









You Are Here: Home » Guest Article » ‘சூப்பர் ஸ்டாரின் அறிவுரையை பின்பற்றினேன்; பலனடைந்தேன்’ – தலைவரால் ஏற்பட்ட மாற்றம் குறித்து பகிர்ந்துகொள்கிறார் ரசிகர் ஒருவர்!
சூப்பர் ஸ்டாரிடம் எனக்கு பிடித்த குணங்களில் முக்கியமான ஒன்று உபதேசிப்பதைவிட வாழ்ந்துகட்டுவது. அவர் தன் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் பல நல்ல விஷயங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல விதங்களில் உணர்த்திவருகிறார். ஒரு நடிகராக மட்டுமே அவரை பார்ப்பவர்களுக்கு அவர் ஜஸ்ட் ஒரு ENTERTAINER. ஆனால் அவரை அதற்கு அப்பாற்ப்பட்டு பார்த்து வருபவர்களுக்கு அவர் ஒரு சிறந்த ஆசான். அதற்க்கு மேலும் அவரை பார்த்து வருபவர்களுக்கு அவர் ஒரு ரோல் மாடல். தன்னை தீவிரமாக பின்பற்றுகிறவர்களுக்கு அவர் பெரும்பாலான விஷயங்களை அவர் உபதேசிப்பதில்லை. வாழ்ந்துகாட்டி வருகிறார்.
‘ஊருக்கு தான் உபதேசம்; எனக்கல்ல’ என்று கருதாது, தான் பிறருக்கு கூறும் நல்ல விஷயங்களை முதலில் தான் பின்பற்றுகிறோமா என்று பார்த்துக்கொள்வதில் அவருக்கு நிகர் அவரே. அதே போல, திரையில் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் கூறும் அனேக நல்ல விஷயங்களை நிஜத்திலும் கூடுமானவரை பின்பற்றுமாறு பார்த்துகொள்வார். இதற்க்கு உதாரணமாக பல விஷயங்களை நம்மால் பார்க்கமுடியும்.
இக்கட்டான பல சந்தர்ப்பங்களை அவர் ஹேண்டில் செய்யும் விதத்தை பார்த்து வியந்திருக்கிறேன். “ஓ… தலைவர் இதற்காகத் தான் இப்படி ஒரு முடிவை எடுத்தாரோ… அவர் கணக்கு எத்துனை சரி…!” என்று பிற்பாடு நடக்கும் நிகழ்வுகளை பார்த்து பல முறை வியந்திருக்கிறேன். அரிதாக ஒரு சில சமயம் மட்டுமே அவர் கணக்குகள் தவறியிருக்கின்றன. விதி வலியது என்பதை தவிர அதற்க்கு வேறு என்ன கூற முடியும்?
சூப்பர் ஸ்டார் பல ஆண்டுகளாக ரசிகர்களுக்கு கூறிவரும் முக்கிய விஷயம் ‘தியானம் செய்யுங்கள்’ என்பது தான். தியானம் மதங்களுக்கு அபார்ப்பட்டது. எந்த மதத்தவராயினும் தியானம் செய்யலாம். மனதை ஒரு முகப்படுத்தும் போது, அதற்க்கு அசாத்திய சக்தி கிடைத்துவிடுகிறது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் தியானம் குறித்து அவர் ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார். 1995 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் பேட்டியில், 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘RAJINI 25′ நிகழ்ச்சியில், சந்திரமுகி வெள்ளி விழாவில் இப்படி பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார். தலைவர் தான் சொல்கிறாரே… காசா பணமா… தியானம் தானே…. ஜஸ்ட் செஞ்சு தான் பார்ப்போமே…. என்று சில/பல ரசிகர்கள் அதை முயற்சிக்க அவர்கள் வாழ்வில் அனேக பாசிடிவ் மாற்றங்கள்.
(சில வருடங்களுக்கு முன்பு ரெகுலரா சில வாரங்கள் தியானம் செஞ்சிருக்கேன். என்னவோ, அப்புறம் நிறுத்திட்டேன். இப்போ, இந்த பதிவோட தூண்டுதளால மறுபடியும் கடந்த சில நாட்களா தியானம் செஞ்சிகிட்டு வர்ரேன். பார்க்கலாம் என்ன மாற்றங்கள் ஏற்படுதுன்னு!)
சூப்பர் ஸ்டாரின் அறிவுரைப்படி அப்படி தியானத்திற்கு முயற்சித்து, அதன் மூலம் பல நல்ல பலன்களை கண்ட நம் தள வாசகர் சஹாநாதன் தனது அனுபவங்களை அனுப்பியிருக்கிறார்.
சஹாநாதன் யூ.எஸ்.ஸில் உள்ள நம் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் தான். ரசிகர் என்ற நிலையை தாண்டி, பல்வேறு பரிணாமங்களை இவர் தொட்டிருக்கும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதும் பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல்கள்.
Over to Saha…
ரஜினி என்னுள் இட்ட விதை…
ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி எத்துணையோ நன்மைகள் செய்திருந்தாலும், எனக்கு அவர் செய்த மிகப் பெறும் நன்மை, தியானத்தையும் ஆன்மீகத்தையும் நோக்கி அவர் என்னை திருப்பியது தான்.
1999 ஆம் ஆண்டு தரமணி திரைப் பட நகரில் நடைபெற்ற ‘ரஜினி 25′ நிகழ்ச்சியில் உரையாற்றிய ரஜினி, தனது இந்த முன்னேற்றத்துக்கு தனது உழைப்பை தவறி இன்னொரு முக்கிய காரணம் தான் செய்யும் தியானம் என்றும், கடந்த 30 ஆண்டுகளாக தான் தியானம் செய்துவருவதாகவும் கூறினார்.
அதற்க்கு அடுத்த நாள், என் குருவாக நான் மதிக்கும் கல்கண்டு திரு.லேனா தமிழ்வாணன் அவர்களை சந்தித்தேன். ரஜினி அவர்கள் தியானம் பற்றி கூறியதை குறித்து கேட்டேன். அவரும் “ரஜினி சொன்னது சரி தான். தியானம் மிகப் பெரிய வரப்ரசாதம்.” என்று கூறினார். அவரிடமே, மேலும் சில நுணுக்கங்களை கற்று, தினசரி தியானம் செய்ய துவங்கிவிட்டேன். அதன் பின்பு தான் உணர்ந்தேன்… தியானம் என்பது நம் வாழ்க்கைக்கே ஒளி காட்டும் விளக்கு போன்றது என்று.
இதோ இன்றைக்கு நான் ஏதாவது சாதித்திருக்கிறேன் என்றால், அதற்க்கு காரணம் நான் செய்யும் தியானம் தான். தலைவர் என்னுள் இட்ட விதையின் காரணமாக இதோ இதுவரை பல புத்தகங்களை எழுதிவிட்டேன்.
நன்றி.
————————————————————————-
1995 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் பேட்டியில் தலைவர் தியானம் செய்வது எப்படி என்பது குறித்து கூறியது… (From our archives)
http://1.bp.blogspot.com/_OYNKoPImJ_k/SSz8Cvxs-qI/AAAAAAAACVI/08s6bqWQXfg/s1600-h/Doordarshan+Interview+Part+4jD.JPG
————————————————————————-
Original text
The seed that Superstar sowed inside me….
Superstar Rajinikanth did so many things for their fans and the Indian society. The best thing he did it for me was to make me move towards spirituality. We all can recall the Rajini 25 Event celebrated in Taramani, Chennai few years ago. Superstar Rajinikanth revealed a key message on truth during his speech.
He said that people talked about him, people said that he had achieved so many things in his life. He uttered it in the following way “Let me reveal the truth behind my success!” He continued, “I have been doing meditation for 30 years.”
That one sentence had acted as a spark for my life. Next day morning, I talked to my Guruji, Mr. Lena Tamilvan (editor for Kalkandu and sub- editor for Kumudam) and asked about our Superstar’s golden words since Lena Sir and Superstar Rajini were very good friends. Lena said, “Saha, whatever Rajini said, is true.” He also mentioned, “I am also doing meditation for 20 years.” That message threw me into action mode. I requested him to help me embark upon meditation right away. He gave me the details of Maharishi Mahesh Yogi’s TM meditation. I joined the course the same week and started practising different meditation techniques and I have continued till today.
Why do I want to share this message with every one?
After starting doing meditation, I realized that mediation is the “Torch Light” in a person’s life. Today, that I have achieved a few laurels or inspired few people, it is all because of meditation and strong inspiration set by our Superstar. I could publish seven books so far all because of the seed Rajinikanth sowed inside me.
Finally, I am marching towards my self realization, the Inner journey… my gratitude to all my masters…..with all your blessings, I am sure, I will achieve self realization before leaving this body…
Saha Nathan
www.thenewbeginngnow.com
பயனுள்ள தகவல் ..நன்றி சுந்தர்ஜி !
தலைவர் வழியை பின்பற்றி தியானம் செய்ய துவங்கியதோடு மட்டுமில்லாமல், அதை தொடர்ந்து கடைபிடித்து வருவது பாராட்டுக்குரியது.
-
ஸ்கூல் படிக்கும்போது ஸ்கூல்ல சொல்லி கொடுத்தபடி தியானம் செய்ததுண்டு. அது சரியான முறைதானான்னு தெரியாட்டியும் பரீட்சை நேரங்களில் மனதை தெளிவாகவும், உற்சாகமாவும் வைக்க பெருமளவு உதவியிருக்கு. பிறகு தொடரா(முடியா)மல் போனதில் வருத்தமே
நிறைய பேருக்கு தியானம் செய்ய ஆரம்பித்து தொடராமல் போன அனுபவம் இருக்கும்னு நினைக்கிறேன்.
மிக சரியாக சொன்னிர்கள் சுந்தர்
ஆம்!!! தலைவர் கூறியது மிகவும் சரியானதே!!!!! நான் சிறிய வயதிலிருந்து யோகாசனாஸ் & தியானம் போன்றவற்றை கற்று தேர்ந்தேன்!!!!! தியானம் என்பது கடலை விட ஆழமானது, மற்றும் பெரியது!!! எனக்கு ஆன்மீகத்தை பற்றி கொஞ்சம் தெரியும்!!! என்னை ஆன்மீக பாதையில் திருப்பியவர் என் தலைவர்!! என்னுடைய மானசீக குருவும் அவர் தான்!!! என்னை வழி நடத்தும் தலைவனாய், ஆன்மீகத்தில் குருவாய், உற்சாகப்படுத்துவதில் நல்ல கலைஞ்சனாய், அறிவுரை கூறும் தந்தையாய், ரசிகர்களின் மீது அன்பு காட்டும் தாயாய், ஒவ்வொரு நிமிடமும் நான் நினைத்து கொண்டிருக்கும் என் காதலாய் மற்றும் கலியுக கர்ணனாய் & என்றும் என்னுடைய மனித தெய்வமாய் விளங்குபவர் என் அண்ணன் அகில உலக சூப்பர் ஸ்டார்!!!!!!!!!!!!
சுந்தர் அண்ணா!!!! இரண்டாவது படம் அருமையிலும் அருமை!!!!! இறைவனின் அருளினால் உங்களின் சேவை வளரட்டும்!!!!
சுந்தர் ஜி…
நீங்கள் என் குருவாக இருந்து, எனக்கு தியானம் கற்று தர முடியுமா?
——————————————-
என் மேல ஏதாவது கோபம் என்றால் பேசி தீர்த்துக்கொள்ளலாம்.
அதை விட்டுட்டு இப்படி கலாய்க்கிறது நியாயமா கோபி ஜி ?
- சுந்தர்
ஜி
தியானம் ,இரு முனை கொண்ட கத்தி -சரியாக அளவாக செய்ய வேண்டும் சில நேரங்களில் நாம் விரும்பாத விளைவுகளை கொடுக்கலாம் .
தலைவரால் ஆன்மீகத்திற்கு திரும்பியவர்கள் ஏராளம் .பாபா அறிவிப்பிற்கு பின்பு -autobiography of an yogi-எனும் பரமஹம்ச யோகானந்த அவர்களின் புத்தகம் வாசிக்க கிடைத்தது ,பாபாவின் பல காட்சிகள் -இதில் வரும் உண்மை சம்பவங்கள் ,அந்த புத்தகம் வாழ்கையே மாற்ற வல்லது .
Before i also started and stopped, Meditation is really good for health and it will refresh our mind. So, Hereafter i will plan to continue….Thalaivar is always a great man…He proved so many times by the way of his life.
Thanks sundarji for this article…
Cheers,
Balaji
Dubai
பயனுள்ள பதிவு - நமது ரசிகர்கள் பலரும் தலைவரின் சொற்களை வேத வாக்காக மதிப்பவர்கள் - எனவே இந்த நல்ல செய்தியை பலரும் அறியும் வண்ணம் பதிவு செய்த சுந்தர்ஜி அவர்களுக்கு மிக்க நன்றி
Hai Sundar,
Thanks for the article…
even i am one of crores of fans who wanted to follow meditation in our thalaivar's footsteps….but couldnt continue for many reasons.
in 1999, thalaivar had come to coimbatore for some event and i was in college that time and went to the event…thats the first time i saw thalaivar…but from 500 metres away…in that event also, thalaivar was insisting on meditation, after that,i tried for few days and later couldnt continue…but now, after a long time, i am trying to start it again….
hope it will continue …
அட "நம்மை" போல் ஒருவன் இவர்………
-
@சுந்தர் அண்ணா
செய்தி மேல செய்தியா தந்து திக்கு முக்காட வச்சுட்டீங்க தம்பியண்ணா…..????!!!!
-
@Mrs.Krishnan, @DEEN_UK
-
ஏங்க……பொங்கல் அதுவுமா என் பெயரை இப்படியா "பொங்க" வைப்பது…….இப்பவே கண்ணைக் கட்டுதே……!
-
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்
@DEEN_UK
-
//யாருங்க அந்த நண்பர் தலைவர் புக் கைல வச்சுட்டு (blue jean) செம குத்து குத்திட்டு இருக்கிறார்?! பார்த்துங்கன்னா ! நாக்கு கடிச்சு வெளில வந்துட போகுது!//
-
அவரு இன்னொரு முரட்டு பக்தர் ஜி…என்னுடைய நெருங்கிய நண்பர்……
@Mrs.Krishnan
-
//@DEEN_UK-மாதர் சங்க தலைவியோட சேர்ந்து உங்களுக்கும் லொள்ளு கூடிப் போச்சு!! அக்காவும் தம்பியும் சேர்ந்து ஓவர் லொள்ளு பண்றீங்க! //
-
அக்கா….பாருங்கக்கா….நீங்க இல்லாத நேரமா பார்த்து என்ன மிரட்டுறாங்க…..
Sundar,
Check this…
http://movies.sulekha.com/tamil/endhiran/events/e...
அண்ணா, இதை பார்த்தீங்களா… ?
— http://kalakkalcinema.com/tamil_events_list.php?i...
— http://kalakkalcinema.com/tamil_events_list.php?i...
நீங்க தானே இதை கொடுத்தது?
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்
———————————————————
Yes.
- Sundar
"தியானம்" ஒரு அற்புதமான விஷயம். இதை வெளியிட்டு எல்லோருடைய மதிப்பையும் பெற்றுவிட்டீர்கள். உங்களுக்கு தியானத்தினால் ஏற்படும் நன்மைகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
//napoleon
January 19, 2011 at 8:02 pm
“தியானம்” ஒரு அற்புதமான விஷயம். இதை வெளியிட்டு எல்லோருடைய மதிப்பையும் பெற்றுவிட்டீர்கள். உங்களுக்கு தியானத்தினால் ஏற்படும் நன்மைகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்//
சுந்தர் ஜி… நான் கேட்டா சொல்ல மாட்டீங்க… இப்போ, நெப்போலியன் கேக்கறார்… சொல்லுங்க…
எப்போதிலிருந்து தியானம் செய்ய ஆரம்பித்தீர்கள்?
தியானம் செய்ய ஏற்ற இடம் எது?
உங்கள் சிஷ்யைகள் / சிஷ்யர்கள் மொத்தம் எவ்வளவு பேர்?
உங்கள் ஆசிரமம் எங்கு உள்ளது?
இனி உங்களை சுந்தர் குருஜி என்று அழைக்கலாமா?
Idhu Sathiyamaana onru ……enadhu anubavamum idhai poladhaan …naan ipodhu ART of living enra iyakathin moolam Pranayama , sudarsana kriya mmatrum dhyanam payindru …ipodhu nalla palangalai petru ullen …..Nichayam edhaavadhu muraiyil idhai ellarum seyya vendum …Thanlaivar vazhie sariyaana vazhi …kadamai …aanmeegam matrum manidha neyam ……
சூப்பர் மேட்டர் இது சுந்தர்ஜி..சரி நம்மளும் follow பண்ணலாமேன்னு ரெண்டு மூன்று தடவை கண்ணை
பொத்திட்டு ,மனசை கண்ட்ரோல் பண்ணி பார்த்தேன்! ஊஹும்….முடியல..! மற்ற நேரத்தை விட,கண்ணை பொத்தி கண்ட்ரோல் பண்ணும் நேரம் தான்..உலகம் முழுதும் சுத்தி வந்துடுறேன்! எல்லா எழவும் அப்போ தான் கண் முன்னால நின்னு '' உனகெல்லாம் தியானம் தேவையா..போடா போ,வேற வேலைய பாரு..!''நு டான்ஸ் ஆடி நக்கல் பண்ணுதுங்க! இதெல்லாம் நமக்கு தூரம் !
@விஜய் ஆனந்த் ..
///''அக்கா….பாருங்கக்கா….நீங்க இல்லாத நேரமா பார்த்து என்ன மிரட்டுறாங்க…..''http:///
ஆஹா ..ஏனுங்க தலைவிட்ட போட்டு விட்டீங்க..?! லண்டன் கு பார்சல்ல ஆட்டோ அனுப்பிடுவாங்களே..!
/R. Gopi:சுந்தர் ஜி…
நீங்கள் என் குருவாக இருந்து,
எனக்கு தியானம் கற்று தர
முடியுமா ?/
-
சுந்தர் அண்ணா, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குருதட்சணையா ஒரு சத்தியம் வாங்கிடுங்கண்ணா. இனிமே
எடக்குமடக்கான கேள்வி கேட்க கூடாதுன்னு.
each and every person it should must dhiyanam.
நானும் இனிமேல் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து தியானம் பண்றதாக முடிவு எடுத்திருக்கேன்!!!
இந்த பதிவுக்கு மூல காரணமாக இருக்கும் என் தலைவனுக்கும், இதை கடைபிடித்து வெற்றி கண்டு பின்னர் அதன் மூல காரணத்தை அனைவருக்கும் சொன்ன சகாவுக்கும், அதனை நமக்கு செய்தியாக தந்த சுந்தர்ஜிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல!!!
********
எல்லா புகழும் என் இறைவனுக்கே(தலைவனுக்கே)!!!
********
DOT.
**சிட்டி**.
நண்பர் சிட்டி அவர்கள் விடியற்காலை 5 மணிக்கு எழுந்து தியானம் செய்ய சுந்தர் குருஜி அருள் புரிய வேண்டும்…