









You Are Here: Home » Gallery, Happenings » ‘இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு, உண்மைதானடா! ஒரு புகைப்படத் தொகுப்பு!!
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு- கலாவதி தம்பதியின் மகன் பார்த்தசாரதி என்ற பிரபு. இவர் சாந்தனு நடித்த “சக்கரக்கட்டி” படத்தை டைரக்டு செய்துள்ளார். பிரபுவுக்கும், வேலூரைச் சேர்ந்த தொழில் அதிபர் என். ராஜேந்திரன்-சாந்தலட்சுமி மகள் இரா.சரண்யாவுக்கும் திருமணம் சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் (MRC) சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது நினைவிருக்கலாம். அதன் விஷேஷ புகைப்பட தொகுப்பை கூட நாம் அளித்திருந்தோம்.
சூப்பர் ஸ்டாரை மையமாக வைத்து அங்கு நடந்த சில சம்பவங்களை உங்கள் பார்வைக்கு தற்போது கொண்டு வருகிறேன். (ஜஸ்ட் இந்த போட்டோவையெல்லாம் பாருங்க. அதுவே போதும்.)
முன்தினம் மாலை நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், சத்யராஜ், கார்த்தி, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர், ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர். டைரக்டர்கள் கே.பாலச்சந்தர், ஷங்கர், விக்ரமன், பேரரசு, தயாரிப்பாளர்கள் ராமநாராயணன், சத்யஜோதி தியாகராஜன், எடிட்டர் மோகன் ஆகியோரும் வாழ்த்தினர்.
திருமணத்துக்கு வந்தவர்களை எஸ்.செல்வம், கலைப்புலி தாணு, எம்.பாலசுந்தரம், பி.குமார், பி.பாஸ்கர், எஸ். முரளி, டி.பரந்தாமன், ஏ.கே. நடராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
* திருமணத்திற்கு துணை முதல்வர் முதல் தே.மு.தி.க தலைவர் வரை பலர் வந்திருந்த போதும், சூப்பர் ஸ்டார் வந்த போது தான் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
* தே.மு.தி.க தலைவர் நடிகர் விஜயகாந்தை அங்கு தற்செயலாக சந்திக்க நேர்ந்துவிட, அவருக்கு கைகொடுத்து வாழ்த்தினார் சூப்பர் ஸ்டார். பின்னர் அங்கிருந்த போட்டோகிராபர்களின் வேண்டுகோளுக்கிணங்க விஜயகாந்த்துடன் சேர்ந்து போஸ் கொடுத்தார். புகைப்படக்காரர்கள் ஒரு கணம் நெகிழ்ந்துவிட்டனர்.
* அதுவரை அங்கு மற்றவர்களை சுற்றியிருந்த கூட்டம் முழுதும், பிறகு சூப்பர் ஸ்டாரை சூழ்ந்துவிட்டது. அவர் கிளம்புவரை, அவரை சுற்றி கூட்டம் சற்று கூட விலகவில்லை. அவரை யாரும் நெருக்கிவிடாதபடி பத்திரமாக பார்த்துக்கொள்வதர்க்கு பாதுகாவலர்களுக்கும் பி.ஆர்.ஒ.க்களுக்கும் பெரும் வேலையாக இருந்தது.
* பாதுகாவலர்கள் புடை சூழ சூப்பர் ஸ்டார் நடந்து வரும் அழகே தனியாக இருந்தது.
* தம்பதிகளை வாழ்த்த வந்தவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு சென்ற வண்ணமிருந்தனர். அங்கிருந்த குட்டீஸ்கள் யாரையும் லட்சியம் செய்ய வில்லை. ஆனால், சூப்பர் ஸ்டார் வந்தது தான் தாமதம். எங்கிருந்து தான் வந்தார்களோ தெரியவில்லை. “ஐ.. ரஜினி அங்கிள்…. ரஜினி அங்கிள்” என்று வாண்டுகள் ஓடிவர,. அடுத்த சில நொடிகளில், மேடை முழுதும் ஒரே குட்டீஸ்கள் மயம்.
தாணு, சிரித்துக்கொண்டே, “இவங்க எல்லாம் உங்க FANS. உங்க கூட போட்டோ எடுக்காம விடமாட்டங்க” என்று தலைவரிடம் கூற, சூப்பர் ஸ்டார் சிரித்துக்கொண்டே எல்லா குழந்தைகளுடனும் சலிக்காது போஸ் கொடுத்தார்.
* சூப்பர் ஸ்டார் வந்தது அனைவருக்கும் சந்தோஷ அலைகளை ஏற்படுத்தியதால், ஒரு கணம் தாணு கண்கலங்கிவிட்டார். நெகிழ்ச்சியுடன் தலைவரின் கைகளை பிடித்து நன்றி கூறினார்.
* அடுத்த சில கணங்களில் மேடையைவிட்டு இறங்கி வர, மணமக்களின் உறவினர்கள் மற்றும் அவர்கள் குடும்ப பெண்கள் அனைவரும் சூப்பர் ஸ்டாரை காண முண்டியடித்துக் கொண்டு வந்து மேடையை மொய்த்துவிட்டனர். அதில் ஒரு பெண் சட்டென்று அவர் காலில் விழ, மறுக்காது அவரை வாழ்த்தி தூக்கிவிட்டார் தலைவர்.
* படியிலிருந்து இறங்க முற்படும்போது பலர் தங்கள் மொபைலில் சூப்பர் ஸ்டாரை போட்டோ எடுக்க முண்டியடித்தனர். (இணைக்கப்பட்ட புகைப்படத்தை பாருங்கள்!).
* மேற்படி கூட்டம் லிப்டில் சூப்பர் ஸ்டார் ஏறியபோது கூட விடாமல் பாலோ செய்ய, செக்யூரிட்டிகள் வந்து அவரை வளையம் வைத்து அழைத்து சென்றார்கள்.
தலைவருக்கு வயசு ஏற ஏற அவரோட MASS ம் CRAZE ம் கூடிக்கிட்டே தான் போகுது. ஏன்னா… இது இறைவன் கொடுத்த வரமப்பா. அது இறுதி வரைக்கும் வருமப்பா!
Complete Gallery of Superstar @ Dhanu House wedding
Click Next button to go to subsequent page of Gallery
SUNDAR SUPER UPDATE KEEP IT UP. THANKS ALOT.
தலைவர் நடையில் தான் என்ன ஒரு கம்பீரம்……..!
பார்த்த நொடியிலேயே ஈர்த்து விடுகிறார்………!
————————————————————————————-
சுந்தர் அண்ணா, எனக்கொரு சந்தேகம்…..!
பதிவிற்கு பொருத்தமான தலைப்பை எப்படித் தான் தேர்வு செய்கிறீர்கள்….! ஒவ்வொன்றும் மிகப் பொருத்தமாகவே உள்ளது……!
உட்கார்ந்து யோசிப்பீங்களோ…? இல்ல 13 பேர் கொண்ட குழு இருக்கா….?
நாளுக்கு நாள் உங்கள் தமிழும் மெருகேறிக்கொண்டே போகிறது……! ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது……!
இந்த மாமனிதரின் வாழ்க்கையை பதிவு செய்து கொண்டிருக்கும் உங்கள் அரும்பணி மேலும் மேலும் தொய்வில்லாமல் தொடர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்
———————————
என்றென்றும் தலைவர் பாதையில்
விஜய் ஆனந்த்
//R.Gopi
என்ன நடந்தது ? என்ன நடந்தது?
ஆவலாக இருக்கிறோம்…. ப்ளீஸ்
சொல்லுங்களேன் சுந்தர் ஜி….
நான் யூகித்ததில்,
அங்கு திருமணம் நடந்தது….. வேற
என்ன?//
***
இந்த கேள்விக்கு ஒரு ARTICLE லே போட்டு பதில் சொல்லிட்டிங்களே sundar அண்ணா…! கோபி அண்ணா மேல உங்களுக்குத்தான் எவ்ளோ அன்பு
/அங்கிருந்த
குட்டீஸ்கள் யாரையும் லட்சியம்
செய்ய வில்லை . ஆனால், சூப்பர்
ஸ்டார் வந்தது தான் தாமதம்.
எங்கிருந்து தான்
வந்தார்களோ தெரியவில்லை. “ஐ..
ரஜினி அங்கிள்….
ரஜினி அங்கிள்”
என்று வாண்டுகள் ஓடிவர,. அடுத்த
சில நொடிகளில், மேடை முழுதும்
ஒரே குட்டீஸ்கள் மயம்./
***
குழந்தைகளும், தெய்வமும் ஒண்ணு. நல்லவங்களைத்தான் பிடிக்கும்.
_
/(ஜஸ்ட் இந்த போட்டோவையெல்லாம்
பாருங்க. அதுவே போதும்.)/
-
எல்லா படங்களுமே அருமை.
thalaiva neengal vandaal kootam mattum alla ohtum kuviyum,palarukku aapum kuviyum.
அருமையான புகைப்படங்கள் - நன்றி
Nice
நம் தலைவர் பெயருக்குள் மட்டும் காந்தம் அல்ல, அவரே மக்கள் அனைவரையும் ஈர்க்கும் காந்தம், வசீகரிக்கும் வசீகரன், வளர்க நம் தலைவர்ப் புகழ் மேன்மேலும் !
அருமையான கலக்கல் ரிப்போர்ட் சுந்தர்ஜி..!! தலைவருடன் சேர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்தி எங்களுக்கு….நன்றி உங்களுக்கு…
/////பின்னர் அங்கிருந்த போட்டோகிராபர்களின் வேண்டுகோளுக்கிணங்க விஜயகாந்த்துடன் சேர்ந்து போஸ் கொடுத்தார்.//////
ஜாக்கிரதை…!! தலைவரின் அண்ணாமலை சைக்கிளை மட்டுமே காட்டி விளம்பர படுத்தி தமிழ் நாட்டில் ஆட்சியை பிடித்த வரலாற்று சம்பவம் நடந்துள்ளது..இதில் விஜயகாந்துடன் தலைவர் இணைந்து நிற்கும் போட்டோ காட்டி, ''சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆதரவுடன் '' ''போடுங்கம்மா ஒட்டு, சூப்பர் ஸ்டாரை பாத்து..!'' என்று விளம்பர படுத்தி ஆட்சியை பிடிக்காமல் இருந்தால்சரி..!!
வாவ்…sounds nice to hear as…''போடுங்கம்மா வோட்டு! சூப்பர் ஸ்டாரை பார்த்து..!!!'' இல்ல?
//sounds nice to hear
as…”போடுங்கம்மா வோட்டு!
சூப்பர் ஸ்டாரை பார்த்து..!!!”
இல்ல//
-
@ Deen.
COMMENT Super ah irukunga.
எப்படி இருக்கீங்க? எங்கே முன்ன மாதிரி regularஆ உங்க கமெண்ட்ஸ் பார்க்க முடியறதில்லயே…!
//இது இறைவன் கொடுத்த வரமப்பா. அது இறுதி வரைக்கும் வருமப்பா!//
********
ஒரு முழுமையான பதிவையும் எழுதி, கடைசியில் அட்டகாசமான பஞ்ச் டயலாக் வைக்கும் கலையை சுந்தர் ஜி அவர்களிடம் நாம் அனைவரும் கற்க வேண்டும்…
சுந்தர் அண்ணா!!! மிகவும் அருமையான புகைப்படங்கள். நமது தலைவரின் "மாஸ்" மேலும் மேலும் கூடி கொண்டே போகிறதே!!!!! "விகாந்த்" ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் "ஒரு முறை எனக்கு சந்தர்பம் கொடுத்து பாருங்கள்" என்று கேட்கிறார்… ஆனால் ஊம் என்று சொன்னால் ஆட்சி இந்த அண்ணாமலைகாக காத்திருக்கிறது….. மல டா!!!! அண்ணாமல!!