You Are Here: Home » Fans' Corner, Gallery » Audio Release Coverage 4: கிருஷ்ணகிரி ரசிகர்களின் எளிமையான ஆனால் நிறைவான எந்திரன் இசை வெளியீட்டு விழா!

கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மன்றனங்களின் சார்பாக, கிருஷ்ணகிரி ரசிகர்கள் ‘எந்திரன்’  இசை வெளியீட்டு விழாவை சீரும் சிறப்புமாக நடத்தியுள்ளார்கள்.

கிருஷ்ணகிரி, கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் உள்ள, A M MUSICALS  இல் இந்நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. முன்னதாக ரசிகர்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி, எந்திரன் சி.டி.யை வரவேற்றனர்.

இதன் மூலம் கிட்டத்தட்ட அந்த இடத்திலேயே அனைவரும்   ஒரிஜினல் சி.டி. ஒன்று வாங்கினர்.

இது போன்ற எளிமையான மன்ற நிகழ்ச்சிகள் தோற்றுவிக்கும் பயன்கள் எண்ணிலடங்கா… ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டுவது, ஒற்றுமையுணர்வு மேலோங்குவது, ஒரு பாசிட்டிவான அலையை ஏற்படுத்துவது என பல…


விழாவிற்கு மாவட்ட தலைமை ரஜினிகாந்த் மன்றம் பொறுப்பாளர் கே.வி.எஸ். ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார். ஓசூர் நகரச் செயலாளர் எல்.பாண்டியன் வரவேற்புரையாற்றினார். ஓசூர் நகரத் தலைவர் வெங்கடேஷ், பொருளாளர் சத்யா, ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர் ரஜினிசங்கர், தளி ஒன்றியச் செயலாளர் ரவிகாந்த், தேன்கனிக்கோட்டை நகரத் தலைவர் எல்லப்பன், கிருஷ்ணகிரி ஜெயராஜ், ஒன்றிய தாலிவர் காளியப்பன், யோவராஜ், முனிராசு, கண்ணன், காவேரிப்பட்டினம் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் சின்ன்பையன், சண்முகம், கௌரன், இளங்கோ, அண்ணாதுரை, தெய்வம், தெய்வம், முருகன், ஞானசேகரன், பர்கூர், நகர பொறுப்பாளர்கள் ரமேஷ், முனீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவிற்கு சூளகிரி முருகேசன், கெலமங்கலம் சாதிக்பாஷா, இராயக்கோட்டை சீனிவாசன், ரஜினிகுமார், பர்கூர் ராஜேஷ், செல்வம், வினோத், காவேரிப்பட்டினம் பாஸ்கரன், முனுசாமி, விஜயகுமார், அமீர்ஜான், பி.எஸ்.ரமணன், கார்த்தி, ஆதி, தினகரன், உட்பட கிருஷ்ணகிரி நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

முடிவில் மாவட்ட நிர்வாகி பாபா மாதையன் நன்றியுரையாற்றினார்கள்.

அடுத்து: மதுரை ரசிகர்களின் எந்திரன் இசை வெளியீட்டு  விழா கொண்டாட்டங்கள்!

Wath out this space…
——————————————————————-
Audio release coverage 3
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=7757
——————————————————————-

Krishnagiri Fans’  ‘Enthiran’ audio release celebrations - Full Gallery

[END]

10 Responses to “Audio Release Coverage 4: கிருஷ்ணகிரி ரசிகர்களின் எளிமையான ஆனால் நிறைவான எந்திரன் இசை வெளியீட்டு விழா!”

 1. vasi.rajni vasi.rajni says:

  சுந்தர்ஜி அருமையன பதிவு இதனை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. தலைவரின் ரசிகர் சந்திப்பில் முக்கிய இடம் பிடித்து கிருஷ்ணகிரி மாவட்டம் தான். கிருஷ்ணகிரி என்றவுடன் பலரது நினைவுக்கு வருவதும் ரசிகர் சந்திப்பு தான்.

  நமது ரசிகர்களின் கொண்டாடங்கள் சிறப்பாக உள்ளன. இது போன்ற நிகழ்சிகள் மன்ற பிரமுகர்களிடையே நல்லதொரு இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தும். ஆடியோ ரிலீசுக்கு இப்படியென்றால். மாநாட்டிற்கு எப்படி இருக்குமோ

  rajni will rule tamil nadu

 2. raja raja says:

  ரஜினியின் எந்திரன் (ரோபோ) படத்தின் ஆந்திர உரிமை இறுதியாக ரூ 33 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

  கர்நாடகத்தில் நேரடி தமிழ்ப் படமாகவே வெளியாகும் எந்திரனுக்கு ரூ 9.5 கோடி விற்பனை உரிமை விலையாகத் தரப்பட்டுள்ளது.

  இந்த இரு மாநிலங்களிலுமே, எந்திரன் விற்பனை புதிய சரித்திரம் படைத்துள்ளது.

  ஆந்திராவில் இந்தப் படம் ரூ 30 கோடிக்கு விற்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அது மோசடியாகத் தயாரிக்கப்பட்ட பத்திரம் மூலம் சிலர் செய்த சதி என சன் பிக்சர்ஸ் அறிவித்து சம்பந்தப்பட்டவர்களை சிறைக்கு அனுப்பியது.

  இப்போது சன் பிக்ஸர்ஸ், ரோபோ தெலுங்குப் பட உரிமையை ரூ 33 கோடிக்கு விற்பனை செய்துள்ளது.

  கர்நாடக மாநில உரிமைக்கு ரூ 10 கோடி வரை சன் பிக்சர்ஸ் கேட்டு வந்தது. இறுதியில் ரூ 9.5 கோடிக்கு முடிந்துள்ளது.

  கர்நாடக மாநிலத்தில் தமிழ்ப் படம் ஒன்று இந்த விலைக்கு விற்கப்படுவது இதுவே முதல்முறை. அந்த மாநிலத்தைப் பொறுத்தவரை ஒரிஜினல் கன்னடப் படத்தின் பட்ஜெட்டே இதில் மூன்றில் ஒரு பங்கு கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

  ரோபோ இந்திப் பட உரிமை விலை பற்றி இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. இதன் ஆடியோவை மட்டும் வீனஸ் ரெக்கார்ட்ஸ் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. இன்று சனிக்கிழமை இரவு மும்பையில் ரோபோ ஆடியோவை வெளியிடுகிறார் அமிதாப் பச்சன்.

 3. mrs.krishnan mrs.krishnan says:

  Kalakareenga sundar anna. Unga surveyla enga oor iruka?

  /ஆடியோ ரிலீசுக்கு இப்படியென்றால்.

  மாநாட்டிற்கு எப்படி இருக்குமோ

  rajni will rule tamil nadu/

  Oru mudivodadhan irukeenga pola.

 4. Satish Satish says:

  Hi Sundar
  Through your website, I request Thalaivar fans to go to THE HINDU website and register our appreciation about Enthiran movie. There are a few so called "intellects" who are dismissing this movie. I have registered my view in the site.
  http://www.thehindu.com/arts/cinema/article566585...

  —————————————-
  Dear Satish,

  Since it is Hindu, i am approving the comment. We need not to prove anybody. Our success will proved.
  Don't worry.

  - Sundar

 5. s.vasanthan s.vasanthan says:

  ஆடியோ ரிலீசுக்கு இப்படியென்றால். மாநாட்டிற்கு எப்படி இருக்குமோ ,உங்க வாய் முகுர்த்தம் பலிக்கொனும்

 6. Satish Satish says:

  Hi Sundar

  See the link below. Gizmodo is one of the popular websites among consumer electronic gadget lovers in US. Even though the comments are not what we can expect, it is interesting to note that this movie has started an awareness campaign so to speak, to tell the world that Bollywood and Kollywood are different. I'm surprised that we are not hearing about Sun tv and HBO tie up in the context of this movie. If only HBO is going to distribute this movie, we can be sure Enthiran will feature on TIME magazine and CNN (which are their sister publication and media respectively)

  http://gizmodo.com/5605394/those-indians-and-thei...

 7. murugan murugan says:

  அருமையான பதிவு - தொடரட்டும் உங்கள் பணி

 8. R.Gopi R.Gopi says:

  // mrs.krishnan says:

  August 14, 2010 at 6:20 pm

  Kalakareenga sundar anna. Unga surveyla enga oor iruka?

  /ஆடியோ ரிலீசுக்கு இப்படியென்றால்.

  மாநாட்டிற்கு எப்படி இருக்குமோ

  rajni will rule tamil nadu/

  Oru mudivodadhan irukeenga pola.//

  திருமதி கிருஷ்ணன்……

  யாதும் ஊரே… யாவரும் கேளிர்……

  ஆமாம், உங்க ஊர் எது?

 9. mrs.krishnan mrs.krishnan says:

  /யாதும் ஊரே… யாவரும்

  கேளிர்……

  ஆமாம், உங்க ஊர் எது?/

  @ R.Gopi. Enga oor Coimbatore dhaanungo.

 10. RAJA RAJA says:

  Sundar arumai arumai

  Hi SATHISH,

  There is no need to prove to anybody about thalaivar,some media will do to increase their website visitors……….

  WE ALL KNOW THAT SUPERSTAR is the KING OF TAMIL CINEMA & Now going to become the KING OF INDIAN CINEMA after ENTHIRAN

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates