OnlySuperstar.com ஏன், எதற்கு, யாரால்?

லகின் எந்த பாகத்தில் இருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைப் பற்றியும் அவரது திரைப்படங்கள் மற்றும் பொது வாழ்வைப் பற்றியும் மிகைப்படுத்தப்படாத உண்மையான செய்திகளை அறிய விரும்பும் பல்வேறு தரப்பட்ட ரசிகர்களின் சேவைக்காக தொடங்கப்பட்ட வலைத்தளம் OnlySuperstar.com இந்த வலைத்தளம், முற்றிலும் இலவசமான முயற்சி ஆகும்.

இந்த வலைத்தளம், ரஜினி அவர்களைப் பற்றிய செய்திகளை பகிர்ந்துகொள்ள தொடங்கப்பட்டு, இப்போது மென்மேலும் வளர்ச்சி பெற்று, வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் அனைவருக்கும் ஒரு உந்துதலாய் இருக்கும் வகையில் நடத்தப்படுகிறது.

இன்று திரைத்துறையில் சாதித்தவர்களையும், மேலும் மற்ற பல துறைகளில் சாதித்தவர்களையும் பேட்டி கண்டு, அவர்கள் சாதிக்க உறுதுணையாக இருந்த பல நல்ல கொள்கைகளை வெளிகொணர்ந்து சாமானியனையும் சாதிக்க வைக்கும் தளமாக விளங்குகின்றது.

தனியார் நிறுவனம் ஒன்றில் சீனியர் கிராஃபிக் டிசைனராகப் பணிபுரிந்து வரும்
சுந்தர் என்பவரின் முயற்சியால் உருவாக்கப்பட்டு அவருடைய நண்பர்கள் சிலரின் நல்லாதரவோடு இயங்கும் இத்தளம் அனைத்து  இணையதள ரஜினி ரசிகர்களின் வரவேற்பையும் பல்துறை சாதனையாளர்களின் வரவேற்பையும் பெற்று உள்ளது.

(இணையதள ரஜினி ரசிகர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான சுந்தர் இதற்க்கு முன்பு இணையங்களில் ரஜினி அவர்களை பற்றிய செய்திகளை, கட்டுரைகளை, திரைப்படத்தின் Box office Records உள்ளிட்டவைகளை தந்திருக்கிறார். யாஹூ குரூப் ரசிகர்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக சுந்தர் பரிச்சயமானவர்.)

ஊடகத்துடன் (MEDIA) நல்ல நட்புறவு கொண்டிருக்கும் இந்த தளம், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைப் பற்றியும் அவரது படங்களைப் பற்றியும் வெளியாகும் பல நல்ல செய்திகளுக்கு ஊற்றாக திகழ்ந்து வருகிறது.

ரஜினி அவர்களை பற்றிய செய்திகளை தவிர தன்னம்பிக்கையை புத்துணர்ச்சியுடன் அளிக்கும் வகையில் சாதித்தவர்களின் பேட்டிகளும், அவர்களின் கொள்கைகளும், அவர்கள் வாழ்ந்த வாழ்கை பயணத்தையும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தனிபிரிவாக  “ரோல் மாடல்” என்ற தலைப்பில் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தளம் விரைவில் 4 ஆண்டுகளை பூர்த்தி செய்து 5 வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது.

இந்த தளத்திற்கான செய்திகளை சேகரிப்பது, புகைப்படங்களை பெறுவது மற்றும் எழுதுவது முழுக்க முழுக்க சுந்தர் என்கிற தனி நபராலே மட்டுமே செய்யப்படுகிறது. இந்த வெப் சைட்டிற்கான பராமரிப்பு செலவு உட்பட அனைத்து செலவுகளும் சுந்தர் மற்றும் அவரின் ஒரு சிறு நண்பர் குழாம் மூலமே மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு செய்யப்பட்டு வருகிறது.

எந்த விதமான விளம்பரங்களோ அல்லது வியாபார நோக்கமோ இல்லாமல், இணைய தள ரஜினி ரசிகர்களின் சேவைக்காகவும் , மற்றும் சாதிக்க துடிக்கும் சாமான்யர்களுக்கு மட்டுமே முழு மனதுடன் நடத்தப்படுவதால், உலகம் முழுவதிலுமிருந்து தினமும் பல ஆயிரம் வருகையாளர்களுடன் மாபெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைப் பற்றிய சிறிய விஷயங்களை பெரிதுபடுத்தி பரபரப்பு ஏற்படுத்தும் ஊடகங்களுக்கு மத்தியில் உண்மையான தகவல்களை வெளியிடவும், ரசிகர்கள் கருத்துக்களை ஆக்கபூர்வமான முறையில் பரிமாறிக்கொள்ளவும் பெரும் முயற்சி இந்த தளம் எடுத்து வருகிறது.

இந்தத் தளம் ரஜினி அவர்களின் மீதுள்ள அன்பினால், எங்களின் சுய விருப்பத்தினால் தொடங்கப்பட்டதேயன்றி இதன் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் திரு.ரஜினி அவர்களுக்கோ அவரது குடும்பத்தினருக்கோ, நண்பர்களுக்கோ எந்த வகையிலும் தொடர்பு இல்லை. இதில் வெளியாகும் கருத்துக்கள் அவர்களது கருத்துக்களும் அல்ல.

Founder & Editor : Sundar
Mobile : 9840169215 | E-mail : simplesundar@gmail.com

—————————————————————————————————————————
இத்தள ஆசிரியரின் சமீபத்திய முயற்சி ஆன்மீக மற்றும் சுய முன்னேற்ற கருத்துக்களை வலியுறுத்தும் www.rightmantra.com என்னும் புதிய தளமாகும். வருகை தாருங்கள்! வளம் பெறுங்கள்!!
—————————————————————————————————————————

[END]

Lingual Support by India Fascinates