You Are Here: Home » Rajini Lead » சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கையை படமாக எடுத்தால் அதில் நடிக்க யார் பொருத்தமாக இருப்பார்கள்?

ன்றைக்கு இந்தியாவையை புரட்டி போட்டுக்கொண்டிருக்கும் ரிலையன்ஸ் நிறுவனர்  திருபாய் அம்பானி, தொழில் சக்கரவர்த்தி டாட்டா, இன்போசிஸ் நாராயணமூர்த்தி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுக்கு சற்றும் சளைத்ததல்ல ‘சிவாஜி ராவ்’ என்ற சாதாரண ஒரு பஸ் கண்டக்டர் இன்று ‘ரஜினிகாந்த்’ என்ற இந்திய சினிமாவின் முதன்மை நடிகராக மாறியிருப்பது.

1973 இல் அவர் வாய்ப்பு தேடி சிவாஜி ராவ் சென்னை வந்த போது, யாருக்கும் அவரை தெரியாது. ஆனால் இன்று அவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

Who will fit the bill?

சிவாஜி ராவ் என்ற சாதாரண மனிதன் இன்று குளோபல் சூப்பர் ஸ்டார் ரஜினியாக உருவெடுத்திருப்பதர்க்கு பின்னால் அவர் சந்தித்த பல சவால்கள், குழிபறிப்புக்கள், ஏளனங்கள், புறக்கணிப்புக்கள், எதிர்ப்புக்கள் ஏராளம் ஏராளம். அத்துனையையும் தனது விடாமுயற்சியால் தன்னம்பிக்கையால் இறையருளால் ஜெயித்துவிட்டு இன்று சிகரத்தின் மீது அமர்ந்திருக்கிறார். யாரும் தொட முடியாத….! இவையெல்லாம் உங்களுக்கு தெரியாததல்ல.

சரி.. விஷயத்திற்கு வருகிறேன். எனக்குள் நீண்ட நாட்களாக இருக்கும் ஆவல் + சந்தேகம் இது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை படமாக எடுத்தால் (Bio-Pic) எப்படி இருக்கும்? அதில் நடிக்க பொருத்தமான நடிகர் யார்? (அதாவது பென் கின்ஸ்லி காந்தியாக நடித்து வெளியான ‘காந்தி’ திரைப்படத்தை போல…!)

சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரித்து அதை இந்தியா முழுதும் வெளியிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்… அதில் நடிக்க யார் பொருத்தமாக இருப்பார்கள்? (ரஜினி தான். அவரை தவிர யார்? என்று சொல்ல வேண்டாம். அது எனக்கும் தெரியும். ப்ளீஸ்).

நான் கேட்பது, ஒருவேளை சூப்பர் ஸ்டாரின் Bio-Pic திரைப்படமாக எடுக்கப்பட்டால் அதில் நடிக்க பொருத்தமான நடிகர் யார்? அவர் எந்த மொழி நடிகராக வேண்டுமானால் இருக்கலாம். பொருத்தமாக இருக்கவேண்டும். அவ்வளவு தான்.

உங்களது கருத்துக்களை நமக்கு தெரிவியுங்களேன். அதை அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன்.

If Rajini’s bio-pic is made in celluloid who will fit the bills as Rajini?

If Superstar Rajini’s life history is taken to celluloid as Bio-pic (like Gandhi) who will fit the bill for Rajini role? Which actor would be most appropriate to act as Sivaji Rao Gaekwad?

Please share your suggestions with us… here!

[END]

134 Responses to “சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கையை படமாக எடுத்தால் அதில் நடிக்க யார் பொருத்தமாக இருப்பார்கள்?”

  1. Sankaran Krishnamoor Sankaran Krishnamoor says:

    அன்புள்ள ரஜினி ரசிகர்களுக்கு,

    ரஜினியை தவிர வேறு யார் என்று முதலிலேயே கூறிவிட்டீர்கள். என்ன செய்வது?.

    புது முயற்சியாக இருக்க, நமது உலக நாயகன் கமல் ஹாசன் (கமல் கூட நம்ம ஆள்தான். அவரும் நம்ம சூப்பர் ஸ்டார்க்கு மிக நெருங்கிய நண்பர்தான்) நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

    நன்றி

    சங்கரன்,(ரஜினி ரசிகன்)

    ஜகார்த்தா, இந்தோனேசியா

  2. s.vasanthan s.vasanthan says:

    இன்னும் பத்து வருடம் களித்து தனுஸ் பொருத்தமாக இருக்கலாம் (தலைவர் குடும்பத்த விட்டு போக மனம் இல்லை )

  3. jayaram jayaram says:

    சூர்யா வுக்கு சூட் ஆகும் சுந்தர் ……………..

  4. jayaram jayaram says:

    அனாலும் ரஜினி க்கு நிகர் ரஜினிகாந்த் தன் சுந்தர்….

  5. Arun Arun says:

    sundar sir,

    rajini is special and close to my heart. It is impossible for me to think of any actors to simulate superstar image. whenever rajini talks about social message and all, it immediately reaches my heart because I trust SS to that level. So Whoever is going to do the character will only act and it might suit for all other personalities but not for SS. SS means true to the heart and no one can simulate even thru acting.

  6. Arun Arun says:

    one more thing Thalaivar naale athu acting illatha nalla manasu than first strike agum yenaku so no one can act and simulate that SS character

  7. Anand(korea) Anand(korea) says:

    இது ரொம்ப ரொம்ப கஷ்டமான கேள்வி . தலைவர தவிர வேற யார் செய்தாலும் நல்ல வாராது. ஒருத்தர் வேண்ண அதுக்கு கொஞ்சம் பொருந்தலாம் - AmirKhan .

    நம்ம ஊரு ஆளுங்களுக்கு செட் ஆவது.

    ஏன் என்றால் இங்க இருப்பவர்களுக்கு திமிரு ,வெயிதுஎரிச்சல், தலைகனம் , etc,etc … ரொம்ப அதிகம். இது கரெக்டுதானே மக்களே ….

  8. Sankar Sankar says:

    வேறு யாரையும் நினத்து பார்க்க முடியல. ஒரே சூப்பர் ஸ்டார்தான் ஒரே ரஜினி தான் வேறு யாரும் செய்ய முடியாது

  9. Gokul Gokul says:

    My choice is Mithun Chakarabharthy who acted in GURU(Maniratnam's Movie)

  10. Karthik Karthik says:

    என்னை பொறுத்தவரை இப்பொழுது லொள்ளு சபா வில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் ஜீவா இதுக்கு சரியான பொருத்தம்,ஏனென்றால் நடிகர் ஜீவாவும் ஒரு ரஜினி ரசிகர் அதனால் அவர் இந்த பாத்திரத்தை நல்ல ஈடுபட்டு செய்வர் மேலும் அவரை பார்த்தல் ரஜினியின் சாயல்கள் நறைய இருக்கின்றது.

  11. கிரி கிரி says:

    யாராலும் முடியாது!

  12. Srini Srini says:

    மோகன் லால் ??

  13. Deen_uk Deen_uk says:

    //// இன்றைக்கு இந்தியாவையை புரட்டி போட்டுக்கொண்டிருக்கும் ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானி, தொழில் சக்கரவர்த்தி டாட்டா, இன்போசிஸ் நாராயணமூர்த்தி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுக்கு சற்றும் சளைத்ததல்ல ‘சிவாஜி ராவ்’ என்ற சாதாரண ஒரு பஸ் கண்டக்டர் இன்று ‘ரஜினிகாந்த்’ என்ற இந்திய சினிமாவின் முதன்மை நடிகராக மாறியிருப்பது.////

    இது மிகவும் சத்யமான உண்மை சுந்தர்ஜி…நீங்கள் கேட்கும் கேள்வி உண்மையில் மிக மிக சிக்கலான கேள்வி!! நிறைய யோசிக்க வைத்து விட்டீர்கள்!! பென் கிங்க்ஸ்லி மொட்டை அடித்தவுடன் காந்தி உருவம் வந்து விட்டது..அவருக்கு பொருத்தமாக அமைந்தது..தலைவர் உருவத்தை மேக்அப் உதவியுடன் ஓரளவு கொண்டு வந்தாலும்..அவரை போல சுறுசுறுப்பான,ஸ்டைலான துருதுரு நடிப்பு ,வேறு ஒருவராலும் வெளிப்படுத்த முடியாது என்பதே எனது கருத்து. அவரை போல நடிப்பில் யாரும் இல்லை என்றாலும்,''நாளை '' என்ற படத்தில் நட்ராஜ் என்ற நடிகர் (அவர் ஒரு கேமரா மென் என்று நினைக்கிறேன் ) நடித்து இருப்பார்..அந்த படத்தில் அவரை பார்க்கும்போது நம்ம பழைய (பரட்டை கேரக்டர் ) ரஜினியின் கேசுவல் ஸ்டைல் தெரியும்….தலைவர் போலவே நடித்து இருப்பார்..அவர் தலைவர் படத்துக்கு முழுக்க சரி வருவார் என்று சொல்லவில்லை..ஆனால் ஓரளவு செட் ஆவார் என்று தோன்றுகிறது..இருந்தாலும்,(இவர் உள்பட ) வேறு யாரையும் தலைவர் கேரக்டருக்கு யோசித்து கூட பார்க்க முடியவில்லை..!

    DEEN என்னடா குழப்புறான்னு பார்கறீங்க இல்ல?!! நானும் தான் ரொம்ப குழம்பி போயிருக்கேன்! எல்லோரையும் தலையை பிச்சுக்க வச்சுட்டீங்க!

    மறுபடியும் நல்லா யோசிச்சு சொல்றேன்!!

  14. Raj Mohan Raj Mohan says:

    நிச்சயமாக தனுஷ் (இன்னும் இருபது வருடங்கள் கழித்து எடுத்தால்). அவருடைய உடல் மொழி நம் தலைவருக்கு சற்று பொருத்தமாகவே இருக்கும்… இன்றைய பல மகா நடிகர்களை விட!!!

  15. Deen_uk Deen_uk says:

    ரெண்டு நாளா நான் ஊர்ல இல்ல..அவுட் ஒப் லண்டன் போயிட்டதால நம்ம சைட் வர முடியல..ரெண்டு நாளும் சூப்பர் பதிவு போட்டுருக்கீங்க சுந்தர்ஜி….ரெண்டு நாளா என்ன அப்டேட் வந்து இருக்கும் நு யோசிச்சுட்டே வந்தேன்…சூப்பர் விருந்து கொடுத்து இருக்கீங்க.. இதுக்காக நீங்க எவ்வளவு கஷ்ட பட்டு இருப்பீங்க நு புரியுது.. உங்கள் கடின உழைப்புக்கு எனது நன்றிகளுடன் கூடிய வாழ்த்துக்கள்.

  16. srinivasan srinivasan says:

    it can be prakash raj..

  17. ainharan ainharan says:

    I think Ajith may be fit for the role, I said because he himself bit similar to Rajinikanth, he also didn't got the family support to enter this field, he earned this position by his own efforts, beside he is one of Rajinikant's well wisher, so calculating all aspects my choice is Ajith.

  18. Antony Antony says:

    மில்லியன் டாலர் Question

  19. P.Saravanan P.Saravanan says:

    வணக்கம் சுந்தர் அண்ணா,

    சில நாட்களுக்கு பிறகு உங்களுக்கு கமெண்ட் எழுதுகிறேன்.. நீங்கள் நலமா? உங்கள் வீட்டில் பெரியவர்கள் அனைவரும் நலமா உள்ளார்களா? எந்திரன் பல சாதனைகளை படைத்து கொண்டிருக்கும் சமையத்தில், இந்த கேள்வி ஏன்?? நானும் பல நடிகர்களை யோசித்தேன், என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை… என்னோட கணிப்பின் படி பார்த்தால், ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வூட் (clint eastwood) பொருத்தமாக இருப்பார்.. ஆனால் இப்போது அவருக்கு வயது 80.. இவர் தான் பொருத்தமாக இருப்பார்.. நசீருதீன் ஷாஹ் (Naseeruddin Shah) பாலிவுட் நடிகர், இவரை 20% சொல்லுவேன்.. பார்போம் தள வாசகர்கள் யாரை குறிபிடுகிறார்கள் என்று!!!

    சுந்தர் அண்ணா, உடம்பை நல்லபடியாக பார்த்து கொள்ளுங்கள்.. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.. நன்றி.. விடை பெறுகிறேன்.. தீபாவளி வாழ்த்துக்கள்…

  20. Mrs. Krishnan Mrs. Krishnan says:

    Anna,

    Ippadi oru kelviya kettutingale…!

    Puliku badhila poonaikalai poruthi parka mudiyalai.

    Oru velai oru 15 varusham kazhichu YATHRA vuku avanga thathavoda sayal (nadai, vegam, style) irukum vaipu irundhal muyarchikalam.

    Vera yarayum ennala yosikave mudiyalai. Sorry anna.

  21. Anonymous says:

    உண்மையாக சொன்னால் நம்ம தலைவர் முக அமைப்புடன் இருக்கும் நபர்களை கூட கண்டு பிடித்து நடிக்க வைத்து விடலாம்…..

    ஆனால் அந்த ஸ்டைல், மேனரிசம், வேகம், துள்ளல், தலைவர் என்று சொன்னாலே நமக்குள் வரும் மின்சாரம், உற்சாகம், சந்தோசம், பூரிப்பு, மன நிறைவு, நிச்சயமாக வராது…..!

    தலைவர் தலைவர் தான்….!

    என்றென்றும்

    தலைவர் பக்தன்

    விஜய் ஆனந்த்

  22. நோ சாய்ஸ் சார் , தலைவரின் வரலாறு என்பது ஒரு காவியம் , இன் கருத்து இதுவரை யாரும் பிறக்கவில்லை அவர் போல நடிப்பதற்கு கூட , இருந்தாலும் உங்க கேள்விக்கு என் பதில் ராகவா lawrance

  23. Shankar K R Shankar K R says:

    ஜி,

    ரஜினியை தவிர வேறு யார் என்று முதலிலேயே கூறிவிட்டீர்கள். என்ன செய்வது?.புது முயற்சியாக இருக்க, எனது தேர்வு விக்ரம் அல்லது சூர்யா. வேறு யார் பண்ணினாலும் தலைவருக்கு நிகர் தலைவர் தான். ஒரு வானம்….

    ஒரு பூமி….

    ஒரு சூப்பர் ஸ்டார் தான் பாஸ் உலகம் முழுவதற்கும்

    அன்புடன்

    சங்கர் கே ர

    திருவல்லிக்கேணி

  24. m nagendrarao m nagendrarao says:

    யாராலும் முடியாது.

  25. satheesh satheesh says:

    அஜித் கரெக்ட் அக ரஜினிக்கு கண்டிப்பா இருப்பார்

    ஏன் என்றல்

    ரஜினி போல அஜித்தும் தனியா க இருந்து உயர்டு உள்ளார்

    ஹி இஸ் தி பெஸ்ட் போர் ரஜினி

  26. Raja Raja says:

    சுந்தர் ஜி..

    Director Sasi Kumar (Nadodigal fame) will be suitable…here we should only stic to the acting and look point of view only…even in Nadodigal, in one of the song he used to mimic thalaivar style….but before accepting the character, he should work really hard for the body language and style content…

  27. Praveen Praveen says:

    I think Ajith will suit for this role…

  28. Mrs. Krishnan Mrs. Krishnan says:

    /Puliku badhila poonaikalai

    poruthi parka mudiyalai.

    Oru velai oru 15 varusham

    kazhichu YATHRA vuku avanga

    thathavoda sayal (nadai, vegam,

    style) irukum vaipu irundhal

    muyarchikalam./

    Sundar anna, 15 varusham enbadhai 25nu potrunga. Konjam unarchi vasapattuten.

  29. Kabilan Kabilan says:

    தனுஷ் க்கு சரியாக இருக்கும் .

  30. Jon Jon says:

    To act in a bio pic of Superstar you just dont need acting skills alone. You need a heart like superstar only then the role can be justified. I dont think anyone in the industry has that. So….?

  31. naveen(kodambakkam) naveen(kodambakkam) says:

    Lawrence

  32. tharun tharun says:

    allu arjun Telugu actor he is stylish he can act

  33. harisivaji harisivaji says:

    இது எப்படி நினைக்க முடியும் …

    நீங்க சொல்றது சூரியனோட … இமேஜ் எ நடிபதற்கு

    யாராலயும் அந்த வெட்பத்தை தாங்கிக்க முடியாது

    ஒரே வழி … இத தலைவரோட அனிமேஷன் படம் போல வேணா எடுக்கலாம் ….

  34. mathan mathan says:

    ajith can be a fair choice.but people can mimic like rajini sir but noone can do his style in his way.noone born to do rajini style…

  35. Veeraragava perumal Veeraragava perumal says:

    We have been seeing in many movies that Actors are influenced by Thalaviar …but Are they succeed?..None of the actors suits to thalaivar so far it seems..But may be a new one in future…

  36. saran saran says:

    only one sun in the world

    only one moon in the world

    ofcourse

    if there is one man army(superstar) is our thalivar only

  37. saran saran says:

    no way to think if superstar only

  38. Shoaib Shoaib says:

    Aamir Khan would be my pick. He is a brilliant actor and an outspoken fan of SS.

  39. Vicky Vicky says:

    ஒரு 20 வருடம் கழிச்சு "யாத்திரா" (தலைவர் பேரான்) .

  40. PVIJAYSJEC PVIJAYSJEC says:

    என்னை பொறுத்த வரை லொள்ளு சபா ஜீவா அல்லது சந்தானம் கண்டிப்பாக சூட் ஆவர்கள்.

    வேற யாரையும் குறிபிட்டு சொல்ல தோன்ற வில்லை ஏன் என்றால் நம்ப சூப்பர் ஸ்டார் ஓட பயோ graphy ல நடிக்கிற அளவுக்கு இங்கே யார்கிட்டயும் பனிவோ அடக்கமோ இல்ல நு நினைக்கிறன்.

    என்றும் தலைவர் பக்தன்

    விஜய்

  41. Kreshna Kreshna says:

    Very good question Sundar but i don't know which actor to pick.

    All i can say is this movie definitely must be made. Rajini is a known face to millions than Ambani and Tata. Maybe there should be no songs in this movie. It should be a Realistic movie.

  42. kokulan kokulan says:

    மம்முட்டி மட்டும்தான் ஓரளவுக்கு பொருத்தமாக இருப்பார்

  43. roshan roshan says:

    NO BODY EXCEPT THE GLOBAL SUPER STAR RAJINI SIR HIMSELF. APART FROM RAJINI SIR , I THINK VIKRAM OR SURYA WILL FIT ( NOT CONFIDENTLY )

  44. Arun Arun says:

    லொள்ளு சபா ஜீவா தான் சுந்தர் right பெர்சன்,i guess

  45. alagan.rajkumar alagan.rajkumar says:

    ஹாய் சுந்தர் ஒரு உண்மையான தலைவரின் ரசிகனால் தான் இது முடியும் .ஆகவே நான் நடித்தால் நன்றாக இருக்கும் .

  46. Mrs. Krishnan Mrs. Krishnan says:

    /harisivaji

    இது எப்படி நினைக்க முடியும் …

    நீங்க சொல்றது சூரியனோட … இமேஜ் எ

    நடிபதற்கு

    யாராலயும் அந்த

    வெட்பத்தை தாங்கிக்க முடியாது/

    idhudhan anna nijam

  47. Anonymous says:

    விக்ரம் அல்லது அஜித் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்

  48. Prasanna Kumar Prasanna Kumar says:

    Sundarji it's very difficult to choose according to me no one can match…Thalaivar.!!!!!

    As some of our friends hav commented may be Lollu sabha Jeeva wud be better……

  49. nagorebari nagorebari says:

    தலைவரின் மேனரிசம்,பாடி லாங்வேஜ் எல்லாம் நம்ம வீட்டு மாப்ள தனுஷ்க்குதான் பொருத்தமாக இருக்கும் .

  50. Anonymous says:

    We can't imagine anybody in his role (inner heart doesn't allow)… So my choice is only animation.

  51. S. J. Robert S. J. Robert says:

    சுந்தர்ஜி,

    ரொம்ப கஷ்டமான கேள்வி!!!!!!!!!,

    ரஜினி சார் தான் கரெக்டா இருப்பாங்க, ஆனால் உங்க கேள்விக்காக சொல்லுறேன்

    வசந்த் விஜய் (son of Vasanth & co)

    பொருத்தமா இருப்பாங்கனு நினைக்கிறேன், கலர், உடம்பு, எல்லாத்துக்கும் மேலாக இவர் ரஜினி ரசிகர் வேற…….

  52. dr suneel dr suneel says:

    உம்ம

    உடல் மொழி , வெளி தோற்றம் கொண்டு பார்த்தல்

    அஜித் , சூர்யா, விக்ரம் ,அமீர் கான் யாருமே பொருந்த மாட்டார்கள்

    லாரென்ஸ் ,நட்டு (மிளகா ஹீரோ ) , சசி குமார் , பொருந்துவார்கள் ..ஆனால் இவர்கள் பாத்திரத்தின் கணம் தாங்குவார்களா என்றால் தெரிய வில்லை !!

  53. RAJA RAJA says:

    HYPOTHETICAL question SUNDAR ji…………

  54. Rajoo Rajoo says:

    எந்த புகழ் பெற்ற நடிகர்கள் நடித்தாலும் அவர்களின் சாயல் வெளிப்படும். அதனால் ஒரு புதுமுகம் அல்லது சற்றே புகழ் பெற்ற லொள்ளு சபா ஜீவா மிகவும் பொருத்தமாக இருப்பார்.

  55. RAJA RAJA says:

    என்னை பொறுத்த வரை அஜித் குமார் அவர்கள் பொருத்தமாக இருப்பார் என்று நினைக்கிறன் ,ஏன் என்றால் இருவரும் கஷ்டமான சூழ்நிலையில் வளந்தவர்கள் ,யாரோட தயவும் இல்லாமல் சினிமாவில் வளர்ந்தவர்கள்,இப்பொழுது இருவரும் நெருங்கி பழகி உள்ளார்கள்

  56. vijay vijay says:

    ஜி சத்தியமா தலைவர்கு நிகர் எவனும் இல்ல, அந்த நேர்மை யார் கிட்டயும் இல்ல ஜி..

    விஜய்

  57. Senthil Kumar Senthil Kumar says:

    My choice would be "Anupam Kher" or " mohan lal.."

  58. Ashokkumar Ashokkumar says:

    தலைவரை தவிர வேற யாரையும் யோசிகாகுட முடியல

  59. selva selva says:

    கற்பனைக்கு கூட வேற ஒருத்தரை நம்ம தலைவர் இடத்தில் வைத்து பார்க்க முடியவில்லை சுந்தர் அண்ணா

  60. jegan jegan says:

    Director Maniratnam and rajini can do this.but now the expectations on rajini sir is very high as sky.

  61. SUHAIL KHAN SUHAIL KHAN says:

    கண்டிப்பாக அஜித் தான் நம்ம தலைவர் ரோல் சரியாக பண்ண முடியும் நு நினைகிறேன் . ஹி வாஸ் எ வெல் விஷேர் ஒப் ஒஉர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , ஹி வில் டூ தி ரோல் வித் புல் கமிட்மென்ட்

  62. SHAHUL HAMEED.S.R SHAHUL HAMEED.S.R says:

    இன்று உள்ள நடிகர்கள் அனைவருக்கும் சிறியது முதல் பெரியது வரையிலான ஒரு இமேஜ் உள்ளது. அதனால் அவர்களை அந்த வட்டத்துக்குள் வைத்து மட்டுமே நம்மால் பார்க்க முடியும். அதனால் ஒரு புது முகம் மட்டுமே சிறந்த தேர்வாக இருக்க முடியும் என்பது என் கருத்து.

  63. pravin pravin says:

    சசிகுமார்.அவர் தான் இயல்பாக நடிப்பார்

  64. ஈ. ரா ஈ. ரா says:

    ஜி,

    நீங்கள் காந்தி படம் போல என்று சரியான உதாரணம் காட்டி இருப்பதால் இந்த பதிவின் அர்த்தம் எல்லோருக்கும் புரிந்திருக்கிறது.. நல்லது.

    ஒரு வேளை அப்படி ஒரு நிலை வருமானால், வெறும் நடிப்புக்காக சில நடிகர்களை யோசித்துப் பார்க்கலாம்.

    ஆனால் தலைவரின் முழு வாழ்க்கையையும் ஒரே நடிகரால் வெவ்வேறு காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் நிச்சயம் பிரதிபலிக்க முடியாது.

    எம்ஜியார் போல செய்து காட்டிய சத்தியராஜும், தலைவரை இமிடேட் செய்ய முயன்ற சிம்பு, விஜய் போன்ற நடிகர்களும் ஜெயிக்க முடியவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    தமிழைப் பொறுத்தவரை உதாரண நடிப்பு என்றால் பாரதியில் ஷாயாஜி ஷிண்டே, காமராஜ் ஆக நடித்த ரிச்சர்ட் மதுரம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள்.

    அதேசமயம் பாரதி, காமராஜ் போன்றோரின் நேரடி செயல்களையும், காணொளிகளையும் இத்தலைமுறை நேரில் கண்டிராததால் பெரிதாக விமர்சனம் எழவில்லை.

    ஆனால் சூப்பர்ஸ்டாரின் நிலை வேறு. இப்பாத்திரத்தை ஏற்று நடிப்பது மிகவும் கடினம்.

    இளவயது ரஜினிக்கு ஜீவாவும், நடுவயது ரஜினிக்கு, வள்ளியில் முதலமைச்சராக வரும் நடிகரும் (இப்போதும் அவர் அதே போல் இருந்தால் ) ஓரளவு பொருந்துவார்கள்.

    மற்றபடி தலைவரை முழுவதும் பிரதி எடுக்க யாராலும் முடியாது…

    சிட்டி பாணியில் சொன்னால் " என்னை மாதிரி வர யாராலும் முடியாது .."

    அன்புடன்
    ஈ. ரா

    ——————————————————
    ஓரளவு நான் இந்த பதிவு வெளியிட்ட காரணத்தை புரிந்துகொண்டீர்கள். நல்ல கருத்துக்கள்.

    வெல்டன் ஈ.ரா.

    - சுந்தர்

  65. GOPAL GOPAL says:

    அஜித் தான் சிறந்த தேர்வு…..என் என்றால் அவரும் தலைவர் மாதிரி தான்

  66. Ajay Ajay says:

    If thalaivar can't act, then here is the formula:

    Shivaji - 40%

    MGR - 30%

    Amitab - 20%

    Kamal - 5%

    If we can find a person with the above formula, he might act. Still, it is not 100%, only thalaivar can fit 100% in the role. Other option is to do animation.

  67. jawahar jawahar says:

    யாராலும் முடியாது! யாராலும் முடியாது!யாராலும் முடியாது!யாராலும் முடியாது!யாராலும் முடியாது!யாராலும் முடியாது!யாராலும் முடியாது!யாராலும் முடியாது!யாராலும் முடியாது!யாராலும் முடியாது!….

    ஜவஹர்.த

  68. jawahar jawahar says:

    சுந்தர் இப்படி ஒரு கற்பனையே வேண்டாம் ப்ளீஸ் ……..

    ஜவஹர்.த

    ————————————————-
    வாழ்ந்த பின்னர் வரலாறு ஆகிறவர்கள் மத்தியில் வாழும்போதே வரலாறு ஆகிவிட்டவர் தலைவர்.

    காந்தி, பாரதி, அம்பேத்கர், போன்று அவர் வாழ்க்கையையும் ஒரு சிறந்த Bio-pic ஆக பதிவு செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம்.

    நான் காரணங்களின்றி எதையும் செய்வதில்லை.

    - சுந்தர்

  69. prasanth prasanth says:

    தயவு சேய்து விஜய்ய மட்டும் கூபிடாதே இன்க‌

  70. Karthik Karthik says:

    இளம் நடிகர்களில் mass movies + class movies ரெண்டுலயும் சிறப்பா நடிக்ககூடியர் சூரியா.

    சூரியா பொருத்தமாக இருப்பார்

  71. NAGORE MUBARAK NAGORE MUBARAK says:

    தலைவர் வாழ்கை கதைக்கு தலைவரே தான்

    நிகர் வேறு யாரையும் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை

  72. Rajan Rajan says:

    //இது ரொம்ப ரொம்ப கஷ்டமான கேள்வி . தலைவர தவிர வேற யார் செய்தாலும் நல்ல வாராது. ஒருத்தர் வேண்ண அதுக்கு கொஞ்சம் பொருந்தலாம் – AmirKhan .

    நம்ம ஊரு ஆளுங்களுக்கு செட் ஆவது.

    ஏன் என்றால் இங்க இருப்பவர்களுக்கு திமிரு ,வெயிதுஎரிச்சல், தலைகனம் , etc,etc …//

    +1

    இந்த குணங்களை வைத்து பார்த்தால் ஆமிர் கான் மட்டுமே செய்யலாம். இருந்தாலும் இது தலைவரின் கதை என்பதால் யாராலும் முடியாது.அவருக்கே உரிய சிலவற்றை எவராலும் கொண்டு வர முடியாது அது ஸ்க்ரீன் ஆனாலும் நிஜமானாலும். " So sorry. Nobody will fit the bill" .

    நன்றி

    ராஜன்

  73. Renga Renga says:

    It will be like taking Bruce Lee's bio-pic. No one will satisfy the fans!

  74. Nanda Nanda says:

    We can't imagine others….. Only we can enjoy to watch our super star… no one can fit for this role. If someone act it won't be nice to watch……. It's not a thalaiver acted movie to someone act… it's real story can fit only our thalaiver…. NO ONE ELSE…. WE CAN'T IMAGINE……

  75. Ramesh Ramesh says:

    No wun can match talaivarz acting..

    He only has to do it Talaivar rockzzz yu rock too :)

  76. saravanan_atps saravanan_atps says:

    We can’t imagine anybody in our thalaivar role. But we can do one thing that is…

    Chitti maathiri cute-a oru robo senchu nadika vechuralam.

  77. ENTHIRAMurthy ENTHIRAMurthy says:

    animation படம் வேண்டுமானால் எடுக்கலாம், தலைவரையே நடிக்க வைக்கலாம். அவரைப்போல வேறு யாராலும் நடிக்க முடியாது…

  78. karthik karthik says:

    Thalaivar nadicha real ah irukkum

  79. viswa viswa says:

    தலைவர் தவிர வேற யாராலும் அவரை imitate செய்ய முடியாது..தலைவர் தலைவர் தலைவர் மட்டுமே

  80. vicky vicky says:

    no one can match ur thalaviar bt i think pasupathi will suit becoz he is also struggle in early days nd black nd also do little bit style so my choice is pasupathi…..

  81. S.GANESH S.GANESH says:

    தலைவரின் ரசிகர் ராகவா லாரேன்சே……………………..

  82. S.Vijay S.Vijay says:

    சுந்தர்,

    தற்போது நடிப்பவர்களில் யாராலும் ரஜினியை போல நம் மனதில் உற்சாகத்தை கொண்டு வரமுடியாது!

    ஒரு 40- 50 வருடங்களுக்குப் பிறகு……. முயற்ச்சிக்கலாம்

  83. Karthik P Karthik P says:

    Just wanted to share what i read in a website. Sundar Ji i felt it is a very good article…

    ++++++++++++++++++++++++++++++++++++

    A mail that I got from a North Indian this evening about MY RAJINI!!!!!

    .by Balaji Vishwanath on Friday, October 29, 2010 at 12:20pm.I was forwarded this from a friend in this mail loop who received this incredible reply from a person working in Infy at Pune. He had received a stupid mail that made fun of Rajini at 5 20 IST today 27th October, 2010. He had replied in exactly 25 minutes this awesome reply! Now he is the MAN…

    Dear Colleagues,

    A lot of people are criticizing Rajnikanth or in fact making fun of him.

    Let me share with you few of my thoughts,

    First of all am not a TAMILIAN (This is to avoid the usual first impression “OH.. he might be from Tamil Nadu”).

    Once I was a critic of Rajnikanth and I use to make fun of him.

    But when I started watching Tamil movies, I came across lot of good movies, good approach and strong scripts in Tamil (Note: These films didn’t had larger than life hero’s).

    Even I saw Tamil movies acted by Vijay, Ajith,Vikram etc.(who are big stars in TN) getting crashed at box-office when they did larger than life roles, and people openly criticizing them for doing such roles. But when it comes to Rajni Tamilians accept everything he does. Even today s youth will die for Rajni. As it is evident from our BB.

    This made me THINK in a different angle.

    When I started thinking in that angle, what I found made me felt pity for teasing such a true human being. Yes, what I found in Rajni is a real human being, a down to earth person, a responsible citizen.

    A person who showcase his real life (Note: I said real life and not reel life) as a message to his people. As Gandhiji said “My life is my Message”. He sets good examples. He conveys good message, even in his latest movie Enthiran there are lot of good messages being conveyed for e.g.: boozing, spitting paan from train.

    If u wanna see the real actor in Rajni watch his old movies in 80‘s. Now because of his stardom his roles are limited. But he is a man of simplicity. He never puts make up unless he s acting in a movie.

    Even though he is the No.1 in TN. He openly praised his fellow actor Kamal Hasan (am not elaborating it).

    Just search YouTube u will get that video.

    Rajnikanth thanked Aiswarya Rai for acting opposite him. This was a very funny as well as a touching speech from a legend. Just refer YouTube and search for Rajnikanth s funny speech during Enthiran music release.

    In my opinion people love Rajni more as a person, than as an actor. Its true he can make everything possible. If he wishes he will be the next chief minister of TN and that too he don t want to join any political party. He can just form a new political party and contest in elections. Damn sure, he will win the majority. But still Rajnikanth haven’t entered politics.

    If Tamilians Respect him, adore him or even consider him as a god. Then, my dear critics of Rajnikanth. Rajnikanth deserves it.

    A few points which make him different from the so called stars of cinema:

    ■Rajnikanth is not an actor who goes to late night parties, booz like a mad dog and takes out his SUV and run over poor migrant workers.

    ■Rajnikanth is not an actor who openly supports Pakistanis when the whole India was crying after the Mumbai attack.

    ■Rajnikanth is not an actor who changes his wife like dress nor he chose to marry a girl half his age, even though he s having kids.

    ■Rajnikanth is not an actor who served jail term for anti national activities or share dais or parties with underworld dons.

    ■Rajnikanth is the only actor who repays all the loss caused to the producer, distributors if his film doesn’t go well at the box office for e.g.: Baba, Kuselan.

    ■Rajnikanth never acts in any advertisements nor become a brand ambassador of a product which gives false promises and have a bad impact in our economy. Just think a man who have crores of diehard fans never accept any advertisement offers.

    These are just a tip of a huge iceberg. Am just an average reader. Even though I don t know Tamil nor I have ever gone to Tamil Nadu, I could say these much. If people of Tamil Nadu starts speaking about his good character this post will never end. That much good quality this Man possesses.

    Am not asking anybody to respect him.

    Why making fun or teasing a Good Human being. It hurts the people of Tamil Nadu( our fellow citizens) or his Fans. Because for them, he is the most respected person.

    For one to become a hero or a star in the minds of crores of people, there s no need of muscle, color, cash or luxury. Just look at Rajnikanth. You can see how good a human being can be.

    And that’s the reason why Tamilians call him

    “THALAIVA”

    Meaning of thalaiva is oh ohh am not the correct person to explain it. It should come from the heart of a Tamilian.

    This is a very short description about Rajnikanth. And I am not posting this as an answer to someone. It’s just my personal opinion.

    Regards

    Saket Phapale

    CMED

    Infosys Technologies | Pune

    Mob: +91 7709402161

  84. Dinesh Murugesan Dinesh Murugesan says:

    Problem என்னன்னா , இதுவரை ரஜினி என்ற இடத்தில யாரையும் வைத்து பார்க்க மனம் விட்டதில்லை. இப்படி ஒரு கேள்வி கேட்டல் அதற்க்கு Chitti ஸ்டைளில் பதில் சொல்லவேண்டும் அனால் ….Hypothetical Questions.

  85. anu anu says:

    its very hard to imagine anyone who an enact superstar … the problem is the speed and style … may be his grandson .. in the current crop may be a goood actor like aamir khan .. but still i think he will struggle matching the speed and style of our thalaivar, but he is a good bet ..

  86. Muru Muru says:

    Of cource nobody can fit into Thalaivar Role. If i have to guess, i would guess Vikram ….He can do action role and acting role better than others in the existing cloud.

  87. R.Gopi R.Gopi says:

    // சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கையை படமாக எடுத்தால் அதில் நடிக்க யார் பொருத்தமாக இருப்பார்கள்? //

    எனக்கு தெரிஞ்சு இன்னிக்கி தேதியில யாரும் (எந்த நடிகரும்) கண்ணுக்கு படல…. இது மிக மிக உண்மையான ஸ்டேட்மென்ட்…. நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்…

    வேணும்னா, ஏதாவது புதுமுகம் ட்ரை பண்ணலாம்….

    சுந்தர் ஜி… உங்கள் மனதில் அப்படி யாராவது இன்றைய நடிகர்கள் இருக்கிறார்களா என்று அறிய ஆசை….

  88. R.Gopi R.Gopi says:

    தலைவரை இமிடேட் பண்ணி வேணும்னா ஓரிரு காட்சிகளில் நடிக்கலாம்….

    ஆனால், அவரையே போல் நடிக்கணும்னா, அவரோட “க்ளோனிங்” தான் வரணும்…..

  89. k.karthik k.karthik says:

    உண்மையாக சொன்னால் நம்ம தலைவர் முக அமைப்புடன் இருக்கும் நபர்களை கூட கண்டு பிடித்து நடிக்க வைத்து விடலாம்…..
    ஆனால் அந்த ஸ்டைல், மேனரிசம், வேகம், துள்ளல், தலைவர் என்று சொன்னாலே நமக்குள் வரும் மின்சாரம், உற்சாகம், சந்தோசம், பூரிப்பு, மன நிறைவு, நிச்சயமாக வராது…..!
    தலைவர் தலைவர் தான்….!
    என்றென்றும்
    தலைவர் பக்தன்

  90. k.karthik k.karthik says:

    ஒரு சூரியன் ஒரு சந்திரன் என்றும் ஒரே தலைவன் அது ரஜினி ரஜினி ரஜினி ரஜினி மட்டும் தயவுசைத்து தலைவுருடன் யாரயும் ஒப்பிடதிர்கள் தலைவரின் பித்தன் கார்த்திக்.

    ——————————————
    Pls don’t say i am comparing. You please read the article first and then speak. I have reasons. If such a bio-pic is taken about thalaivar during his life-time it will be a biggest achievement for him in indian cinema and social life.

    He can’t act in his own bio-pic.

    - Sundar

  91. Vira Vira says:

    சுந்தர்,
    இந்த பதில் உங்களுக்கு கொஞ்சம் இல்லை ரொம்ப ஓவராஹ் தெரியலாம். இருந்தும் சொல்கிறேன்… 'நான்' தான் பொருத்தமாக இருப்பேன்..! தலைவரை அணு அணுவாக ரசிக்கும் நான்.., அவரை போலவே பேசி பார்க்கும் நான், அவரது மேனரிசம் செய்து என் அருகில் இருப்பவர்களை அவ்வபோது ரசிக்க வைக்கும் நான் நிச்சயம் அவர் கேரக்டருக்கு பெருமை சேர்ப்பேன்…! குறிப்பு: நான் என்று சொன்னது என்னை மட்டும் அல்ல தலைவர் நடிப்பை ரசிக்கும், அவரை போல் மேன்னரிசம் செய்யும், அதை தன்னை சுற்றி இருப்பவர்கள் ரசித்திருந்தால் நிச்சயம் அவர்களில் எவர் வேண்டுமானாலும் நடிக்கலாம்…!

  92. Sekar.V Sekar.V says:

    யோசிக்கிறேன்…..யோசிக்கிறேன்…..யோசிக்கிறேன்…..

    யோசித்து கொண்டே இருக்கிறேன்……புலப்படவில்லை…..

  93. Gokuldass Gokuldass says:

    லொள்ளு சபா ஜீவா அல்லது ராம்ஜி

  94. balaji balaji says:

    only one sun,

    only one moon,

    only one SUPER STAR .

    Nobody can even try to match the charisma , the mass appeal , the styles , the performance levels of our Thalaivar .

    SUPER STAR ' s acting caliber is unmatched by any person.

    That's why he has got FANS in countries including GERMANY , JAPAN , USA , UK ,…… and the list goes on and on .

    NOTE : All the above countries have a majority of non tamil speaking population . This makes our thalaivar a true WORLD SUPER STAR .

    I , hence , conclude that no actor in this world can even think of taking up the role of our SUPER STAR

  95. rajesh.v rajesh.v says:

    யோசிக்கிறேன்…..யோசிக்கிறேன்…..யோசிக்கிறேன்…..

    யோசித்து கொண்டே இருக்கிறேன்……புலப்படவில்லை….

    ———————————————————————————-

    me too in the same situation. in tamil i cant find any actors (including danush and ajith). After searching other film actors, i think jackie shroff or anil kapoor will suits the role. its my personal opinion.

    rajesh.v

  96. sriram sriram says:

    As lots of people said only thalaivar can do but you said it clearly thats not a option ,so i think only amithab baccan can do .

  97. Mrs. Krishnan Mrs. Krishnan says:

    Sundar anna,

    apdi nadika unga choice yarunum sollunga. Yarayavadhu manasula ninaichudhan ipdi kettingala?

  98. ROBOsathya ROBOsathya says:

    லொள்ளு சபா ஜீவா கண்டிப்பா செட் ஆவார்……

    2nd choice : மிளகா ஹீரோ & CAMERAMAN நடராஜ் செட் ஆகலாம் !!!!! கொஞ்சம் சந்தேகம் தான்.

    அனால், ஜீவா தவிர வேற யாராலையும் தலைவர் MANNERISMS uh Perfect ah Imitate செய்ய முடியாது……

    INDHA SURYA, VIKRAM, AJITH, DANUSH, ALLU ARJUN, AAMIR KHAN, MOHANLAL, PRAKASH RAJ, MAMOOTY, KAMAL HASSAN Kitta la Nadiaputhaan iruku…… But, Thalaivar’oda style illa…..

    INDHA VIJAY VASANTH, VIJAY, LAWRENCE kitta thalaivar Madri body language light ah iruku…. but Performance suthama illa….

    Milaga ‘NATRAJ’ kitta semma style iruku… even frm his hair.. nala vum nadipaaru….. but, he s not dat much popular.

    Coming to JEEVA- he s RAJINIKANTH’S XEROX…..
    HAIR STYLE la irundhu….. Voice varaikum edhuvumey Problem illa… he is having everything. Btw, acting varuma nu neenga kekalam? JEEVA nadikanum nu avasiyamey illa…. he hv 2 behave like himself!! dats it. Coz, avar RAJINI sir madriye maari pala natkal aachu…. siripu la irundhu LOOK varaikum elamey thalaivar XEROX….

    Panna, jeeva va vechu pannunga !!

  99. Khader Khader says:

    In order to act in the BIO of Superstar, The actor should have the following qualities:

    1. No bad name or remark in the industry

    2. A Mass crowd puller, an ordinery X or Y actor cant fit here

    3. Should do a real home work and go in to the skin of this character

    4. If some one takes this movie, It shouldnt fail in the box office.

    By considering all these factors, I would say with this current trend, SURYA is the best choice. He is the one who can do real work in terms of portraying Superstar.

  100. M.Venkatakrishnan M.Venkatakrishnan says:

    உண்மையாக சொன்னால் நம்ம தலைவர் முக அமைப்புடன் இருக்கும் நபர்களை கூட கண்டு பிடித்து நடிக்க வைத்து விடலாம்…..

    ஆனால் அந்த ஸ்டைல், மேனரிசம், வேகம், துள்ளல், தலைவர் என்று சொன்னாலே நமக்குள் வரும் மின்சாரம், உற்சாகம், சந்தோசம், பூரிப்பு, மன நிறைவு, நிச்சயமாக வராது…..!

    தலைவர் தலைவர் தான்….!

    என்றென்றும்

    தலைவர் பக்தன்

    mvk

  101. R.Gopi R.Gopi says:

    சுந்தர்….

    மிகவும் யோசித்து இந்த பதிலை சொல்கிறேன்….

    ஜாக்கி ஷ்ரோப் அல்லது அனில் கபூர் எனது சாய்ஸ்….

  102. Ragu Ragu says:

    Hai!! Thalaivar Fans>>

    One of our peers said Yathra's name (Thalaivars grandson),, hpefuly he wil apt to Thalaivar's role>>

    other than him i dnt thnk so>>

  103. jegan jegan says:

    Hypothetical question.

  104. rangan rangan says:

    பிடிக்காவிட்டாலும் கூட ********* or சிம்பு

    ————————————
    Sorry Rangan. We all hate that particular actor unanimously.
    - Sundar

  105. Nanda Nanda says:

    Thanks Karthik P for sharing nice article…..

  106. Sridhar Sridhar says:

    ஹாய் சுந்தர், நம் தலைவரை போல் நடிக்க வேண்டுமானால் அவருடன் நெருக்கமான உண்மையான நண்பர்களால் தன முடியும். தலைவரின் நண்பர்கள் யாரேனும் செயதால் உணர்வு பூர்வமாக இருக்கும். பேரன் யாத்ரா (கடவுளின் அருள்) ௨௦ வருடங்களிக்கு பிறகு சரியாக இருப்பார்.

  107. balaji balaji says:

    Dear Sundarji,

    Its very difficult to get answer for this question…

    My option is Aamir Khan, Ajith, Vikram or Ragava Lawrence.

    Regards,

    Balaji

    Dubai

  108. Renga Renga says:

    Pommalaattam hero Nana Pategar

  109. கண்ணனுங்களா!! இன்னொரு சிவாஜிராவ் தான்யா பிறக்கணும்

  110. RajiniVeriyan RajiniVeriyan says:

    பிரசன்னா.

  111. Galeel Galeel says:

    லொள்ளு சபா ஜீவா is my choice………..

  112. RaJni-AnsAri RaJni-AnsAri says:

    Lollu saba Jeeva dhan sundhar anna… Rajni rasigargal pala vagai la undu… Adhula sirandha vagai ondru "chinna vayasula irundhae thalaivar padangala parthu parthu valarndhu, nammala ariyamalae naaladaivil namakkulla thalaivar madhiriye nadai, udai, bavanai, sirippu, amaidhi, paechu, ippadi ovvoru udal asaivum, manasum maridum… Idhu namma ellarukum therinja vishayam dhan… Naanum andha vagaila oruthana irukuradhuku perumaiya iruku… Jeeva kuda apdi dhan nu jeeva parthavanga ellarukum idhu puriyum. Naan sonnadhu right dhanae…?

  113. RaJni-AnsAri RaJni-AnsAri says:

    Lollu saba Jeeva dhan… Sundhar anna.. Rajni Rasigargal pala vagai la undu… Adhula miga sirandha vagai idhu. "vivaram therinja vayasula irundhae thalaivaR padangal parThu partHu.. Naaladaivil tHalaivaR madHiriye NaDai, uDai, bhavaNai, siriPu, paecHu, aMaidhi, minnaL pondra paaRvai, ipdi ovvoru udal aSaivuGaluM nammai ariyamalae mariDuM… Ivan rajni madhiri pandran nu mathavanga solli dhan namake theriyuM.. Aanal indha matrangal iyarkaiyae.. Idhu namma eLLarukuM therinJa vishayam dHan… JeeVa vum indha vaGai dhan enBadhu, Jeevavai paRtha ellarukum idhu puRiyuM… Naanum idha vagaila oruthana iruppatharKu perumaiya irukku. Enna frnds Jeeva suit avarla.?

  114. Ramarajan-Madurai Ramarajan-Madurai says:

    Nobody match தலைவர். யாத்ரா வளர்தோனே நடிக்கலாம் தலைவரோட நடை பேச்சு எல்லாம் கேட்டு வளர்துருபான். சுந்தர் அண்ணா மற்றும் சிட்டி soldiers கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  115. Ashwin Ashwin says:

    சுந்தர்,

    நம்மல்ல ஒருத்தர். ஏனா ரஜினி ரசிகன விட யாராலையும் அவர் மாதிரி நடிக்க முடியாது. We are following him from long time and we know him inch by inch so one of us if act in that role it won't look like acting but looks natural. The actors mentioned above will just act for money sake but can't do justice to the life time role.

  116. Deepak Deepak says:

    May be Yathra…….

  117. r.v.saravanan r.v.saravanan says:

    ரஜினிக்கு நிகர் ரஜினி தான் சுந்தர்

  118. T.E. Krishnan T.E. Krishnan says:

    Oru velai yaravadhu nadichalum adhu unarvupoorvama rajini rasiganai thripthi paduthuma?

  119. devraj devraj says:

    Yathra might be a choice.

  120. T.E. Krishnan T.E. Krishnan says:

    Hello Mr. Sundar,
    en previous comment parthu ennai thavaraga ninaika vendam. Adhu en doubt dhan. Nanum thalaivar fan dhan.

    Thanks
    T.E. KRISHNAN

    ————————————————-
    No issues boss. It's ok. I honour your opinion. But i have reasons for asking this question.
    thanks.
    - Sundar

  121. R O S H A N R O S H A N says:

    ஜி இது ரொம்ப ரொம்ப கஷ்டமான கேள்வி……but ஒரு வேலை இது நடக்கும் பட்சத்தில்…..i'll go with karthick's choice….லொள்ளு சபா ஜீவா ஓர் அளவுக்கு பொருந்துவார்…..no other can do that role….

  122. Sharath Sharath says:

    Among the current actors we have seen, my opinion is that either Anil Kapoor or Vikram can act in Thalaivar's bio pic.

    Btw .. Ee. Ra.ji, the actor you were mentioning (Valli's CM role) is Kannada actor Ashok and a friend of our Superstar.

  123. Mrs. Krishnan Mrs. Krishnan says:

    Anna,

    romba yosithu solren

    en choice CHIRANJEEVI.

    Avar thalaivaruku nanbar. Speed, style la thalaivarai ooralavu othu povar. Erkanave Telugula superstarah irundhavar enbadhal, namakkum indha characterku konjam nerukama therivar. Work out panni udambai konjam kuraicha set aagalam.

    Tamil actors ellam ippave adutha superstarnu kudhikaranga. Ini superstar aave nadicha ivanga panra alaparaya eppadi thangaradhu?

    Niraya per lollu sabha Jeeva vai solli irukanga. Indha characteroda wait avar thanguvara enbadhu sandhegamdhan.

    Idhu en karuthudhan. Thappa ninaikadheenga.

  124. T.E. Krishnan T.E. Krishnan says:

    Thank u Sundarji.

    I think Anil kapoor or Amir khan will fit.

  125. B. Kannan B. Kannan says:

    தலைவரை வைத்தே எடுத்து விடலாம்.. சின்ன வயசுக்கு இருக்கவே இருக்கு CG .. வேறு யாரையும் நினைக்கவே முடியவில்லை…

  126. prasath prasath says:

    When i think with any actors wearing that black and white shirt and deliver any mannerisms like rajini (with height, look, actions…) , ajith and kalavani vimal comes to my mind….

  127. GIRI U.S. GIRI U.S. says:

    தலைவரைத் தவிர ஒருவர் உண்டு .

    தலைவரைப் போல் பணிவு, அடக்கம், புன்சிரிப்பு, கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பது , ஒளிவு மறைவு இல்லாமல் பழகுவது , எளிமை, திறந்த மனோதொடு பழகுவது, மனதில் இருப்பதை மறைக்காமல் கூறுவது .

    போஎன்ற பல விஷயங்கள் ஒரே ஒருவரிடம்தான் உண்டு.

    அவர் யார் தெரியுமா ? கலிபோர்னியா GOVERNOR அக உள்ள அர்னோல்ட் ச்ச்வர்சநேக்கேர். அதனால்தான் ஒரு சாதாரண BODYBUILDER AGA வாழ்க்கையை தொடங்கி இன்று ஒரு மாநிலத்தின் GOVERNOR அக உள்ளார் .

    நாளை அமெரிக்காவின் ப்ரெசிடென்ட் அக ஆனாலும் ஆச்சர்யபடுவதிர்கில்லை .

  128. augustine augustine says:

    I think Ajith will be a better option for doing Thalaivar's role. He did justice to the role in BILLA and also shares a good rapport with our Superstar.

  129. antony prabu antony prabu says:

    தனுஷ் அல்லது யாத்ரா

  130. Raja Raja says:

    Sundar jiii…

    I am curious about this thread…what is the verdict..you had mentioned that you were having some reason…now it is time to share with us jiii

    Thank you

    ———————————————
    You all will know that soon. Pls wait.
    - Sundar

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates