்த்தான் தி வாரியார்" என்று பெயர் வைத்தாரோ?

    நன்றி…திரு.kolipaiyan அவர்கள்..

    நன்றி.. அண்ணன் சூப்பர் சுந்தர் அவர்கள்..

  15. mrs.krishnan mrs.krishnan says:

    @Deen. Arumayana thagaval. 'Bhuvana oru kelvikuri' naan innum parthadilla. Aana andha song 'Raaja enbar…' t.v.la parthuruken. 1 of My fav.songs.

    Andha kaalakattathula irundha adhe simplicity ippovum thalaivar kitta maarama irukaradu evlo peria vishayam.

    Unga comments padikumbodhe neenga eapadi oru urchagathil irukeenganu theriudu. Thanks.

  16. DEEN (PROUDLY RAJINI DEEN (PROUDLY RAJINI says:

    கடைசியா இதையும் publish பண்ணிடுங்க சுந்தர்ஜி..!இதுக்கு மேல நான் அனுப்பினால் நீங்களே என்னை அடிக்க லண்டன் வந்துடுவீங்க..! தலைவர் நியூஸ் படிச்சு சந்தோசமா இருந்தது..படித்து முடித்த உடனே உங்க எல்லோரோட ஞாபகம் வந்தது..நீங்களும் சந்தோசபடனும்னு நினைச்சு தான் நிறைய அனுப்பிட்டேன்.!! இது கண்டிப்பா உங்கள் எல்லோருக்கும் பயனுள்ள செய்தியா இருக்கும்…ஏனென்றால் இது தலைவர் உச்சரிக்கும் மந்திரம்…நீங்களும் follow பண்ணுங்க..!

    ரஜினி மந்திரம்

    படித்ததில் பிடித்தது, ரஜினி
    பிரபல நடிகர்கள் பலரும் தெய்வ நம்பிக்கையுடன் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் இருவர். ஓன்று நடிகர் அர்ஜுன். இவர் ஆஞ்சநேயர் மீது மிகுந்த ஈடு பாடு உடையவர். அடுத்து நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினி சார். இவர் ராகவேந்திரர் பக்தர்.

    கீழே வரம் மந்திரத்தை மெல்ல படியுங்கள். அந்த அர்த்தம் ஏதேனும் புரிகிறாதா என்று பாருங்கள்.

    ஓம் ஸஹனா வவது ஸஹநெள புனக்நு

    ஸஹவீர்யம் கரவாவஹை

    தேஜஸ்வினா வதீதவஸ்துமா

    வித்விஷாவஹை

    ஓம் சாந்தி… சாந்தி… சாந்தி…

    இது தான் நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினி தினமும் பூஜையறையில் தவறாமல் உச்சரிக்கும் மந்திரம்.

    இதன் அர்த்தம் என்னானா…

    பிரம்மம் நம்மை பாதுகாக்கட்டும். பிரம்மம் நம்மிடம் கருணை செலுத்தட்டும். நாம் இணைந்து செயல்படுவோம். நமக்கு ஞானம் பிறக்கட்டும். நாம் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துவோம்.
    நீங்களும் இந்த மந்திரத்தை செல்லி பிராத்தனை செய்யுங்கள். அந்த பரம்பொருளின் அருள் பூரணமா கிடைக்கட்டும். நாமும் இந்த மந்திரத்தை நம்பிகையுடன் சொல்லி வழிபட்டு வளம்பெறுவோம்

    நன்றி திரு.kolipaiyan அவர்கள்..
    நன்றி நண்பர் சுந்தர்ஜி அவர்கள்..
    பின் குறிப்பு ; சுந்தர்ஜிக்கு..
    கடைசி வரியில் ''நாமும் இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் சொல்லி வழிபட்டு ரஜினி சாருக்கு போட்டியாக வளம்பெறுவோம் என இருந்தது.நான் அந்த வார்த்தைகளை நீக்கி விட்டேன்..திரு.kolipaiyan தவறாக எழுதவில்லை.இருந்தாலும் நெருடலாக இருந்ததால் நீக்கி விட்டேன்.நன்றி சுந்தர்ஜி.

    ——————————————————————
    Grt reference. Good article.

    kolipaiyan சொன்னதில் தவறொன்றுமில்லையே… வளம் என்றால் அது செல்வத்தை மட்டும் குறிப்பதல்ல. அவர் கூறிய வளம் - மனவளம், ஆரோக்கியம் etc. etc. எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் அந்த பாங்கு. So, தவறொன்றுமில்லையே….

    (அது சரி கடந்த சில வாரங்களாக, என் தினசரி பிரார்த்தனை என்ன தெரியுமா? விரைவில் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.)

    - சுந்தர்

  17. tveraajesh tveraajesh says:

    என்திரன் இசை மற்றும் பாடல்கள் ஹிமாலய வெற்றி பெற ஒரு முத்திரை குத்தப்பட்ட ரசிகனின் வாழ்த்துக்கள்.

  18. DEEN (PROUDLY RAJINI DEEN (PROUDLY RAJINI says:

    THANKS FOR YOUR REPLY COMMENT SUNDARJI..!
    உங்களிடம் கமெண்ட் வாங்கியதில் ரொம்ப சந்தோசம்.!

    ————————————
    Cool buddy.
    - Sundar

  19. DEEN (PROUDLY RAJINI DEEN (PROUDLY RAJINI says:

    Thanx for ur comment mrs.krishnan,,.

    என்னங்க MRS . கிருஷ்ணன் இப்டி சொல்லிடிங்க?! புவனா ஒரு கேள்விக்குறி இன்னும் பார்க்கலையா?! உங்க வாழ்நாள்ல பாதிய வேஸ்ட் பண்ணிடிங்களே!! தலைவரோட நடிப்புல அது ஒரு மைல்கல்.!! தலைவரோட ஆரம்ப கால படங்கள் எல்லாம் சான்சே இல்ல..அந்த மாதிரி படங்கள்ல தலைவர் நடிக்க மாட்டாரா என நான் இன்னும் ஏங்குறேன்.அந்த கால கட்ட படங்கள்,முள்ளும் மலரும்,புவனா ஒரு கேள்விகுறி,அவர்கள்,மூன்று முடிச்சு,காயத்ரி,பைரவி,அவள் அப்படித்தான்,ஆறிலிருந்து அறுபது வரை,நெற்றிக்கண்,தில்லுமுல்லு,எங்கேயோ கேட்ட குரல்,மூன்று முகம்,இதில எதாவது ஒரு படம் மிஸ் பண்ணி இருந்தாலும் எப்டியாவது பாத்துடுங்க..! தலைவருக்கும் இந்த மாதிரி படத்தில நடிக்க தான் ஆசை..ஆனால் நமக்காக தான் மசாலா படத்துக்கு மாறினதா தலைவரே சொல்லி இருக்கார்! இந்த படங்களில் நடித்திருக்க மாட்டார்.காரேக்டராவே வாழ்ந்து இருப்பார்.!

    SO MRS .கிருஷ்ணன்..! DVD வாங்க கிளம்பிடிங்களா!!!

  20. DEEN (PROUDLY RAJINI DEEN (PROUDLY RAJINI says:

    சுந்தர்ஜி..!

    (Grt reference. Good article )..

    இந்த WORDS வஷிஸ்டர் வாயால வாழ்த்து வாங்கின மாதிரி இருக்கு..!

    THNX A LOT FOR ALL UR COMMENTS N SUPPORT SUNDARJI..

    HAV A NICEDAY..

  21. DEEN (PROUDLY RAJINI DEEN (PROUDLY RAJINI says:

    உங்கள் தினசரி பிரார்தனை என்ன சுந்தர்ஜி?

    விரைவில் எதிர் பார்க்கிறேன் BOSS …

  22. R.Gopi R.Gopi says:

    //(அது சரி கடந்த சில வாரங்களாக, என் தினசரி பிரார்த்தனை என்ன தெரியுமா? விரைவில் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.)

    - சுந்தர்//

    ஓம் எந்திரா நமஹா……

    ஓம் எந்திரனே நமஹா……..

    எந்திர தந்திராய நமஹா……….

    எந்திரன் ஆடியோ சூப்பர் ஹிட்டாய நமஹா….

    எந்திரன் சீக்கிரம் ரிலீஸாய நமஹா…..

    எந்திரன் கிரேட்டஸ்ட் சக்ஸஸாய நமஹா…..

    சுந்தர் ஜி…..இந்த மாதிரி எல்லாம் இல்லேன்னு எனக்கு தெரியும்….. மிஸஸ்.கிருஷ்ணன், வசி, தீன், ஜெய்சங்கர், ஜகன் எல்லாரும் என் மேல கோபப்பட வேண்டாம்…..

    சுந்தர் ஜி சீக்கிரம் சொல்வார்…. உங்களுடன் சேர்ந்து நானும் சுந்தரோட பதிலுக்காக வெயிட் பண்றேன்…

  23. Maniram Maniram says:

    Hi to all,

    Some body is saying Enthiran film will be released on Sep 03rd. Is it true?

  24. micson micson says:

    ஆகஸ்ட் 31 க்காக காத்துகொண்டிருக்கோம் . நாட்கள் நகரவே மாட்டங்குது !

  25. mrs.krishnan mrs.krishnan says:

    //என்னங்க MRS . கிருஷ்ணன்

    இப்டி சொல்லிடிங்க?!

    புவனா ஒரு கேள்விக்குறி இன்னும்

    பார்க்கலையா ?! உங்க வாழ்நாள்ல

    பாதிய வேஸ்ட் பண்ணிடிங்களே!!

    தலைவரோட நடிப்புல

    அது ஒரு மைல்கல்.!! தலைவரோட

    ஆரம்ப கால படங்கள் எல்லாம்

    சான்சே இல்ல..அந்த

    மாதிரி படங்கள்ல தலைவர் நடிக்க

    மாட்டாரா என நான் இன்னும்

    ஏங்குறேன்.அந்த கால கட்ட

    படங்கள்,முள்ளும்

    மலரும்,புவனா ஒரு கேள்விகுறி,அவர்கள்,மூன்று முடிச்சு,காயத்ரி,பைரவி,அவள்

    அப்படித்தான்,ஆறிலிருந்து அறுபது வரை,நெற்றிக்கண்,தில்லுமுல்லு,எங்கேயோ கேட்ட

    குரல்,மூன்று முகம்,இதில

    எதாவது ஒரு படம் மிஸ்

    பண்ணி இருந்தாலும்

    எப்டியாவது பாத்துடுங்க..!//

    @deen. Neenga solradum saridan. Inda listla innum 'buvana oru kelvikuri', 'bairavi', 'gayatri' moonum parthadillai. Meedhi ellam parthachu 'moonru mugam', 'thillu mullu' rendum evlo dhadavai pathurupennu eanake kanaku theriadu. Eappo parthalum fresha irukum.

    Neenga sonna madiriye

    DVD vaangidaren. Eanaku vivaram therinju nan partha mudhal thalaivar padam 'thalapadhi'. Adhuku aparam ellame parthuruken. Pazhaya padangalum mudinja varai pathuten. Meedhi ulladhaum parthuduvom. Thank u very much.

  26. vasi.rajni vasi.rajni says:

    வணக்கம் சுந்தர்ஜி. சில நாட்களாக சற்று busy யாக இருந்ததால் என்னால் commets போடா இயலவில்லை. தயவு செய்து மன்னிக்கவும்.என்னிடம் sms அனுப்பி நலம் விசாரித்ததற்கு நன்றி.நண்பர் ராகேஷ் அவர்கள் குரிபித்த போல இந்த கணம் நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்பதை உணருகின்றேன்.நம் தளத்தில் mrs krishnan , deen போன்ற புதிய வாசகர்களின் commets கல் என்னையும் பரசவச படுத்தியுள்ளது. உங்களின் தனி நபர் உழைப்பு தான் இன்று உலகம் முழுவதிலிருந்தும் மகத்தான வரவேற்ப்பு நமது தளதிற்கு கிடைத்துள்ளது.நிச்சயம் எங்கள் அனைவரின் பாரடிர்க்கும் நிங்கள் தகுதியுடையவர். எங்களுடைய அதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு.

    சுந்தர்ஜி எந்திரன் இசை வெளியிடு மலேசியாவில் நடபதர்க்கு நன் ஒன்றை மற்றும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்; ரஜினியை போன்ற மனிதரின் காலடி எங்கள் மண்ணில் பட நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். மலேசியாவின் எதிர்க்கட்சி தலைவர் " நான் மலேசியாவின் ஊழலை வேரறுக்க வந்த மலேசிய sivaji the பாஸ்," ஒட்டு கேட்பார். அந்த அளவிற்கு நமது தலைவரின் புகழ் மலேசிய மண்ணில் வேருன்றி நிற்கிறது. இந்த விழாவை எங்கள் நாட்டில் நடபதர்க்கு நாங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.

    rajini will rule tamil nadu

    ————————————————
    Vasi, happy to see u back. Hope you are alright now.
    - Sundar

  27. R O S H A N R O S H A N says:

    @gopi : en perula ippidi oru history irukkunu ithvaraikkum ennaku theriyama pochae…ukkanthu yosipeengalo….thalaivaroda datas eh finger tips la vachirupeenga pola….just oru pera pathutu avaru yaaru avaru thalaivaroda entha entha padathula nadichurkaarunnu pesareengalae….romba santhosama irukkunga….

  28. balaji balaji says:

    Dear Sundarji,

    Thanks a lot for your full effort to bring the news asap…….

    Amazing comments from mr.deen, mrs.krishnan, mr.harisivaji..thanks to all rajinifans….Excellent articles…

    Regards,

    Balaji

    Dubai

  29. saravanan saravanan says:

    palan paarkamal seibavar sundar. arumayana karuthu. sila kastamana tharunathuleyum rasikargal santhosamai irupathu sundaraal fantastic. nalla unmayana unarvu poornamana karuthukkal Roshan. vazhga sundar. valarga onlysuperstar site.

  30. dr suneel dr suneel says:

    roshan- thanks a lot for sharing ur excitement with us in a vivid and lovely manner, yes even though most of us havent seen eachother there is an invisible bond bcoz of the one noble soul who is common to all.

    sundar ji thanks for publishing this news and the msg update which keeps me informed on the updates even if am out of station, adhuvum andha still update ku apuram enaku ooruku vandhu system on panra varaikum orae paraparapu

  31. dr suneel dr suneel says:

    deen

    wonderful sharing , we welcome all such measures:) buvana oru kelvi kuri pahi enakum mudhala theriadhu infact chinna vayasula adhisaya piravi la varra scene nu pirpaadu therinjikiten 1990 la lam vcr thaan popular, miguntha kashta pattu naan 8 vadu padikum podhu indha padatha pathen, enaku therinju naan padathunaal feel panni azudhadhu adhaan first..(adhuku munnadi neraya peroda padatha paka mudiama theater lendu kootit ponga nu azudhadhu neraiya thadava:)) wonderful movie..

  32. S.Dhamodharan S.Dhamodharan says:

    ரோஷன் அவர்களே நீங்கள் பெற்ற இன்பத்தை எல்லோரும் பருக வழங்கியதற்கு மிக்க நன்றி – தலைவரின் கோடானு கோடி ரசிகர்களைப்போல நானும் தலைவரின் பாடல் வெளியீட்டு விழாவிற்காக காத்திருக்கிறேன் – நன்றி சுந்தர் – வளர்க உங்கள் தொண்டு

  33. napoleon napoleon says:

    ரோஷன் அவர்களுக்கு மிக்க நன்றி! எங்களுடன் உங்கள் பரவசத்தை பகிர்ந்து கொண்டமைக்கு. நானே உங்களுடன் இருந்தது போல் ஒரு வகை உணர்வு எனக்குள் ஏற்பட்டது. அமி ஜாக்சன் னை பார்க்க போய் ஒரு அற்புதமான கவிஞனை பார்த்துவிட்டீர்கள். அமி ஜாக்சன் னையும் விரைவில் நீங்கள் சந்திப்பதற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

  34. R O S H A N R O S H A N says:

    வாழ்த்துக்களுக்கு நன்றி நெப்போலியன்….அதுவும் கூடிய விரைவில் கைகூடும்….

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates